சிஏஏ, என்ஆர்சி.,க்கு ஆதரவளித்தது எனது முடிவா?: உத்தவ் பதில்

Updated : பிப் 24, 2020 | Added : பிப் 24, 2020 | கருத்துகள் (22)
Share
Advertisement
CAA, NRC, UddhavThackeray, Maharashtra, Congress, NCP, ShivSena, மஹாராஷ்டிரா, முதல்வர், உத்தவ் தாக்கரே, சிஏஏ, குடியுரிமை சட்டம், என்ஆர்சி, கூட்டணி, கட்சிகள், காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ்

இந்த செய்தியை கேட்க

மும்பை: சிஏஏ., என்ஆர்சி.,யால் பாதிப்பில்லை என தான் கூறிய கருத்து கூட்டணி கட்சிகளுடன் சேர்ந்து எடுக்கப்பட்ட முடிவு என சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார்.

மஹாராஷ்டிராவில் காங்., தேசியவாத காங்., கட்சிகளுடன் கூட்டணி அமைத்து சிவசேனா ஆட்சியமைத்துள்ளது. மத்திய அரசு கொண்டு வந்த குடியுரிமை திருத்த சட்டம் (சிஏஏ), தேசிய குடிமக்கள் பதிவேடு (என்ஆர்சி), தேசிய மக்கள்தொகை பதிவேடு (என்பிஆர்) ஆகியவற்றை காங்., உள்ளிட்ட கட்சிகள் எதிர்த்து வருகின்றன. சிவசேனா முதலில் ஆதரித்தாலும், பிறகு அனைத்து மத மக்களும் பாதிக்கப்படுவார்கள் என எதிர்ப்பு தெரிவித்தது.

இந்நிலையில், சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே முதல்வராக பொறுப்பேற்று முதல் முறையாக பிரதமர் மோடியை சந்தித்தார். இந்த சந்திப்புக்கு பின் பேசிய அவர், சிஏஏ மற்றும் என்ஆர்சி பற்றி யாரும் பயப்பட தேவையில்லை எனவும், அது பற்றி பிரதமருடன் ஆலோசித்து விட்டதாகவும் கூறினார்.


latest tamil news


சிவசேனா இப்படி மாறி மாறி முடிவெடுப்பதால் கூட்டணி கட்சிகளிடையே குழப்பம் ஏற்பட்டது. இது குறித்து உத்தவ் கூறியதாவது: இந்த விவகாரத்தில் என்னுடைய நிலையை தெளிவுப்படுத்திவிட்டேன். கூட்டணி கட்சிகளுடனும் இது தொடர்பாக ஆலோசித்த பின்பே, முடிவை தெரிவித்தேன். மஹா.,வில் இதனை அமல்படுத்துவதற்கு உள்ள சிக்கல்கள் குறித்து மூன்று கட்சிகளை (காங்., தேசியவாத காங்., சிவசேனா) சேர்ந்த மூத்த உறுப்பினர்கள் கலந்து ஆலோசிக்கப்போம். இவ்வாறு அவர் கூறினார்.

உத்தவ்வின் இந்த பதிலால், சிஏஏ.,க்கு ஆதரவளிக்க காங்., சம்மதித்தது தெரியவந்துள்ளது. இதனால், சிஏஏ விவகாரத்தில் மஹா.,வில் ஒருவிதமாகவும் மற்ற மாநிலங்களில் ஒருவிதமாகவும் காங்., இருப்பதாக விமர்சனம் எழுந்துள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (22)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Loganathan Kuttuva - Madurai,இந்தியா
24-பிப்-202017:19:10 IST Report Abuse
Loganathan Kuttuva சிந்தூர் காவி உடை இல்லை.
Rate this:
Cancel
konanki - Chennai,இந்தியா
24-பிப்-202016:10:59 IST Report Abuse
konanki காங்கிரஸ் கட்சி CAA NPR NRC ஏற்கிறது. ப சிதம்பரம் உள் துறை அமைச்சர் ஆக இருந்த போது அப்போதைய ஜனாதிபதி பிரிதிபா பாட்டில் NPR விண்ணப்பம் பூர்த்தி செய்து குடுத்த காணொலி பொது வெளியில் உள்ளது . மாநில கட்சிகள் திமுக திரிணமுல் கம்யூனிஸ்ட் ஆகியவை சிறுபான்மை ஓட்டு குறி வைத்து CAA NPR NRC எதிர்க்கிறது. 2021 ல் தமிழ் நாடு மேற்கு வங்காளம் மாநில தேர்தல் வருகிறது. இந்த தேர்தலில் சிறுபான்மை மக்கள் ஓட்டு வாங்க இதை திமுக திரிணமுல் கம்யுனிஸ்ட்கள் எதிர்க்கின்றன. ஆனால் முக்கியமான விஷயம் கேஜ்ரிவால் CAA NPR NRC எதிர்ப்பு தெரிவிக்க வில்லை ஆனால் தேர்தலில் ஜெயித்து விட்டார்
Rate this:
Cancel
24-பிப்-202013:35:12 IST Report Abuse
Janarthanan (குடும்ப ஆட்சிக்கு முடிவுரை எழுத வேண்டும்) காங்கிரஸ் ncp இவரை விட்டா வேற வழியில்லை, பிஜேபி மறுபடியும் வந்த அவர்களை துடைத்து எடுத்து விடுவார்கள் என்று நல்லா தெரியும் ஆகவே எல்லாத்தையும் மூடி கொண்டு இருப்பது அவர்களின் காலத்தின் கட்டாயம்? பிஜேபிக்கு ஆப்பு வைக்கிரேன் தனுக்கு தானே ஆப்பு வைத்து கொண்டது அந்த கூட்டம் ??
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X