பொது செய்தி

தமிழ்நாடு

கொரானா அச்சம்! தங்கம் உச்சம்!!: சவரன் ரூ.33 ஆயிரத்தை தாண்டியது

Updated : பிப் 24, 2020 | Added : பிப் 24, 2020 | கருத்துகள் (3)
Share
Advertisement
GoldRate,

இந்த செய்தியை கேட்க

சென்னை:கொரோனா அச்சத்தால் பங்கு மார்க்கெட்டுகளில் செய்யப்படும் முதலீடுகள் குறைந்து, தங்கத்தின் மீது முதலீடுகள் செய்யப்படுவதால் தங்கம் விலை வரலாற்றில் இல்லாத அளவுக்கு புதிய உச்சமாக சவரன் ரூ.33 ஆயிரத்தை தாண்டியது. இன்று(பிப்., 24) ஒரேநாளில் சவரன் ரூ.752 உயர்ந்துள்ளது.

சென்னை, தங்கம் - வெள்ளி சந்தையில் மாலைநேர நிலவரப்படி, 22காரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒருகிராம் ரூ.94 உயர்ந்து ரூ.4166க்கும், சவரன் ரூ.752 உயர்ந்து ரூ.33,328க்கும், 24காரட் 10கிராம் தங்கத்தின் விலை ரூ.43,740க்கும் விற்பனையாகிறது.

வெள்ளியின் விலையும் உயர்ந்துள்ளது. ஒருகிராம் சில்லரை வெள்ளியின் விலை 90 காசுகள் உயர்ந்து ரூ.53,300க்கு விற்பனையாகிறது.


latest tamil news



விலை ஏற்றம் ஏன்?

கொரானா வைரஸ் பாதிப்பு காரணமாக உலகளவில் பொருளாதாரம் மந்த நிலையில் உள்ளது. இந்தியாவிலும் பங்குச்சந்தைகள் வீழ்ச்சி கண்டுள்ளன. இதன்காரணமாக தங்கத்தில் அதிகளவில் முதலீடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதனாலேயே தங்கம் விலை ஏற்றம் கண்டு வருவதாக சந்தை வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். இந்த விலை ஏற்றம் மேலும் சில நாட்கள் நீடிக்கும் எனவும் தெரிகிறது.

Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sri,India - India,இந்தியா
25-பிப்-202010:53:35 IST Report Abuse
 Sri,India இனிமேல் அரசு அதிகாரிகள் ,அரசு ஊழியர்களின் லஞ்சமும் ஏறும் .
Rate this:
Share this comment
Cancel
Dr. Suriya - Adis Ababa,எத்தியோப்பியா
24-பிப்-202017:21:31 IST Report Abuse
Dr. Suriya விலையேற்றம்தான் நடக்குதே தவிர இறங்க விடவே இல்லை என்பது தான் கசப்பான உண்மை. சரி கொனரோ வைரஸ் தாக்கம் குறைந்தவுடன் தங்கம் விலை குறையுமுன்னு யாராவது சத்தியம் செய்வார்களா....பாவம் ஏழைகள் மற்றும் நடுத்தர வர்க்கத்தினர்.
Rate this:
Share this comment
24-பிப்-202018:55:32 IST Report Abuse
Arunachalam, Chennaiஎல்லோரும் தான் பாவம். அது என்ன உங்கள் சிந்தனை?...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X