பொது செய்தி

இந்தியா

'ஏர் இந்தியா' ஏல விபரம்: விளக்கம் பெற அவகாசம்

Updated : பிப் 24, 2020 | Added : பிப் 24, 2020 | கருத்துகள் (2)
Share
Advertisement
airindia,  'ஏர் இந்தியா'# ஏலம், விளக்கம் ,அவகாசம்

புதுடில்லி :'ஏர் இந்தியா' நிறுவனத்தின் ஏல விற்பனையில், சந்தேகங்களை தெரிவிப்பதற்கான அவகாசம், மார்ச், 6 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. பொதுத் துறை நிறுவனமான ஏர் இந்தியாவில், மத்திய அரசின், 100 சதவீத பங்குகள், ஏல முறையில் விற்பனை செய்யப்பட உள்ளன.


latest tamil newsஇதற்கான ஒப்பந்தப் புள்ளி அறிவிக்கை, இந்தாண்டு, ஜன., 27ல் வெளியிடப்பட்டது. ஏலத்தில் பங்கேற்க விரும்பும் நிறுவனங்கள், மார்ச், 17க்குள் விண்ணப்பிக்க வேண்டும். இதற்காக, பங்கு விற்பனை விதிமுறைகள் குறித்த சந்தேகங்களை, பிப்., 11 இறுதிக்குள் தெரிவித்து, தீர்வு காணலாம் என, தெரிவிக்கப்பட்டது. அதன்படி, சில நிறுவனங்கள் கேட்ட, 20 கேள்விகளுக்கு, 'தீபம்' எனப்படும் பொது முதலீடு மற்றும் பொதுத் துறை சொத்து நிர்வாகத் துறை, 21ம் தேதி விளக்கம் அளித்தது.

இந்நிலையில், நிறுவனங்களுக்கு மேலும் வாய்ப்பு கொடுக்கும் விதமாக, சந்தேகங்கள் குறித்து விளக்கம் கேட்பதற்கான அவகாசம், மார்ச், 6 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனால், ஏர் இந்தியா ஏலத்தில், அதிக நிறுவனங்கள் பங்கேற்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Advertisement
வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ஆரூர் ரங் - சென்னை ,இந்தியா
25-பிப்-202009:12:07 IST Report Abuse
ஆரூர் ரங் எழுபதாண்டுகளாக சுரண்டி கொழுக்கமட்டுமே நடத்தினார்கள்.போட்டியின்றி ஏகபோகமாக இருந்தவரை லாபம் காண்பித்தார்கள் .போட்டியென வந்தவுடன் நட்டம். விமானம் வாங்குவதிலேயே பல்லாயிரம் கோடி ஊழல் நடந்தது . இனியும் வைத்திருப்பது ஏழைகள் செலுத்தும் வரிப்பணத்துக்குக்கேடு . வெற்றுப்பெருமைக்கு இதுபோன்ற கம்பெனிகளை வைத்து அழிவதற்குபதில் மூடுவதே சிறந்தது உலகமுழுவதும் விமானதொழிலில் நாட்டம் குறைந்திருப்பதால நியாயமான விலையில் வாங்க ஆள்வராது
Rate this:
Cancel
Ragam -  ( Posted via: Dinamalar Android App )
25-பிப்-202006:26:27 IST Report Abuse
Ragam Auction is a serious business, until last property of India is sold to gujarat.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X