சிறப்பு பகுதிகள்

டவுட் தனபாலு

'டவுட்' தனபாலு

Added : பிப் 24, 2020
Share
Advertisement
 'டவுட்' தனபாலு

ம.தி.மு.க., பொதுச் செயலர் வைகோ:காவிரி டெல்டாவில் உள்ள கடலுார், நாகப்பட்டினம் மாவட்டங்களில், பெட்ரோலிய ரசாயன முதலீட்டு மண்டலம் அமைய வௌியிட்ட குறிப்பாணையை, தமிழக அரசு ரத்து செய்திருப்பது, ம,தி.மு.க., தொடர்ந்து குரல் எழுப்பியதற்கு கிடைத்த வெற்றி.'டவுட்' தனபாலு: இந்த விவகாரத்தில், எங்களுக்குத் தான் வெற்றி என, தி.மு.க.,வினர் அறிவித்துள்ளனர்; பா.ம.க.,வும் அறிவித்துள்ளது. கம்யூனிஸ்ட்டுகள், 'நாங்கள் மேற்கொண்ட எதிர்ப்பு நடவடிக்கைகளால் தான், திட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது, என்கின்றனர். இதைப் பார்க்கும் போது, இந்த திட்டத்தில் மண்ணை அள்ளிப் போட்டது யார் என்ற, 'டவுட்' தமிழக இளைஞர்களுக்கு வலுவாக ஏற்படுகிறதே.

பா.ம.க., நிறுவனர் ராமதாஸ்:நாடு முழுவதும், தங்கம் விலை வரலாறு காணாத உச்சத்தை தொட்டுள்ளது. திருமணம் உள்ளிட்ட சுபகாரியங்களை நடத்தவுள்ள ஏழை மற்றும் நடுத்தர மக்கள், கடும் இன்னலுக்கு ஆளாகி உள்ளனர். எனவே, தங்கம் மீதான இறக்குமதி வரியை குறைக்க வேண்டும். அத்துடன், சேதாரம் என்ற பெயரில் நடக்கும் கொள்ளையையும் தடுக்க வேண்டும்.'டவுட்' தனபாலு: 'ராமதாசை போல, சாதாரண மக்கள் மீது அக்கறை கொண்ட தமிழக அரசியல் தலைவர் வேறு யாரும் இருக்க முடியாது' என்ற எண்ணத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காகத் தான், இவ்வாறெல்லாம் அறிக்கை அளிக்கிறீர்களோ என்ற, 'டவுட்' ஏற்படுகிறது. 'தங்கம் மீதான இறக்குமதி வரியை குறைக்க வேண்டும்' என, மத்திய அரசிடம் கோரிக்கை விடுகிறீர்களே; மத்திய அரசுடன் கூட்டணியில் உள்ளதால், இந்த தைரியமா அல்லது பிற தலைவர்களுக்கு முந்தி விடுவோம் என்ற முன்ஜாக்கிரதையா என்ற, 'டவுட்டும்' எழுகிறது.
தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் ராஜு:அ.தி.மு.க. ஆட்சியில் செய்கிற திட்டங்களை பார்த்து தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் திருந்த வேண்டும். அவர் திருந்துவாரா என்று பொறுத்திருந்து பார்ப்போம். தி.மு.க.வின் குணமும், மனமும் மாறாது. அ.தி.மு.க. ஆட்சிக்கும், கட்சிக்கும், ஏதாவது இடையூறு கொடுக்க வேண்டும் என, ஸ்டாலின் எண்ணுகிறார்.'டவுட்' தனபாலு: வம்பு அரசியல் செய்யும் தலைவர்கள் மீது, முந்தைய ஆட்சியாளர்கள், பல விதமான நடவடிக்கைகளையும், 'கவனிப்பு'களையும் மேற்கொண்டனர். நீங்கள் எல்லாம் ரொம்ப அமைதியாக இருப்பதால், அந்த, 'செயல்திறன்' உங்கள் அரசுக்கு இல்லையோ என்ற, 'டவுட்' மக்களுக்கு வந்து விட்டது. இனிமேலாவது சுதாரித்தால் சரி தான்!

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X