மலேசிய பிரதமர் மகாதீர் திடீர் ராஜினாமா

Added : பிப் 24, 2020
Share
Advertisement
MahadirMohamed, MalaysiaPM, Resigned, Malaysia, PM, மலேசியா, பிரதமர், மகாதீர், ராஜினாமா

கோலாலம்பூர்: மலேசிய பிரதமர் மகாதீர் முகமது திடீரென ராஜினாமா செய்துள்ளார். ராஜினாமா கடிதத்தை மன்னருக்கு அனுப்பியுள்ளார்.

மலேசியாவில் 2018ல் ஆட்சி மாற்றம் நிகழ்ந்து மகாதீர் முகமது பிரதமராக பொறுப்பேற்றார். இவர் சமீபகாலமாக இந்தியாவின் காஷ்மீர், சிஏஏ உள்ளிட்ட உள்நாட்டு விவகாரத்தில் தலையிட்டார். அவருக்கு இந்திய அரசு சார்பில் கண்டனம் தெரிவித்து மலேசியாவில் இருந்து பாமாயில் இறக்குமதியை நிறுத்தியது. அதேபோல், பாலஸ்தீன - இஸ்ரேல் விவகாரத்தில் அமெரிக்காவின் நிலைப்பாட்டையும் கண்டித்தார். இது போன்ற சூழ்நிலைகளுக்கு மத்தியில் அவருக்கு எதிராக மலேசிய பொருளாதார அமைச்சரான அஸ்மின் அலி தலைமையிலான அதிருப்தியாளர்கள் ஆலோசனை நடத்தினர். மேலும், துணைப் பிரதமர் வான் அஸீஸா வான் இஸ்மாயில், அன்வர் இப்ராஹிம் ஆகியோர் மலேசிய மாமன்னரை இன்று (பிப்.,24) பிற்பகலில் சந்திக்கவுள்ளதாக தகவல் வெளியானது.


latest tamil news


மறுபுறம், மகாதீரின் பெர்சாத்து கட்சி, யூ.எம்.என்.ஓ., கட்சி மற்றும் பி.ஏ.எஸ்., கட்சிகளுடன் சேர்ந்து புதிய ஆளும்கூட்டணியை உருவாக்க பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்நிலையில், இன்று (பிப்.,24) பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், மகாதீர் தனது ராஜினாமா கடிதத்தை மன்னரிடம் கொடுத்துள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. யூ.எம்.என்.ஓ., கட்சி தலைவராக இருந்த மகாதீர், 1981ல் இருந்து 2003 வரையில் பிரதமராக இருந்துள்ளார். பின்னர், அக்கட்சியில் இருந்து விலகி 2016ல் பெர்சாத்து கட்சியை தொடங்கி 2018ல் மீண்டும் பிரதமரானது குறிப்பிடத்தக்கது.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X