அரசியல் செய்தி

தமிழ்நாடு

ஆர்.எஸ்.பாரதியின் ஆணவக் கொழுப்பு: எடப்பாடி தாக்கு

Updated : பிப் 24, 2020 | Added : பிப் 24, 2020 | கருத்துகள் (52)
Share
Advertisement
TamilnaduCM, Palanisamy, RSBarathi, DMK, EPS, தமிழகம், முதல்வர், பழனிசாமி, இபிஎஸ், ஆர்எஸ் பாரதி, ஊடகங்கள், அவதூறு, பேச்சு

இந்த செய்தியை கேட்க

கோவை: ஊடகங்கள் மற்றும் தாழ்த்தப்பட்டவர்கள் குறித்து திமுக அமைப்பு செயலர் ஆர்.எஸ்.பாரதியின் பேச்சு ஆணவக் கொழுப்பு என முதல்வர் பழனிசாமி விமர்சித்துள்ளார்.

சமீபத்தில் திமுக அமைப்பு செயலர் ஆர்.எஸ்.பாரதி பேசுகையில், 'டிவி சேனல்கள் மும்பை விபசார விடுதிகள் போல் இயங்குகிறது. உயர்நீதிமன்றத்தில் ஆதி திராவிடர் உள்ளிட்ட பிரிவைச் சேர்ந்தவர்கள் நீதிபதியாகப் பதவி ஏற்றது, தி.மு.க., போட்ட பிச்சையில் தான். கோவில்களில் தி.மு.க.,வினர் போடும் காணிக்கை பணத்தில்தான், பூசாரிகளுக்கு வருமானம் கிடைக்கிறது' என, சர்ச்சைக்குரிய வகையில் பேசியிருந்தார்.

இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. இந்நிலையில், மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாள் கூட்டத்தில் பங்கேற்ற முதல்வர் பழனிசாமி கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசியதாவது:


latest tamil news


ஜெயலலிதா பிறந்தநாளை சிறப்பிக்கும் வகையில் மாநில பெண் குழந்தைகள் பாதுகாப்பு தினமாக அறிவித்து இன்று செயல்படுத்தப்பட்டது. தேசிய குற்ற ஆவண காப்பகம் வெளியிட்ட அறிக்கையின்படி, பெண்கள் பாதுகாப்பு மிகுந்த நகரமாக சென்னை, கோவை உள்ளது. நகரில் சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டு பாதுகாப்பு பலபடுத்தப்பட்டுள்ளதால், தமிழகத்தில் பெண்கள் அச்சமின்றி இரவு நேரங்களில் கூட வெளியே செல்ல முடியும். மக்கள் தொகை கணக்கெடுப்பு, என்பிஆர் ஆகியவை 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும். 2011ம் ஆண்டு திமுக தான் தமிழகத்தில் என்பிஆர்.,ஐ தொடங்கிவைத்தது.


latest tamil news


தமிழகத்தில் எந்த சிறுபான்மையினரும் அச்சப்பட தேவையில்லை. என்பிஆர் தொடர்பாக தேவையில்லாத அச்சத்தை உருவாக்குகின்றனர். ஆட்சிக்கு இடையூறு செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் தவறான செய்தியை பரப்புகின்றனர். பல்வேறு வளர்ச்சி திட்டங்களுக்கு நிதியை செலவிடுவதால் கடன் அதிகரித்துள்ளது. திமுக ஆட்சியில் கடன் குறைவாக இருந்ததாக அக்கட்சி தலைவர் ஸ்டாலின் பேசுகிறார். ஆனால், அப்போதைய விலைவாசியை விட, தற்போதைய விலைவாசி பலமடங்கு உயர்ந்துள்ளதால் மாநில அரசின் கடன் தொகையும் அதிகரித்துள்ளது.


latest tamil news


திமுக ரூ.1 லட்சம் கோடி கடன் வைத்தபோது வெள்ளை அறிக்கை வெளியிட்டதா? அவர்கள் வாங்கிய கடன் தொகைக்கு வட்டி கட்டி வருகிறோம். ஊடகங்கள் தொடர்பாக திமுக.,வின் ஆர்.எஸ்.பாரதி கீழ்த்தரமாக, வாய் கூசும் அளவிற்கு கொச்சையாக பேசினார். அவரை ஊடகங்கள் கண்டிக்கவில்லை. தாழ்த்தப்பட்டவர்கள் உயர்நீதிமன்ற நீதிபதியாக இருப்பது நாங்கள் போட்ட பிச்சை எனவும் பேசியுள்ளார். இதுபற்றி எந்த ஊடகமாவது செய்தி வெளியிட்டதா? ஆர்.எஸ்.பாரதியின் ஆணவக்கொழுப்பு மிகுந்த பேச்சினை கண்டித்து, மக்களுக்கு நல்லது செய்யக்கூடிய திட்டங்களை வெளியிட்டால் தான், இவர்களை போன்றோர் இதுபோல பேசமாட்டார்கள். இவ்வாறு பழனிசாமி பேசினார்.

Advertisement
வாசகர் கருத்து (52)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Girija - Chennai,இந்தியா
25-பிப்-202012:59:11 IST Report Abuse
Girija முதல்வர் மானநஷ்ட வழக்கை போட வேண்டும். நீதிபதிகள் மவுனம் காப்பது ஏன்? அரசுக்கு ஆலோசகர் போல் அறிவுரை சொல்லும் நீதிமன்றம் மவுனம் காப்பது ஏன்?
Rate this:
Cancel
ராஜவேலு ஏழுமலை - Gummidipoondi,இந்தியா
25-பிப்-202011:28:47 IST Report Abuse
ராஜவேலு ஏழுமலை எச் ராஜா இதைவிட கேவலமா பேசினது உங்க காதுல விழாலய. கண்ணு தெரியலையா?
Rate this:
Cancel
Ram - ottawa,கனடா
25-பிப்-202010:36:53 IST Report Abuse
Ram யார் ஊடகங்களை நடத்துகிறார்கள் ,
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X