பொது செய்தி

இந்தியா

இந்தியா வந்த டிரம்ப்: ஆரத்தழுவி வரவேற்ற மோடி

Updated : பிப் 24, 2020 | Added : பிப் 24, 2020 | கருத்துகள் (26)
Share
Advertisement

இந்த செய்தியை கேட்க

ஆமதாபாத் : 2 நாள் பயணமாக இந்தியா வந்துள்ள அமெரிக்க அதிபர் டிரம்ப், தனி விமானம் மூலம் ஆமதாபாத் சர்தார் வல்லபாய் பட்டேல் விமானம் நிலையத்திற்கு காலை 11.40 மணிக்கு வந்தடைந்தார். டிரம்ப்பை கட்டிப்பிடித்து மோடி வரவேற்றார்.



latest tamil news



முதல் முறையாக இந்தியா வரும் அதிபர் டிரம்ப் மற்றும் அவரது குடும்பத்தினரை ஆமதாபாத் விமான நிலையத்தில் பிரதமர் மோடி, குஜராத் முதல்வர் ரூபானி ஆகியோர் நேரடியாக சென்று, பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். டிரம்ப்புடன் 12 பிரதிநிதிகள் குழுவும் இந்தியா வந்துள்ளது. விமான நிலையத்தில் இருந்து நேரடியாக, சாலை மார்க்கமாக சபர்மதி ஆசிரமத்திற்கு டிரம்ப் செல்ல உள்ளார். அவருடன் பிரதமர் மோடியும் செல்ல உள்ளார். பிறகு டிரம்ப் மற்றும் மோடி ஆகியோர் சுமார் 22 கி.மீ., பயணித்து மொடிரா கிரிக்கெட் மைதானத்திற்கு செல்ல உள்ளனர். அங்கு நடைபெறும் நமஸ்தே டிரம்ப் நிகழ்ச்சியில் இரு நாட்டு தலைவர்களும் உரையாற்ற உள்ளனர்.


latest tamil news



டிரம்ப்பை வரவேற்பதற்கு முன், அமெரிக்க பிரதிநிதிகள் குழுவில் இடம்பெற்றுள்ள டிரம்ப்பின் மகள் இவங்கா டிரம்ப்பை மோடி கைகுலுக்கி வரவேற்றார். டிரம்ப் கறுப்பு நிற உடையிலும், அவரது மனைவி மெலினா வெள்ளை நிற உடையிலும் வந்தனர். பாரம்பரிய இசை மற்றும் நடனத்துடன் டிரம்ப் குடும்பத்தினருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.

Advertisement




வாசகர் கருத்து (26)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Yaro Oruvan - DUBAI,ஐக்கிய அரபு நாடுகள்
24-பிப்-202015:20:07 IST Report Abuse
Yaro Oruvan வெத்துக்கொடி கிட்ட கருகுற வாசம் ஜாஸ்தியா இருக்கு... நீங்க எந்த பால் போட்டாலும் அது நோ பால்தான்
Rate this:
Cancel
Vijay - Bangalore,இந்தியா
24-பிப்-202015:11:35 IST Report Abuse
Vijay சோனியாவால் ஏன் பிரதமர் ஆக முடியவில்லை ?? அப்போ குடியுரிமை சட்டத்தால் ராகுலும் பிரியங்காவும் இந்த ஜென்மத்துக்கு பிரதமர் ஆக முடியாது .. அதனால் தான் குடியுரிமை சட்டத்தை எதிர்க்குறோம் ..
Rate this:
24-பிப்-202015:44:10 IST Report Abuse
VIJAIANNeenga murosolli padikaravar pola😂😂😂😂...
Rate this:
வெற்றிக்கொடிகட்டு - -மதராஸ்:-),இந்தியா
24-பிப்-202019:02:55 IST Report Abuse
வெற்றிக்கொடிகட்டு இல்லை துக்ளக் அக்கிளில் வைத்து இருப்பவர்...
Rate this:
வெற்றிக்கொடிகட்டு - -மதராஸ்:-),இந்தியா
24-பிப்-202019:05:25 IST Report Abuse
வெற்றிக்கொடிகட்டு கோழை வெட்கம் இல்லாமல் என் பெயரில், வீரன் என்றால் நேரடியா மோது...
Rate this:
Cancel
Sivagiri - chennai,இந்தியா
24-பிப்-202014:01:48 IST Report Abuse
Sivagiri எதோ சைட்ல சங்கு ஊதினா மாதிரி தெரிஞ்சுது???
Rate this:
24-பிப்-202015:29:49 IST Report Abuse
அண்ணாமலை ஜெயராமன்காங்கிரஸிற்கு சங்கு....
Rate this:
24-பிப்-202015:30:19 IST Report Abuse
அண்ணாமலை ஜெயராமன்காங்கிரஸிற்கு தான் சங்கு ஊதினார்கள்....
Rate this:
Chennai B.S - Chennai,இந்தியா
24-பிப்-202023:20:53 IST Report Abuse
Chennai B.Sபாக்கத்தானே போகிறோம் சங்கு யாருக்கென்று...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X