அரசியல் செய்தி

தமிழ்நாடு

ஆட்சியை கவிழ்க்க ஸ்டாலின் திட்டம்: ஜெயகுமார்

Updated : பிப் 24, 2020 | Added : பிப் 24, 2020 | கருத்துகள் (18)
Share
Advertisement
ஜெயலலிதா, பிறந்தநாள், தங்க மோதிரம், ஆட்சி,கவிழ்க்க, ஸ்டாலின் திட்டம் . அமைச்சர் ஜெயக்குமார்

சென்னை :''தி.மு.க., தலைவர் ஸ்டாலின், விரக்தியின் உச்சத்தில் உள்ளார்; எப்படியாவது ஆட்சியை கவிழ்க்க பார்க்கிறார்,'' என, தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயகுமார் பேசினார்.
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்த நாள் விழாவை முன்னிட்டு, சென்னை ராயபுரம், ஆர்.எஸ்.ஆர்.எம்., மகப்பேறு மருத்துவமனையில் நேற்று அதிகாலை முதல் பிறந்த ஏழு குழந்தைகளுக்கு, அமைச்சர் ஜெயகுமார் தங்க மோதிரம் அணிவித்தார்.
பின், அவர் அளித்த பேட்டி:

'தமிழக அரசு கடன் வாங்கி கொள்ளையடிக்கிறது' என, தி.மு.க., தலைவர் ஸ்டாலின் குற்றம் சாட்டி வருகிறார். நாங்கள் கடன் வாங்கி, மூலதனமாக்க செயல்படுகிறோம். தி.மு.க., ஆட்சி போல ஊதாரித்தனமாக செலவிடவில்லை.

அவர்கள் ஆட்சி காலத்தில், 'டிவி' வழங்கியது ஊதாரித்தனமான செயல். தி.மு.க., ஆட்சியில் வாங்கிய ஒரு லட்சம் கோடி ரூபாய் கடனுக்கு, அ.தி.மு.க., அரசு வட்டி கட்டி வருகிறது.விரக்தியின் உச்சத்தில் ஸ்டாலின் இருக்கிறார்; எப்படி ஆட்சியை கவிழ்க்கலாம் என எண்ணுகிறார். வரும், 2021 சட்டசபை தேர்தலில், அ.தி.மு.க., வெற்றி பெற்று, மீண்டும் ஆட்சி அமைக்கும். சட்டபை தேர்தல் இந்தாண்டு இறுதியில் நடக்கும் என்ற தகவல், உண்மையானது அல்ல.
நிர்பயா நிதியை பயன்படுத்தியே, அரசு பஸ்களில் பெண்களின் பாதுகாப்பிற்காக, கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு வருகிறது. மாநில அரசு, நிர்பயா நிதியை முழுமையாக பயன்படுத்தி வருகிறது. அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக, தி.மு.க.,வினர் வேளாண் மண்டல அறிவிப்பை பாராட்ட மறுக்கின்றனர். தி.மு.க.,வும், அக்கட்சியின் தலைவர் ஸ்டாலினும், தமிழக மக்களால் தனித்து விடப்படுவர்.இவ்வாறு, ஜெயகுமார் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (18)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Varun Ramesh - Chennai,இந்தியா
25-பிப்-202020:34:31 IST Report Abuse
Varun Ramesh டி.வி.வழங்கியது ஊதாரித்தனமான செயல்தான். இன்னும் என்னென்ன ஊதாரித்தனங்கள் உங்களுக்கு தெரியும்? மிக்ஸி, கிரைண்டர், டேபிள் ஃபேன் இவைகளும் ஊதாரித்தனத்தில் தான் அடங்குமா? சரி தி.மு.க வாங்கிய கடனுக்கான வட்டியை நீங்கள் காட்டுகிறீர்கள். நீங்கள் வாங்கிய கடனுக்கான வட்டியை யார் கட்டுவது? நீங்களே கட்டுவதாக வைத்துக்கொண்டால் கூட அதுவும் மக்கள் மீது விதிக்கப்படும் வரிதானே?
Rate this:
Share this comment
Cancel
meenakshisundaram - bangalore,இந்தியா
25-பிப்-202020:09:31 IST Report Abuse
meenakshisundaram 'மூல 'பத்திரம் எந்த டாக்டர் கிட்டே வாங்குறது?சித்த வைத்தியர் கிட்டே வாங்கலாமா?
Rate this:
Share this comment
Cancel
வல்வில் ஓரி - தயிர் வடை,தத்தி சுடலை ,இந்தியா
25-பிப்-202013:50:18 IST Report Abuse
வல்வில் ஓரி இனிமே சினிமாவுக்கே போக மாட்டேன்..என் மகன் நடிச்ச படத்தை கூட பார்க்க மாட்டேன்...மூலபத்திரத்தை மட்டும் கேக்காதீங்க..
Rate this:
Share this comment
தா்மசிந்தனை - chennai,இந்தியா
25-பிப்-202014:39:27 IST Report Abuse
தா்மசிந்தனைஎன்ன தாண்டவக்கோனே… நீர் ஒரு பக்கம் H ராஜாவுக்கு எதிராக ஸ்டாலினை திமிக்கவை உயர்த்தி பேசுகிறீர் இன்னொரு பக்கம் ஸ்டாலினை கழுவி ஊத்துகிறீர் உம்முடைய character புரியவில்லையே சற்று தெளிவாக சொன்னால் நன்றாக இருக்கும் சொல்வீரா ?.......
Rate this:
Share this comment
தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
25-பிப்-202015:41:33 IST Report Abuse
தமிழ்வேல் தர்மா, அவுங்க இரட்டைப் பிள்ளைங்க..ஒன்னு ஒன்னும் வேறுவேறு பக்கம் இழுக்கிறது....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X