பொது செய்தி

இந்தியா

நிரவ் மோடி வீட்டில் வைத்திருந்த பிரசித்தி பெற்ற ஓவியம் ஏலம்

Updated : பிப் 25, 2020 | Added : பிப் 25, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement

மும்பை: மோசடி மன்னன் நிரவ் மோடியின் வீட்டில் உள்ள ஓவியங்கள் உள்ளிட்ட பொருட்களை ஏலத்துக்கு விட, அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.



latest tamil news



இதில், பிரபல ஓவியர், எம்.எப்.உசேன் வரைந்த ஒரு ஓவியம் மட்டும், 19 கோடி ரூபாய்க்கு ஏலம் போகும் என எதிர்பார்க்கப்படுகிறது. மோசடிமஹாராஷ்டிரா மாநிலம், மும்பையைச் சேர்ந்த நகை வியாபாரி நிரவ் மோடியும், அவரது உறவினர் மெஹுல் சோக்சியும், பஞ்சாப் நேஷனல் வங்கியில், 13 ஆயிரம் கோடி ரூபாய் கடன் வாங்கி, மோசடி செய்து, வெளிநாட்டுக்கு தப்பி ஓடினர். பிரிட்டன் தலைநகர் லண்டனில், நிரவ் மோடி கைது செய்யப்பட்டார். அவரை, இந்தியாவுக்கு நாடு கடத்தி வருவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இந்நிலையில், இந்தியாவில் உள்ள நிரவ் மோடிக்கு சொந்தமான சொத்துக்களை ஏலம் விட்டு, வங்கிக்கு செலுத்த வேண்டிய தொகையை வசூலிக்க, அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். எதிர்பார்ப்புமுதல் கட்டமாக, சமீபத்தில் நிரவ் மோடிக்கு சொந்தமான கார், ஓவியங்கள் உள்ளிட்ட விலை உயர்ந்த பொருட்கள் ஏலம் விடப்பட்டன.


latest tamil news



தற்போது, மீண்டும் சில விலை உயர்ந்த பொருட்கள் அடையாளம் காணப்பட்டு, அவற்றை ஏலம் விட, அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். மும்பையில், வரும், 28ல் நடக்கவுள்ள இந்த ஏலத்தில், பிரபல ஓவியர், எம்.எப்.உசேன் வரைந்த, 'கங்கா - யமுனா யுத்தம்' என்ற ஓவியம், அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. இந்த ஓவியம், 19 கோடி ரூபாய்க்கு ஏலம் போகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அப்படி ஏலம் போனால், உசேன் வரைந்த ஓவியங்களிலேயே, அதிக விலைக்கு ஏலம் போன ஓவியம் என்ற பெருமை, இதற்கு கிடைக்கும் என, ஏல மைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Nathan - Hyderabad,இந்தியா
25-பிப்-202013:12:59 IST Report Abuse
Nathan நானும் ஒரு சம்பிரதாய ஓவியன் தான். இந்த பைத்திய கார தீட்டல்களை ஓவியம் என்று சொல்லி, ஓரமாக காலை வளைத்து நின்று சிலாகித்து,அதற்கு ஒரு விலையை போட்டு, நான் நீ என வாங்குவதுபோல் டிராமா கட்டி, விற்றும் போகிறது. 2 நிமிடங்களுக்கு மேல் இதை பார்க்கவும் சகிக்காது. பிக்காஸோவே இதை சொல்லி வித்திருக்கிறா மாதிரி. ஆட்டோகிராப் கூட போட மாட்டாராம், அதை ஒரு விலை போட்டு விற்று விடுவார்களாம் , வாங்க பைத்தியங்கள் இருக்கே.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X