பொது செய்தி

இந்தியா

டிரம்ப் திறந்து வைக்கும் பிரமாண்ட மைதானம்: 10 அம்சங்கள்

Updated : பிப் 24, 2020 | Added : பிப் 24, 2020 | கருத்துகள் (17)
Share
Advertisement

இந்த செய்தியை கேட்க

புதுடில்லி : ஆமதாபாத்தில் அமைக்கப்பட்டுள்ள உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானமான மோடிரா (Motera)மைதானத்தை அமெரிக்க அதிபர் டிரம்ப் இன்று திறந்து வைக்கிறார். இந்த மைதானத்தில் பிரதமர் மோடி யுடன் இணைந்து, நமஸ்தே டிரம்ப் என்ற நிகழ்ச்சியில் டிரம்ப் உரையாற்றுகிறார்.latest tamil news


டிரம்ப் திறந்து வைக்க உள்ள மோடிரா மைதானத்தின் சிறப்பம்சங்கள் :

1. இந்த மைதானம் ஒரு லட்சத்து 10,000 பேர் அமர கூடியது. இதுவரை ஆஸ்திரேலியாவின் மெல்பேர்ன் நகரில் உள்ள கிரிக்கெட் மைதானம் (95,000 பேர் அமரும் வசதி) தான் உலகின் மிகப் பெரிய மைதானமாக கருதப்பட்டு வந்தது. இதற்கு முன் 49,000 பேர் அமரும் வகையிலான மைதானத்தை இடித்து விட்டு, அதே இடத்தில் இந்த பிரம்மாண்ட மைதானம் கட்டப்பட்டுள்ளது.
2. ஆஸ்திரேலியாவை சேர்ந்த நிறுவனத்தால் இந்த பிரம்மாண்ட மைதானம் அமைக்கப்பட்டுள்ளது. பழைய மோடிரா மைதானம் பல சாதனைகளை உள்ளடக்கியதாகும். கவாஸ்வர் டெஸ்ட் போட்டிகளில் 10,000 ரன்களை கடந்தது இந்த மைதானத்தில் தான். கபில் தேவ், டெஸ்ட் போட்டிகளில் அதிக விக்கெட்களை வீழ்த்திய சாதனையை படைத்ததும் இதே மைதானத்தில் தான்.


latest tamil news


3. புதிதாக கட்டப்பட்டுள்ள மோடிரா மைதானத்தில் 75 குளிர்சாதன வசதி கொண்ட கார்ப்பரேட் பாக்ஸ் உள்ளது.
4. 55 அறைகள், உள் மற்றும் வெளி விளையாட்டு அரங்குகள், உணவகங்கள், ஒலிம்பிக் தரத்திலான நீச்சல் குளங்கள், ஜிம்னாஸ்டிக் கூடம், 3 டி புரோஜெக்டர் தியேட்டர் ஆகியன உள்ளன.
5. புட் கோர்ட், மருத்துவ வசதி பகுதி ஆகியன உள்ளன.
6. கிரிக்கெட் அகாடமி அறைகள், உள்விளையாட்டு பயிற்சி கூடங்கள் உள்ளன.
7. பெவிலியன், உயர் தொழில்நுட்ப வசதி கொண்ட மீடியா பாக்ஸ், எல்இடி விளக்குகள் வசதிகள் கொண்டு அமைக்கப்பட்டுள்ளது.


latest tamil news


8. இந்த மைதானத்தில் 3000 கார்கள், 10,000 இரு சக்கர வாகனங்கள் நிறுத்தும் அளவிற்கு வசதி கொண்ட மிகப் பெரிய பார்க்கிங் பகுதி உள்ளது.
9. இந்த மைதானத்தில் கிரிக்கெட் மைதானங்களுடன் கூடுதலாக கால்பந்து, ஹாக்கி, கூடைப்பந்து, கபடி, குத்துச்சண்டை, டென்னிஸ், ஓட்டப் போட்டி உள்ளிட்ட பல விளையாட்டு வசதிகளும் உள்ளன.
10. இந்த மைதானம் ஆமதாபாத் மெட்ரோவுடன் இணைக்கப்பட்டுள்ளது. தனி வாகனங்களில் செல்ல விரும்பாதவர்கள், மெட்ரோவை பயன்படுத்திக் கொள்ளலாம்.

அமெரிக்காவில் ஒரு லட்சம் பேர் அமரும் வகையிலான மைதானங்கள் ஓரிரண்டு தான் இருக்கின்றன. எனவே மோடிரா மைதானத்தை டிரம்ப் ஆச்சரியமாக கருதுகிறார்.இந்த மைதானம் அரசியல் காரணங்களுக்காக பயன்படுத்தப்பட மாட்டாது.

Advertisement
வாசகர் கருத்து (17)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Krish - Chennai ,இந்தியா
26-பிப்-202007:20:13 IST Report Abuse
Krish நன்றாக இருக்கிறது. சிட்னி parramatta ஸ்டேடியம் மாதிரி வெளியில் தெரிகிறது. அளவில் மட்டும் பெரிது. BCCI பணம் நிறைய இருப்பதால் வாடகை மூலம் எளிதில் மீது விடுவார்கள். Olympic இந்தியாவிற்கு எப்போ வரும் ??
Rate this:
Share this comment
Cancel
Thiagarajan Kodandaraman - Madurai,இந்தியா
24-பிப்-202017:06:58 IST Report Abuse
Thiagarajan Kodandaraman மோடி ட்ரம்பின் நல்லுறவின் அடையாளம்
Rate this:
Share this comment
Cancel
Ab Cd - Dammam,சவுதி அரேபியா
24-பிப்-202013:56:08 IST Report Abuse
Ab Cd ஆஸ்திரேலியாவை சேர்ந்த நிறுவனத்தால் இந்த பிரம்மாண்ட மைதானம் அமைக்கப்பட்டுள்ளது, அதை டிரம்ப் ஆல் திறந்து வைப்பது தான் டிஜிட்டல் இந்தியா, மேக் இன் இந்தியா
Rate this:
Share this comment
Yaro Oruvan - DUBAI,ஐக்கிய அரபு நாடுகள்
24-பிப்-202016:33:24 IST Report Abuse
Yaro Oruvanவழக்கம்போல கருக ஆரம்பிச்சுடுத்து... எஞ்சாய்...
Rate this:
Share this comment
Chowkidar NandaIndia - Vadodara,இந்தியா
24-பிப்-202019:15:52 IST Report Abuse
Chowkidar NandaIndiaஇந்திய தேசிய கான்க்ராஸ் கட்சிக்கு இத்தாலி ஆட்கள் தலைவர்கள் ஆனதுபோல் என்று ஒருவேளை சொல்ல வருகிறாரோ...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X