ராட்டையில் நூல் நூற்ற டிரம்ப் - மெலனியா| Dinamalar

பொது செய்தி

இந்தியா

ராட்டையில் நூல் நூற்ற டிரம்ப் - மெலனியா

Updated : பிப் 24, 2020 | Added : பிப் 24, 2020 | கருத்துகள் (1)
Share

இந்த செய்தியை கேட்க

ஆமதாபாத் : இந்தியா வந்துள்ள அமெரிக்க அதிபர் டிரம்ப், தனது மனைவி மெலினாவுடன் சபர்மதி ஆசிரமத்திற்கு சென்றார்.



latest tamil news


சபர்மதி ஆசிரம நிர்வாகிகள் டிரம்ப் மற்றம் மெலனியாவிற்கு கதர் துண்டு அணிவித்து வரவேற்றனர். பிறகு மகாத்மா காந்தி குறித்தும், சபர்மதி ஆசிரமத்தின் சிறப்பு குறித்தும் பிரதமர் மோடி, டிரம்ப் மற்றும் மெலனியாவிற்கு எடுத்துரைத்தார். அங்கிருந்த மகாத்மா காந்தியில் படத்திற்கு டிரம்ப், நூலால் செய்யப்பட்ட மாலையை அணிவித்தார். பிறகு டிரம்ப் மற்றும் மெலனியா ராட்டையில் நூல் நூற்றனர். ராட்டையில் நூல் நூற்பது குறித்து ஆசிரம நிர்வாகிகள் விளக்கம் அளித்தனர்.


latest tamil news



latest tamil news



latest tamil news


தொடர்ந்து ஆசிரமத்தில் வைக்கப்பட்டுள்ள விருந்தினர் பதிவேட்டில் டிரம்ப் தனது வருகையை பதிவு செய்தார். பிறகு ஆசிரமத்தில் வைக்கப்பட்டிருந்த 3 குரங்குகளின் தத்துவம் குறித்து பிரதமர் மோடி, டிரம்ப்பிற்கு விளக்கினார். தொடர்ந்து சபர்மதி ஆசிரமத்தில் தனது வருகையை முடித்துக் கொண்டு, ஆமதாபாத்தில் உள்ள மோடிரா மைதானத்திற்கு புறப்பட்டு சென்றனர்.

சபர்மதி ஆசிரம விஜயம் குறித்து பதிவேட்டில், ‛‛இந்த அருமையா பயணத்துக்காக எனது நண்பர் மோடிக்கு நன்றி'' என்று எழுதினார் மோடி.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X