பொது செய்தி

தமிழ்நாடு

பெண் குழந்தை முன்னேற்றம்: மாநில விருது

Added : பிப் 24, 2020
Share
Advertisement
 பெண் குழந்தை முன்னேற்றம்: மாநில விருது

சென்னை:பெண் குழந்தைகளின், சமூக முன்னேற்றத்திற்காக பணியாற்றிய, 9 வயது சிறுமி பவதாரிணிக்கு, 'பெண் குழந்தை முன்னேற்றத்திற்கான மாநில விருது' வழங்கப்பட்டது.

'மறைந்த ஜெயலலிதாவின் பிறந்த நாளான, பிப்ரவரி, 24ம் தேதி, மாநில பெண் குழந்தைகள் பாதுகாப்பு தினமாக கொண்டாடப்படும்' என, முதல்வர் இ.பி.எஸ்., 19ம் தேதி அறிவித்திருந்தார். அதன்படி, நேற்று தமிழகம் முழுவதும், மாநில பெண் குழந்தைகள் பாதுகாப்பு தினம் கடைப்பிடிக்கப்பட்டது.சென்னை, தலைமை செயலகத்தில் நடந்த நிகழ்ச்சியில், பெண் குழந்தை பாதுகாப்பு திட்டத்தின் கீழ், 14 பெண் குழந்தைகளுக்கு, தலா, 25 ஆயிரம் ரூபாய், வைப்புத்தொகை செலுத்தப்பட்டதற்கான பத்திரங்களை, முதல்வர் இ.பி.எஸ்., வழங்கினார். இத்திட்டத்தில் இணைந்து, 18 வயது பூர்த்தியடைந்த, ஏழு பெண்களுக்கு, முதிர்வு தொகைக்கான காசோலைகளை, முதல்வர் வழங்கினார்.

மாநில பெண் குழந்தைகள் பாதுகாப்பு தினத்தை ஒட்டி, இந்த ஆண்டு, பெண் குழந்தை முன்னேற்றத்திற்கான மாநில விருது, கடலுார் மாவட்டம், மாலுமியர்பேட்டையைச் சேர்ந்த, 9 வயது சிறுமி பவதாரிணிக்கு வழங்கப்பட்டது. விருதுடன், 1 லட்சம் ரூபாய்க்கான காசோலை மற்றும் பாராட்டு பத்திரத்தை, முதல்வர் வழங்கினார். பிளாஸ்டிக் பயன்பாடு ஒழிப்பு, ஓட்டளிப்பின் அவசியம், கண் தானம் போன்றவற்றை வலியுறுத்தி, விழிப்புணர்வு பிரசாரம் செய்ததற்காக, பவதாரிணிக்கு விருது வழங்கப்பட்டது.இந்நிகழ்ச்சியில், துணை முதல்வர் பன்னீர்செல்வம், சமூக நலத்துறை அமைச்சர் சரோஜா, தலைமை செயலர் சண்முகம் பங்கேற்றனர்.

உறுதிமொழி ஏற்பு

தமிழகம் முழுவதும், பெண் குழந்தைகள் பாதுகாப்பு தின உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடந்தது.ஜெயலலிதா பிறந்த நாள், 'மாநில பெண் குழந்தைகள் பாதுகாப்பு தினமாக' நேற்று கொண்டாடப்பட்டது. அதையொட்டி, அரசு அலுவலகங்கள் மற்றும் பள்ளிகளில், மாநில பெண் குழந்தைகள் பாதுகாப்பு தின உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடந்தது.'குழந்தை தொழிலாளர் இல்லாத சமூகத்தை உருவாக்க, உறுதுணையாக இருப்பேன். இந்திய அரசியலமைப்பு சட்டம் வழங்கியுள்ள, குழந்தைகளுக்கான உரிமைகளை, அனைத்து குழந்தைகளுக்கும் கிடைக்கும் வகையில் செயல்படுவேன்' என, உறுதி ஏற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X