பூமி தட்டையானது என நிரூபிக்க முயற்சித்த வீரர் மரணம்

Updated : பிப் 24, 2020 | Added : பிப் 24, 2020 | கருத்துகள் (33)
Share
Advertisement
AmericanAstronaut, MadMike,  MichaelHughes, California, Earth Flat, Prove, Rocket, அமெரிக்கா, விண்வெளிவீரர், மைக்கேல் ஹியூஸ், ராக்கெட், பூமி தட்டை, மரணம்,

இந்த செய்தியை கேட்க

லாஸ் ஏஞ்சல்ஸ்: பூமி கோளவடித்தில் அல்ல, தட்டையானது என நிரூபிக்க தானே தயாரித்த ராக்கெட் மூலம் பயணித்த அமெரிக்க விண்வெளி வீரர் உயிரிழந்தார்.

'மேட் மைக்' என்ற பெயரில் அழைக்கப்படும் அமெரிக்க விண்வெளி வீரரான மைக்கேல் ஹியூஸ், 64, டிஸ்கவரி சேனல் குழுமத்தின் சயின்ஸ் சேனல் நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். இவர், பூமி கோளவடிவமானது அல்ல, வட்ட வடிவிலான தட்டை போன்றது என நிரூபிப்பேன் என கூறினார். இதற்காக தானே ஒரு ராக்கெட்டை தயாரித்த மைக்கேல், அவற்றை கொண்டு தன்னுடைய கூற்றை நிரூபிக்க ஆயத்தமானார். நீராவியால் இயங்கக்கூடிய இந்த ராக்கெட்டிற்கு சில நிறுவனங்களும் நிதியதவி அளித்துள்ளன.


latest tamil newsதிட்டமிட்டபடி லாஸ் ஏஞ்சல்ஸ்சில் இருந்து 180 கி.மீ., தொலைவில் உள்ள கலிபோர்னியாவின் பேர்ஸ்டோ பகுதியில் ராக்கெட்டில் பறக்க மைக்கேல் தயாரானார். சுமார் 1500 மீட்டர் உயரத்திற்கு மேல் சென்று தட்டையானது என நிரூபிக்க முயற்சித்து ராக்கெட்டை செலுத்தினர். துரதிர்ஷ்டவசமாக, ராக்கெட் கிளம்பிய சில மீட்டர் தொலைவிலேயே மைக்கேலின் பாராசூட் கிழிந்து விழுந்தது. அடுத்த சில நொடிகளில் உயரே பறந்த ராக்கெட் வெடித்ததில் கீழே விழுந்த மைக்கேல் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து அந்த சேனல் தரப்பில், இரங்கல் தெரிவிக்கப்பட்டுள்ளது.


latest tamil news


Advertisement
வாசகர் கருத்து (33)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
mohan - chennai,இந்தியா
27-பிப்-202019:00:42 IST Report Abuse
mohan இயற்பியல் தத்துவத்தை உணராத மனிதர்....
Rate this:
Cancel
Sampathkumar Sampath - Karur,இந்தியா
26-பிப்-202012:17:48 IST Report Abuse
Sampathkumar Sampath எல்லா கொழுப்பு.
Rate this:
Cancel
Malick Raja - jeddah,சவுதி அரேபியா
25-பிப்-202012:32:50 IST Report Abuse
Malick Raja இந்த முடிவை யாராலும் தடுக்க முடியாது .. இனி யாரும் சொல்லமாட்டார்கள் .. க்ளைமாக்ஸ்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X