டில்லி போராட்டத்தில் வன்முறை; பலி 4ஆக உயர்வு

Updated : பிப் 25, 2020 | Added : பிப் 24, 2020 | கருத்துகள் (145)
Share
Advertisement

இந்த செய்தியை கேட்க

புதுடில்லி: டில்லியில் சி.ஏ.ஏ.,போராட்டத்தில் இன்று (பிப்.24) வன்முறை வெடித்தது. இதில் கலவரக்காரர்களை கலைக்க போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தினர். வன்முறை கும்பல் நடத்திய தாக்குதலில் கோலக்பூரி தலைமை காவலர் ரத்தன்லால் பலியானார். மேலும் 10 போலீசார் உள்பட 30 பேர் காயமுற்றதாகவும், பலி எண்ணிக்கை 4 ஆக உயர்ந்திருப்பதாகவும் டில்லி வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.latest tamil newsகுடியுரிமை சட்டத்திற்கு எதிராக டில்லியில் ஷாகீன்பாக்கில் 71 நாட்களாக போராட்டம் நடந்து வருகிறது. நேற்று மாலை மவுஞ்பூர், ஜப்ராபூர் பகுதிகளில் லேசான வன்முறை வெடித்தது. போலீசார் கண்ணீர் புகை வீசி கூட்டத்தை கலைத்தனர்.
இந்நிலையில் இன்று டில்லி பஜன்பூரா பகுதியில் போலீசாருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. தொடர்ந்து போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தினர். வாகனங்களுக்கு வன்முறை கும்பல் தீ வைத்தது. இதனால் இங்கு பதட்டம் நிலவுகிறது. மேலும் வன்முறை பரவாமல் தடுக்க துணை ராணுவம் அழைக்கப்பட்டுள்ளனர். வன்முறையை கட்டுக்குள் வைக்க 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.


latest tamil newsகெஜ்ரிவால் கவலைடில்லி வன்முறை சம்பவம் தொடர்பாக முதல்வர் கெஜ்ரிவால் அவரது டுவிட்டரில் : டில்லியில் பல இடங்களில் வன்முறை நடந்து வருவதாக தகவல்கள் வருகின்றன. இது பெரும் கவலை அளிக்கிறது. கவர்னர் , உள்துறை அமைச்சர் அமைதியையும், மனித நேயத்தையும் நிலைநாட்டிட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.


பிரதமர் விரைகிறார்


அமெரிக்க அதிபர் டிரம்ப் வருகையால் பிரதமர் மோடி குஜராத்தில் இருந்து பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். இதற்கிடையில் டில்லி வன்முறை சம்பவம் அறிந்த பிரதமர் மோடி அவசரமாக டில்லி கிளம்பினார்.

Advertisement
வாசகர் கருத்து (145)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Fardhikan - Rajakambeeram,இந்தியா
25-பிப்-202017:03:17 IST Report Abuse
Fardhikan டெல்லி கலவரம் தூண்டிவிடப்படுகிறது
Rate this:
Cancel
siriyaar - avinashi,இந்தியா
25-பிப்-202007:33:59 IST Report Abuse
siriyaar நாளை டெல்லியில் கொடுக்கும் அடியைக் கண்டு தமிழ் நாட்டில் உள்ளவன் உச்சா போகவேண்டும் காவல் துறை இராணுவம் மக்கள் கூட்டு தர்ம அடி அவசியம். ஒரு காவலர் மரணத்திற்கு 100 பேரை சுட்டு தள்ள வேண்டும்.
Rate this:
Cancel
Ramasami Venkatesan - Chennai - now in Brisbane - Aus,இந்தியா
25-பிப்-202006:51:28 IST Report Abuse
Ramasami Venkatesan போராட்டத்தை தூண்டுபவர்களும், அதில் செயல்படுபவர்களும், நிச்சயமாக சட்டத்திற்கு புறம்பாக குடியேறினவர்களாகத்தான் (Illegal Immigrants) இருக்கவேண்டும். இதில் சந்தேகமில்லை. போராட்டத்தில் கைது செய்தவர்களை விடுவிக்கும்போது அவரது அடையாளச்சீட்டு, விலாசம் எல்லாம் விசாரித்து சரிபார்த்து அனுப்பினால் கறுப்பு ஆடு தானாகவே பிடிபடும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X