அரசியல் செய்தி

தமிழ்நாடு

'சிறுபான்மையினர் அச்சம் கொள்ள தேவையில்லை':இ.பி.எஸ்.,மீண்டும் வலியுறுத்தல்

Updated : பிப் 25, 2020 | Added : பிப் 24, 2020 | கருத்துகள் (15)
Share
Advertisement
சிறுபான்மையினர், அச்சம் , தேவையில்லை, கோவை விமான நிலையம், இ.பி.எஸ்., திமுக, ஆணவகொழுப்பு

கோவை : ''குடியுரிமை திருத்த சட்டம் குறித்து, சிறுபான்மை மக்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை,'' என, முதல்வர் இ.பி.எஸ்., கூறினார்.

கோவை விமான நிலையத்தில், நிருபர்களிடம், முதல்வர் இ.பி.எஸ்., கூறியதாவது:பெண்கள், பாதுகாப்பாக வாழக்கூடிய நகரம், கோவை என்றும், பெருநகரங்களில், சென்னை என்றும், தேசிய குற்ற ஆவண காப்பகம் வெளியிட்டுள்ளது.தமிழகத்தில், பெண்கள் அச்சமின்றி, இரவில் கூட தனியாக செல்லும் நிலை உள்ளது. குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக போராட்டம் நடப்பதை, கட்டுப்படுத்த முடியாது. இது, ஜனநாயக நாடு; போராட்டம் நடத்த, உரிமை உண்டு.
அந்த சட்டம் குறித்து, சட்டசபையில், நான் விளக்கம் கூறிவிட்டேன். வருவாய்துறை அமைச்சரும் தெளிவுப்படுத்தி பேசியுள்ளார். இந்த ஆட்சிக்கு அவப்பெயரை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில், சிறுபான்மை மக்களிடம் தவறான செய்தியை பரப்பி வருகின்றனர்.கணக்கெடுப்பில் மொழி, தாய், தந்தையர் வசித்த இருப்பிடம், ஆதாரமாக குடும்ப அட்டை, வாக்காளர் அல்லது 'ஆதார்' அட்டை சமர்ப்பிக்க வேண்டும் என, கூறியுள்ளனர்.ஆனால், இது கட்டாயம் அல்ல என்றும் தெளிவுப்படுத்தியுள்ளனர். எனவே, சிறுபான்மையினர் எதற்கும் அச்சம் கொள்ள தேவையில்லை.

'தி.மு.க., ஆட்சியின்போது தான், நிறைய பேர், உயர் நீதிமன்ற நீதிபதியாக ஆனார்கள்.அது, தி.மு.க., போட்ட பிச்சை' என, தரக்குறைவான வார்த்தையை கூறியுள்ளனர். அது, தாழ்த்தப்பட்ட மக்களை கேவலப்படுத்தி பேசியது; ஆணவகொழுப்பில் பேசிய வார்த்தை.இவ்வாறு, முதல்வர் இ.பி.எஸ்.,கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (15)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
பெரிய ராசு - Baton Rouge,யூ.எஸ்.ஏ
25-பிப்-202022:50:29 IST Report Abuse
பெரிய ராசு சிறுபான்மையினர் தீவிரவாதிகள் அச்சம் கொள்ள வேண்டும் வெளியேற வேண்டும் ..டும்...
Rate this:
Share this comment
Cancel
25-பிப்-202020:22:10 IST Report Abuse
ஹாஜா குத்புதீன் நம் முதல்வர் தெள்ளத்தெளிவா சொல்லியுள்ளார்..ஏற்கனவேயும் பலமுறை சொல்லியுள்ளார்.அப்படியும் நம்பாமல் எதிர்கட்சியினர் சொல்வதையே நம்பினால் நமக்குத்தானே நஸ்டம்.ஓட்டுக்களுக்காகவே நம்மை பலரும் பயண்படுத்திக் கொள்ள ஏன் இப்படி முஸ்லிம்கள் சிந்திக்காமல் இருக்கோம்.அமித்சா சொல்வதை நம்பலன்னாலும் நம் முதல்வர் சொல்வதை காது கொடுத்து கேளுங்கள்.
Rate this:
Share this comment
Cancel
Baskar - Paris,பிரான்ஸ்
25-பிப்-202017:25:41 IST Report Abuse
Baskar சந்தோஷ் கோபால் அதெல்லாம் ஒரு காலம் தினமலர் என்றால் கருத்துக்கள் பிரமாதம். இப்போது எல்லாம் பனமயம்..
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X