பொது செய்தி

தமிழ்நாடு

21 அரிவாள் மீது 68 முறை குழந்தைகளுடன் நடந்தபடி அருள்வாக்கு

Updated : பிப் 24, 2020 | Added : பிப் 24, 2020 | கருத்துகள் (31)
Share
Advertisement

துாத்துக்குடி: இளையரசனேந்தல் பதினெட்டாம்படி கருப்பசாமி திருக்கோயிலில் பூசாரி சின்ன கருப்பசாமி 21அரிவாள் மீது 68 முறை குழந்தைகளை கையில் வைத்துக் கொண்டு நடந்தவாறு பக்தர்களுக்கு அருள்வாக்கு கூறினார். தொடர்ந்து 68 கிலோ மிளகாய் வத்தல் அபிஷேகமும் நடைபெற்றது.



latest tamil news



தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள இளையரசனேந்தல் பதினெட்டாம்படி கருப்பசாமி திருக்கோயிலில் மாசித்திருவிழா நடந்தது. முக்கிய நிகழ்ச்சியான அரிவாள் மீது நின்று அருள்வாக்கு கூறும் நிகழ்ச்சி நடந்தது. கோவில் தலைமை பூசாரி சின்ன கருப்பசாமி 21 அரிவாள்கள் மீது நடந்தும், படுத்துக் கொண்டும் பக்தர்களுக்கு அருள் வாக்கு அளித்தார். அவர் குழந்தைகளை கையில் பிடித்தவாறு 21 அரிவாள்கள் மீது 68 முறை நடந்து பக்தர்களுக்கு அருள் வாக்கு அளித்தார்.


latest tamil news



இதையடுத்து கோவில் பூசாரிகள் காமராஜ் , முருகேசன் ஆகியோருக்கு 68 கிலோ மிளகாய் வத்தல் அபிஷேகம் நடைபெற்றது. இதில் தூத்துக்குடி நெல்லை, மதுரை, விருதுநகர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.


latest tamil news


Advertisement




வாசகர் கருத்து (31)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Nathan - Hyderabad,இந்தியா
02-மார்-202019:00:31 IST Report Abuse
Nathan தேவர்கள் பட்டினி கிடந்து , மவுனமாய் வ்ருஷக் கணக்கில் ஆகார நியமத்துடன் தவம் இயற்றி, உள்ளெ ஈசன் இருக்கிறான் என்ற நினைவுடன் அவனையே நாடி அவனை அடைவர். அசுரர்களோ நெருப்பின் நடுவில் நின்று (இரண்யாக்ஷன்), அங்கங்களை வெட்டி நெருப்பிலிட்டு (ராவணன்), தலையை ஒவ்வொன்றாய் வெட்டிக் கொண்டு (திரிசிரஸ்), முள்ளில் படுத்து கொண்டு, சாட்டையால் அடித்துக் கொண்டு, வழிபட்டு ஈசனை கட்டாய படுத்தி விரைவாக அருள் பெறினும், எண்ணத்தில் மூர்க்கம் இருந்ததால் பலனும் நீண்டதாய் இருக்காது. இதில் கட்டாயம் என்பதும் ஈசனின் திருவுளமே.
Rate this:
Share this comment
Cancel
சிவகங்கை சீமை - சிவகங்கை,இந்தியா
26-பிப்-202016:04:17 IST Report Abuse
சிவகங்கை சீமை குலதெய்வ வழிபாடு ...இதில் குறை சொல்ல ஒன்றுமில்லை ..தெய்வ நம்பிக்கைதான் முக்கியம்...
Rate this:
Share this comment
Cancel
K.Muthuraj - Sivakasi,இந்தியா
25-பிப்-202012:24:59 IST Report Abuse
K.Muthuraj இந்து மதம் இந்துக்களுக்கு சொல்லிக்கொடுக்கப்படவில்லை. கடவுளை திருப்திப்படுத்தும் செயல்கள் மட்டுமே இந்துக்களுக்கு சொல்லிக்கொடுக்கப்படுகின்றது. அதனாலேயே இவ்வளவு மூட நம்பிக்கைகளும்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X