நம் நாட்டின் மிகப் பெரிய வரவேற்பால் டிரம்ப் உச்சக்கட்ட மகிழ்ச்சி!

Updated : பிப் 24, 2020 | Added : பிப் 24, 2020 | கருத்துகள் (33)
Share
Advertisement


மோடி பேச்சு



* டிரம்பை, குஜராத் மட்டுமல்லாமல்; ஒட்டுமொத்த இந்தியாவும் மகிழ்ச்சியுடன் வரவேற்கிறது.

* டிரம்ப் வருகையால், இந்திய - அமெரிக்க உறவில், புதிய அத்தியாயம் துவக்கப்பட்டுள்ளது.

* உலகம் ஒரே குடும்பம் என்பது தான், இந்தியர்களின் நம்பிக்கை. இரு நாடுகளில் ஒரு நாடு, சுதந்திர தேவியின் சிலை மூலம் பெருமை கொள்கிறது. மற்றொரு நாடு, ஒற்றுமையின் சிலை மூலம் பெருமை கொள்கிறது.

* இரண்டு மனிதர்கள் அல்லது இரண்டு நாடுகளுக்கு இடையே உள்ள மிகப் பெரிய வலிமையே, பரஸ்பர நம்பிக்கை தான். இந்தியா - அமெரிக்கா இடையேயான நம்பிக்கை, கடந்த ஐந்து ஆண்டுகளில், பெரும் வலிமை அடைந்துள்ளது.

* ஒரே நேரத்தில் பல செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்தி, உலக சாதனை படைத்துள்ளதுடன், பல கோடி பேருக்கு வங்கி சேவை வழங்கி, இந்தியா சாதனை படைத்துள்ளது.



latest tamil news





latest tamil news




latest tamil news


Advertisement




latest tamil news




டிரம்ப் பேச்சு



* இந்தியா, மிகப் பெரிய ஜனநாயக நாடு. பல்வேறு கலாசாரங்களை உடைய நாடு. இவை எல்லாவற்றையும் விட, இந்திய மக்கள் மிகவும் நேர்மையானவர்கள்.

* கடந்த, 10 ஆண்டுகளில் மட்டும், இந்தியாவில், 27 கோடி மக்கள் வறுமையிலிருந்து மீட்கப்பட்டுள்ளனர்.

* சுதந்திரம், தனி நபர் உரிமை, சட்டம் - ஒழுங்கு ஆகியவற்றில், மற்ற நாடுகளுக்கு முன் மாதிரியாக இந்தியா விளங்குகிறது.

* பயங்கரவாதம், இந்தியா - அமெரிக்காவுக்கு மட்டுமல்லாது, சர்வதேச நாடுகளுக்கும் மிகப் பெரிய அச்சுறுத்தலாக விளங்குகிறது. இந்தியாவும், அமெரிக்காவும் ஒருங்கிணைந்து, இந்த அச்சுறுத்தலை முறியடிக்க உறுதி எடுத்துள்ளன.

* இந்தியா - அமெரிக்கா இடையே, பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள, சிறப்புமிக்க வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாக உள்ளது. ராணுவத் துறையிலும், இரு நாடுகளுக்கும் இடையே முக்கிய ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட உள்ளன.

* இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக்காக, பிரதமர் மோடி இரவு - பகலாக உழைக்கிறார். மிகச் சிறந்த தலைவராக உருவெடுத்துள்ளார். எல்லாரும் அவரை நேசித்தாலும், அவர் மிகவும் கண்டிப்பானவர்.


latest tamil news




latest tamil news





latest tamil news





latest tamil news





latest tamil news



Advertisement




வாசகர் கருத்து (33)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தமிழர்நீதி - சென்னை ,இந்தியா
25-பிப்-202022:03:22 IST Report Abuse
தமிழர்நீதி இந்தியாவுக்கு ஜல்லிக்காசு பிரயோஜனம் இல்லை . இந்தியாவிலிருந்து ஏற்றுமதியாகும் 2000 பொருளுக்கு விதித்தவரியை விலக்கவில்லை,இந்தியர்களுக்கு H1 B விசா பற்றி வாய் திறக்கவில்லை, காஸ்மீர் பாகிஸ்தானிடம் கேட்டுத்தான் முடிவெடுக்கணும், இந்தியா அமெரிக்காவிடமிருந்து எரிபொருள் வாங்கவேண்டும், இந்தியா அமெரிக்காவிடமிருந்து 3 பில்லியன் டாலருக்கு ராணுவ தடவாளம் வாங்கணும் , 20000000 கோடிக்கு அமெரிக்காவிடம் பொருள்வாங்கணும் , தீவிரவாதத்தை பாகிஸ்தானுடன் சேர்ந்து ஆலோசித்து முடிவெடுத்து ஒழிக்கணும் . இந்தியாவுக்கு இதில் என்னலாபம்? இன்னுமிருக்கு ,RSS போட்டுத்தள்ளிய காந்திக்கு புகழாரம் . அப்புறம் டெல்லியில் கலவரத்தை அறிந்தேன் அது இந்தியாவின் கையாலாகாததானம் என்று சொல்லாமல் சொல்லிப்புட்டு , நமட்டுச்சிரிப்புடன் , ராஷ்டிரபதிவானில் நண்பேன்டா என்று கறி பிரியாணி சாப்பிட்டுவிட்டு கிளம்பிப்போய் இந்தியாவை சுருட்டிவந்ததை அமேரிக்காவில் சொல்லி ஒட்டுக்கேட்க போயிட்டார் . மோடி நீண்டசுவர்க்கட்டி இந்தியாவின் கோவணத்தை மறைகிறார் . ஹீ ஹி நண்பேன்டா .. கட்டிப்புடி கட்டிப்புடிடா ..
Rate this:
Cancel
25-பிப்-202020:37:47 IST Report Abuse
ஆப்பு சபர்மதி ஆஸ்ரமத்துலே வெச்ச ஃப்ரொக்கோலி சமூசா உள்பட சைவ எதையுமே ட்ரம்ப் சாப்பிடலையாம். அதுல எத்தனை கோடி செலவாச்சோ?
Rate this:
Cancel
Sundar -  ( Posted via: Dinamalar Android App )
25-பிப்-202017:42:02 IST Report Abuse
Sundar பார்த்து மெதுவா ஊது இங்க கோபால்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X