அ.தி.மு.க., அலுவலகத்தில் ஜெ., பிறந்த நாள் விழா

Added : பிப் 24, 2020
Share
Advertisement
 அ.தி.மு.க., அலுவலகத்தில் ஜெ., பிறந்த நாள் விழா

சென்னை:மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்த நாள் விழா, நேற்று, அ.தி.மு.க., சார்பில், கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
சென்னை, ராயப்பேட்டையில் உள்ள, அ.தி.மு.க., தலைமை அலுவலகத்தின் நுழைவு வாயிலில், பலுான் தோரணம் அமைக்கப்பட்டிருந்தது. அலுவலகம் அமைந்துள்ள சாலை முழுவதும், தோரணங்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.நிதியுதவிகாலை, 10:30 மணிக்கு, கட்சி ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்வருமான பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்வருமான இ.பி.எஸ்., ஆகியோர், கட்சி அலுவலக வளாகத்தில் உள்ள, ஜெயலலிதா சிலைக்கு மாலை அணிவித்தனர். கட்சிக் கொடியேற்றி, அங்கிருந்த நிர்வாகிகளுக்கும், பத்திரிகையாளர்களுக்கும், இனிப்புகள் வழங்கினர்.
ஜெயலலிதாவின், 72வது பிறந்த நாள் விழா சிறப்பு மலரை, பன்னீர்செல்வம் வெளியிட, முதல் பிரதியை, இ.பி.எஸ்., பெற்றுக் கொண்டார். பின், பல்வேறு காரணங் களால் இறந்த, கட்சியினர், 14 பேரின் குடும்பங் களுக்கு, குடும்ப நல நிதியாக, தலா, 2 லட்சம் ரூபாய் வீதம், 28 லட்சம் ரூபாய்க்கான வரைவோலை களை வழங்கினர்.அண்ணா தொழிற்சங்கத்தை சேர்ந்த, நலிந்த தொழிலாளர்கள், 109 பேருக்கு, தலா, 1 லட்சம் ரூபாய் வீதம், 1.09 கோடி ரூபாய், நிதியுதவி வழங்கினர்.
75 கிலோ, 'கேக்'
திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டு ஒன்றியம், மலையனுார் செக்கடி ஊராட்சி செயலர் கோவிந்தன் - காந்திமதி தம்பதியினரின், ஆண் குழந்தைக்கு, 'ஜெய் ஜீவன்' என்றும், பெண் குழந்தைக்கு, 'ஜெயஸ்ரீ' என்றும் பெயர் சூட்டினர்.அதைத் தொடர்ந்து, இலக்கிய அணி செயலர் வளர்மதி ஏற்பாடு செய்திருந்த, அன்னதான நிகழ்ச்சியை, துவக்கி வைத்தனர். கட்சி நிர்வாகிகள் அனைவருக்கும், கலவை சாதம், சாம்பார் சாதம், கேசரி வழங்கப்பட்டன.எம்.ஜி.ஆர்., மன்ற செயலர் தமிழ்மகன் உசேன், ஜெ.,வின், 72வது பிறந்த நாளை குறிப்பிடும் வகையில், 72 கிலோ எடையுள்ள, 'கேக்' தயார் செய்து வைத்திருந்தார். அதை, முதல்வர் மற்றும் துணை முதல்வர் வெட்டி, கட்சியினருக்கு வழங்கினர்.மலர் அலங்காரம்கட்சி அலுவலகத்திற்கு வெளியே, கட்சி நிர்வாகிகளும், அன்னதானம் வழங்கினர். லட்டு, பாதுஷா என, கட்சி நிர்வாகிகள், தனிப்பட்ட முறையில், இனிப்புகள் வழங்கினர். அதேபோல், மாநிலம் முழுவதும், அ.தி.மு.க., வினர் ஆங்காங்கே, ஜெயலலிதா படத்தை மலர்களால் அலங்கரித்து, இனிப்புகள் மற்றும் அன்னதானம் வழங்கினர். ஏழை மக்களுக்கு நலத்திட்ட உதவிகளையும் வழங்கினர். அ.ம.மு.க.,வினரும், ஜெயலலிதா பிறந்த நாளை, சிறப்பாகக் கொண்டாடினர்.மருத்துவ முகாம்!ஜெயலலிதா பிறந்த நாளையொட்டி, அ.தி.மு.க., தலைமை அலுவலகத்தில், சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், மருத்துவ முகாமிற்கு ஏற்பாடு செய்துள்ளார். இம்முகாமை, நேற்று முதல்வர் மற்றும் துணை முதல்வர் துவக்கி வைத்தனர்.முகாமில், பொது மருத்துவம், இருதய சிறப்பு பரிசோதனை, தோல், கண் பரிசோதனை, ரத்தப் பரிசோதனை, மூட்டு வலி, எலும்பு முறிவு சிகிச்சை, இ.சி.ஜி., ரத்த அழுத்தம், சர்க்கரை அளவு கண்டறிதல், சித்த மருத்துவம் உள்ளிட்ட, அனைத்து வகையான பரிசோதனைகளும் நடத்தப்பட்டு, உரிய மருந்து மாத்திரைகள், ஆலோசனைகள் வழங்கப்படுகின்றன. பொது மக்களுக்காக, வரும், 26ம் தேதி வரை, முகாம் நடக்க உள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X