பயங்கரவாதத்தை வளர்க்கிறதா கேரளம்; பாக்., தோட்டாவால் சந்தேகம்

Updated : பிப் 24, 2020 | Added : பிப் 24, 2020 | கருத்துகள் (40)
Share
Advertisement

இந்த செய்தியை கேட்க

கொல்லம்: தமிழக - கேரளா எல்லையை ஒட்டிய, கொல்லம் மாவட்டத்தில், பாக்., முத்திரையுடன் துப்பாக்கி குண்டுகள் கைப்பற்றப்பட்டிருப்பது கேரளாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.latest tamil news


கேரள மாநிலம், கொல்லம் மாவட்டத்தின் குளத்துப்புழா பகுதியைச் சேர்ந்த இருவர், திருவனந்தபுரம் - தென்மலை நெடுஞ்சாலையை ஒட்டிய வனப் பகுதியில், ஒரு பிளாஸ்டிக் கவரை கண்டெடுத்தனர். அதில், ஒரு செய்தித்தாளில் பொதியப்பட்ட, 14 தோட்டாக்கள் இருந்துள்ளன. உடனடியாக போலீசாருக்கு தகவல் அளித்துள்ளனர்.


latest tamil news


போலீசார், தோட்டாக்களை ஆய்வுசெய்தனர். நீண்ட தூரம் சென்று இலக்கைத் தாக்கும், 7.62 மி.மீ., ரகத் தோட்டாக்கள் என்பதும், அவை வெளிநாட்டில் தயாரிக்கப்பட்டதும் கண்டுபிடிக்கப்பட்டது.அவற்றில் ஒரு தோட்டாவில், பாகிஸ்தான் ஆயுதத் தொழிற்சாலையைக் குறிக்கும் 'பிஓஎப்' என்ற முத்திரை இருந்துள்ளது. இதுகுறித்து ராணுவம் மற்றும் தேசிய புலனாய்வு முகமைக்கு கேரள போலீசார் தகவல் கொடுத்துள்ளனர்.சம்பவ இடத்துக்கு விரைந்த ராணுவ புலனாய்வுப் பிரிவு, குளத்துப்புழா வனப்பகுதியில் தீவிர தேடுதல் வேட்டையை நடத்தி வருகிறது. இரு நாட்களுக்கு சோதனைப் பணிகள் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


latest tamil newsபயங்கரவாதிகளின் சதி!

கேரள டி.ஜி.பி., லோக்நாத் பெகரா கூறுகையில், ''தோட்டாக்கள் கைப்பற்றியுள்ளது குறித்து மத்தியப் புலனாய்வு அமைப்புகளுக்குத் தகவல் கொடுத்திருக்கிறோம். அதேபோல், விசாரணைக்கு உதவும்படி அண்டை மாநில டி.ஜி.பி.,-களிடமும் பேசியிருக்கிறேன். விரைவில் தோட்டாக்களின் பின்னணி என்ன என்பது தெரியவரும். இந்த விவகாரத்தில், பயங்கரவாதிகளின் சதி இருக்கலாம் என சந்தேகிக்கிறோம்' என்று கூறியிருக்கிறார்.


12 ஆயிரம் தோட்டா மாயம்

திருவனந்தபுரம் போலீஸ் பட்டாலியனில் கடந்த 2013-18க்கு இடைப்பட்ட, ஐந்து ஆண்டுகளில், 25 ரைபிள்கள், 12 ஆயிரம் தோட்டாக்கள் மாயமானதாக, அம்மாநில தணிக்கைத் துறை குற்றம் சாட்டியுள்ளது. மேலும், அதே பட்டாலியனில், 300க்கும் மேற்பட்ட போலி தோட்டாக்கள் மீட்கப்பட்டுள்ளன.இந்நிலையில் வனப்பகுதியில் பாக்., முத்திரையிட்ட தோட்டா பறிமுதல் செய்யப்பட்டிருப்பது கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. 'முதல்வர் பினராயி விஜயன், பயங்கரவாதிகளுக்கு ஆதரவும் அடைக்கலமும் அளித்து வருகிறார். அதற்கு இந்த விவகாரமே சாட்சியாக இருக்கிறது. துப்பாக்கிகள் மாயமான விவகாரத்தையும், பாக்., தோட்டா கைப்பற்றப்பட்டதையும் மத்திய அரசு விசாரிக்க வேண்டும்' என, எதிர்க்கட்சியினர் சிலர் தெரிவித்து வருகின்றனர்.


latest tamil newsகேரளாவில் ஜனாதிபதி ஆட்சி!

கர்நாடக பா.ஜ., மூத்த தலைவர் ஷோபா கரண்ட்லேஜே, 'உடனடியாக கேரளாவில் ஜனாதிபதி ஆட்சியை கொண்டுவர வேண்டும்' என, தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில், 'கேரள போலீசின் ஆயுதக் களஞ்சியத்தில் தோட்டாக்கள் மற்றும் துப்பாக்கிகள் மாயமாகியுள்ளன. இப்போது, கொல்லத்தில் பாக்., தோட்டாக்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. கேரளாவில் பயங்கரவாதத் தொழிற்சாலை உருவாக்கியுள்ளதா? கேரளாவை உடனடியாக ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த வேண்டும். முதல்வர் பினராய் விஜயன் ராஜினாமா செய்ய வேண்டும்' எனப் பதிவிட்டுள்ளார்.

Advertisement
வாசகர் கருத்து (40)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Yaro Oruvan - DUBAI,ஐக்கிய அரபு நாடுகள்
25-பிப்-202012:12:33 IST Report Abuse
Yaro Oruvan ஹி ஹி.. ஒரு மார்க்கமாத்தான் திரியிறானுவ.. நடத்துங்கடா..
Rate this:
Share this comment
Cancel
Rajarajan - madurai,இந்தியா
25-பிப்-202011:36:21 IST Report Abuse
Rajarajan இதப்பத்தி வின்சி சொடலை என்ன சொல்றாங்க? இன்னிக்கு கேரளாவுல ஹிந்துக்கள் சொற்பம். இது இஸ்லாமியர்களின் கிருத்துவர்களின் கைகளுக்கு போயி ரொம்ப வருசமாச்சு. அமைதி எங்கேயிருக்கும்? பக்கத்து நாட்டு தீவிரவாதிகளுக்கு கெஸ்ட்ஹௌசா கேரளாவுல இருக்குற பயங்கரவாதிகள் அந்த மாநிலத்த பயன்படுத்திகிட்டு இருக்கானுங்க. மத்திய அரசு ஒடனே கவனிச்சா மட்டும்தான் இதை கஷ்டப்பட்டு கட்டுப்படுத்த முடியும்.
Rate this:
Share this comment
Cancel
Ram - ottawa,கனடா
25-பிப்-202010:40:48 IST Report Abuse
Ram kerala mudalamaichare theeviravathipol than nadanthukolkirar
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X