பொது செய்தி

தமிழ்நாடு

தங்கம் விலை வரலாறு காணாத உயர்வு: சவரன் ரூ.33 ஆயிரத்தை தாண்டியது

Updated : பிப் 24, 2020 | Added : பிப் 24, 2020 | கருத்துகள் (2+ 3)
Share
Advertisement
Gold, Price, Corona, தங்கம்,வரலாறு, உயர்வு, சவரன், ரூ.33 ஆயிரம், புதிய உச்சம்

சென்னை : தமிழகத்தில், ஆபரண தங்கம் சவரன், 33 ஆயிரம் ரூபாயை தாண்டி, புதிய உச்சத்தை எட்டியுள்ளது. அதிரடியாக தொடரும் விலை உயர்வு, மக்களை அதிர்ச்சி அடையச் செய்துள்ளது.
அமெரிக்கா, ஈரான் இடையே நிலவிய போர் பதற்றம் காரணமாக, நடப்பாண்டு துவங்கியதில் இருந்து, தங்கம் விலை உயர்ந்து வருகிறது. தமிழகத்தில், ஜன., 1ல், 22 காரட் ஆபரண தங்கம், கிராம், 3,735 ரூபாய்க்கும்; சவரன், 29 ஆயிரத்து, 880 ரூபாய்க்கும் விற்பனையாகின. அதே மாதம், 3ம் தேதி, கிராம், 3,815 ரூபாய்க்கும், சவரன், 30 ஆயிரத்து, 520 ரூபாய்க்கும் விற்பனையானது. அதாவது, சவரன் தங்கம் விலை முதன்முறையாக, 30 ஆயிரம் ரூபாயை தாண்டியது.

தொடர்ந்து, ஜன., 6ல், சவரன், 31 ஆயிரம் ரூபாயை தாண்டியது.சமீபத்தில், சீனாவில் பரவிய, 'கொரோனா' வைரஸ் காரணமாக, பலர் உயிரிழந்தனர். இதனால், பல நாடுகளில், ஜவுளி, உணவு பொருட்கள் உள்ளிட்ட தொழில்கள் பாதிக்கப்பட்டன. அந்த தொழில்களில் முதலீடு செய்வதை தவிர்த்த முதலீட்டாளர்கள், பாதுகாப்பு கருதி, தங்கத்தில் அதிக முதலீடு செய்து வருகின்றனர்.
இதனால், எப்போதும் இல்லாத அளவுக்கு, தங்கம் விலை உயர்ந்து வருகிறது.கடந்த, 21ம் தேதி, முதல் முறையாக, சவரன் தங்கம், 32 ஆயிரம் ரூபாயை தாண்டி, 32 ஆயிரத்து, 408 ரூபாய்க்கு விற்பனையானது. நேற்று முன்தினம், தங்கம் கிராம், 4,072 ரூபாய்க்கும்; சவரன், 32 ஆயிரத்து, 576 ரூபாய்க்கும் விற்பனையாகின. கிராம் வெள்ளி, 52.40 ரூபாயாக இருந்தது. இந்நிலையில், நேற்று ஒரே நாளில், தங்கம் கிராமுக்கு, 94 ரூபாய் உயர்ந்து, 4,166 ரூபாய்க்கு விற்பனையானது. சவரன், 752 ரூபாய் அதிகரித்து, 33 ஆயிரத்து, 328 ரூபாய் என்ற, புதிய வரலாறு படைத்தது. கிராம் வெள்ளி, 90 காசுகள் உயர்ந்து, 53.30 ரூபாய்க்கு விற்பனையானது.
இதுகுறித்து, சென்னை தங்கம் மற்றும் வைர நகை வியாபாரிகள் சங்க தலைவர் ஜெயந்திலால் சலானி கூறியதாவது:சீனாவில் மட்டும் பரவிய, 'கொரோனா' வைரஸ், தற்போது, தென் கொரியா, ஈரான் என, பல நாடுகளுக்கும் பரவி உள்ளது. இதனால், முதலீட்டாளர்கள், தங்கம் தவிர்த்து, வேறு தொழில்களில் முதலீடு செய்யாமல் உள்ளனர்.
இதன் விளைவாக, சர்வதேச சந்தையில், தங்கம் விலை உயர்ந்து வருகிறது. அமெரிக்க டாலருக்கு எதிரான, இந்திய ரூபாயின் மதிப்பும் சரிந்து வருகிறது. இதுபோன்ற காரணங்களால், உள்நாட்டில் தங்கம் விலை, வரலாறு காணாத அளவு உயர்ந்து வருகிறது. மூன்று வாரங்களுக்கு, தங்கம் விலையில், தினமும் புதிய உச்சம் காணப்படும்.இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (2+ 3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
25-பிப்-202013:54:54 IST Report Abuse
ஆப்பு நல்லது. சீக்கிரம் பொருளாதாரம் 5 டிரில்லியனுக்கு வந்துரும்.
Rate this:
Cancel
skv srinivasankrishnaveni - Bangalore,இந்தியா
25-பிப்-202006:52:00 IST Report Abuse
skv srinivasankrishnaveni கறுப்புலவச்சுருக்கும் கணவங்களேதான் தங்கம் வாங்கமுடியும். ஏழைகள் வச்சுருக்கும் குறைஞ்ச பட்ச்சம் 2பவுனையும்களம்பெண்ணாகாத்துருக்கானுக கள்ளர்கூட்டம் தைரியமிருந்தால் போங்கடா போயி மந்திரி கல் சினிமாக்காரனுக லஞ்சமாவாங்கி சொத்து சேர்த்த பல ஆபீசர்களாவீட்டுலேகண்ணம்போடாமால் ஏழைகளையே குறிவச்சு கொள்ளையும் அடிச்சு கொலையும் செய்யறீங்களே நாசமாபோகணும் கைகால்கள் விளங்காமபோவணும்டா
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X