பொது செய்தி

இந்தியா

காதல் சின்னம் தாஜ்மகாலை கண்டு வியந்த டிரம்ப்

Updated : பிப் 24, 2020 | Added : பிப் 24, 2020 | கருத்துகள் (23)
Share
Advertisement
TrumpInIndia, TrumpIndiaVisit, TajMahal, Visit, Donald Trump, President, Melania, Agra, டிரம்ப், அமெரிக்க அதிபர், டொனால்ட் டிரம்ப், இந்தியா, வருகை, தாஜ்மகால், பார்வையிட்டார், மெலனியா

இந்த செய்தியை கேட்க

ஆக்ரா: அமெரிக்க அதிபர் டிரம்ப், ஆக்ராவில் உள்ள 'காதல் சின்னம்' தாஜ்மகாலை மனைவியுடன் பார்வையிட்டார்.


latest tamil news


இந்தியா வந்துள்ள அமெரிக்க அதிபர் டிரம்ப், ஆமதாபாத்தில் உள்ள சர்தார் படேல் மைதானத்தை திறந்துவைத்து ஒரு லட்சத்திற்கும் அதிகமான பார்வையாளர்களுக்கு மத்தியில் உரையாற்றினார். அதன்பின்னர், ஆக்ராவில் உள்ள உலக அதிசயங்களுள் ஒன்றான தாஜ்மகாலை பார்வையிட ஆமதாபாத்தில் இருந்து ஆக்ராவிற்கு புறப்பட்டார். ஆக்ரா விமானநிலையத்தில் டிரம்ப் மற்றும் அவரது மனைவி மெலனியாவை உத்தர பிரதேச கவர்னர் ஆனந்திபென் படேல், முதல்வர் யோகி ஆதித்யநாத் வரவேற்றனர்.


latest tamil news


விமான நிலையத்தில் 3000 நடனக்கலைஞர்கள் பங்கேற்ற மயிலாட்டம், பொய்க்கால் குதிரையாட்டம் உள்ளிட்ட பாரம்பரிய கலைநிகழ்ச்சிகளுடன் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் அங்கிருந்து தாஜ்மகாலை காண சென்றார். 10 கி.மீ., தூர பயணத்தில் 31 ஆயிரம் பள்ளி மாணவர்கள் வரவேற்றனர். ஆண்டுக்கு 80 லட்சம் சுற்றுலா பயணிகள் வந்து செல்லும் தாஜ்மகாலில் டிரம்ப் வருகையால் சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. டிரம்ப் மகள் இவாங்கா, மருமகன் ஜேரட் குஷ்னர் ஆகியோரும் தாஜ்மகாலை பார்வையிட்டனர்.


கையெழுத்துlatest tamil newsதாஜ்மகாலின் நுழைவில் உள்ள பதிவேட்டில் டிரம்ப் மற்றும் மெலனியா தங்களது வருகையை பதிவு செய்தனர். அந்த பதிவேட்டில், 'தாஜ்மகால் பிரமிப்பைத் தூண்டுகிறது, இந்திய கலாச்சாரத்தின் செழுமையான மற்றும் பல்வேறு கலாசார, காலங்களை கடந்து நிற்பதற்கு சான்று! நன்றி, இந்தியா,' என எழுதி கையொப்பமிட்டனர்.

Advertisement
வாசகர் கருத்து (23)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
NILAVAN - Tirunelvei,இந்தியா
25-பிப்-202014:35:39 IST Report Abuse
NILAVAN யோகி மோடி அமித்சா
Rate this:
Cancel
Anand - chennai,இந்தியா
25-பிப்-202013:13:03 IST Report Abuse
Anand வரலாற்றை மறைத்து புகழப்படும் இந்த மாதிரி கருமத்தை பற்றிய உண்மைகளை இந்திய மக்களுக்கு அறிய வைக்கும் நேரம் வந்துவிட்டது.
Rate this:
Cancel
Subramanian Arunachalam - CHENNAI,இந்தியா
25-பிப்-202007:32:57 IST Report Abuse
Subramanian Arunachalam இந்த தாஜ் மஹால் கட்டிடம் அமைத்த கலைஞர்களுக்கு சம்பளமாக கிடைத்தது என்னோவோ கசை அடிதான் . சிலர் கூற்று படி கட்டிடம் முடிந்த பின் அந்த கலைஞர்களின் கட்டை விரல் வெட்டப்பட்டது . ஏனென்றால் அவர்கள் இதை விட சிறப்பாக மற்றும் ஓர் கட்டிடம் கட்டிவிடக்கூடாது அடிமைகளின் இலவச உடல் உழைப்பு மற்றும் மக்களிடம் இருந்து கசக்கி பிடுங்கப்பட்ட வரிப்பணம் மூலம் ஒரு நினைவு சின்னமாக பளிங்கினால் ஆன ஒரு கல்லறை
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X