டிரம்ப்பிற்கு சபர்மதி ஆசிரமம் அளித்த பரிசு| Dinamalar

பொது செய்தி

இந்தியா

டிரம்ப்பிற்கு சபர்மதி ஆசிரமம் அளித்த பரிசு

Updated : பிப் 24, 2020 | Added : பிப் 24, 2020 | கருத்துகள் (3)
Share

இந்த செய்தியை கேட்க

ஆமதாபாத் : குஜராத்தில் உள்ள சபர்மதி ஆசிரமத்திற்கு சென்ற அமெரிக்க அதிபர் டிரம்ப், மகாத்மா காந்தியின் எளிய வாழ்க்கையை பாராட்டினார்.



latest tamil news



டிரம்ப்பின் வருகை குறித்து ஆசிரம நிர்வாகியான கார்த்திகேய சாராபாய் ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திடம் பேசுகையில், ஆசிரமத்திற்கு வருகை தந்தது குறித்து அமெரிக்க அதிபர் மகிழ்ச்சி தெரிவித்தார். இங்கிருந்து புறப்படும் போது, மிகவும் அமைதியாக உணர்ந்ததாக தெரிவித்தார். மேலும் மகாத்மா காந்தியின் எளிய வாழ்க்கை முறையை அவர் புகழ்ந்துரைத்தார். மகாத்மா காந்தியின் வாழ்க்கை வரலாறு, ராட்டை சக்கரம், மார்பிள் கற்களால் ஆன 3 குரங்குகளின் சிலை உள்ளிட்டவை அவருக்கு பரிசாக வழங்கப்பட்டன என்றார்.


latest tamil news



சபர்மதி ஆசிரமத்தில் ராட்டை சுற்றுவது மற்றும் மகாத்மா காந்தியின் சுதந்திர போராட்டம் குறித்து டிரம்ப்பின் மனைவி மெலானியா மிகவும் ஆர்வமாக கேட்டறிந்தார். காந்தியின் புகழ்பெற்ற பாடலான "ரகுபதி ராகவ ராஜா ராம்" என்ற பாடல் பின்னணியில் இசைக்கப்பட்டதை டிரம்ப் மற்றும் அவரது மனைவி மிகவும் ரசித்தனர்.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X