வராத்திரி விழா கொண்டாட்டம் முடிந்த நிலையில், வீட்டில் ஓய்வெடுத்து கொண்டிருந்தாள் சித்ரா. அதையறிந்து வந்த மித்ரா, ''என்னக்கா, ஆபீஸ் போகலையா? ஆன்ட்டி சொன்னங்க,'' என, கேட்டாள்.''யெஸ் மித்து, கொஞ்சம் 'பீவரிஷா' இருக்கு'. அதனால், லீவு எடுத்துட்டேன்,'' என்ற சித்ரா, சமையலறைக்குள் சென்று டீ வைத்து கொடுத்தாள்.அதனை அருந்தியபடியே, ''அக்கா... சிவன் தியேட்டருக்கு அருகிலுள்ள பத்திரப்பதிவு ஆபீசில், லஞ்சம் தலைவிரிச்சு ஆடுதாம்?''''யெஸ்... மித்து. யார் அலுவலர், யார் புரோக்கர் என்பது தெரியாமல், எங்கு பார்த்தாலும், புரோக்கர் ராஜ்ஜியமா இருக்குதாம். அந்த ஆபீஸ் அதிகாரி, இதுக்கு முன்னாடி, பல்லடத்தில் இருந்தப்ப, நல்லா பண மழையில் நனைஞ்சிட்டு, இங்க வந்திருக்காங்க,''''அடேங்கப்பா...''''இடம் கிரயம் செய்றப்ப 'கவரில்' வச்சால்தான் வேலை செய்வாராம். இல்லாட்டி, ஏதாவது ஒரு குறை கண்டுபிடிச்சு, அப்படி இருக்குது, இப்படி இருக்குதுன்னு சொல்லி தட்டி கழிச்சிடுவாராம்,''''ஏதாவது வில்லங்கமான இடமா இருந்தாக்கூட, 'கவனிச்சா' உடனே கிரயம் பண்ணிடுவாராம்? அவ்வளவு ஏன், பணத்தை வாரி கொடுத்தீன்னா, ரிஜிஸ்டர் ஆபீசைக்கூட, உன் பேருக்கு மாத்தி கொடுத்துருவாங்களாம்னு, மக்கள் பேசிக்கிறாங்க,''''ஏங்க்கா... பணத்து மேல அவ்ளோ பாசமா?'' என மித்ரா சொன்னபோது, அவளது மொபைல்போன் ஒலித்தது. ''ஹலோ 'வி.சாந்தி' மேடம், எப்படி இருக்கீங்க? எங்க ஊருக்கு வந்ததை சொல்லவே இல்லை. அங்கிள், குழந்தைள் சவுக்கியமா?'' என, இரண்டு நிமிடம் பேசி விட்டு வைத்தாள்.''ஏன், மித்து, ஆளும்கட்சி மாவட்ட நிர்வாகிகள் மீட்டிங்கில் ஏதோ சலசலப்பாம். உனக்கு தெரியுமா?''''ஆமாங்க்கா... சென்னையில் நடந்த மீட்டிங்கில, உள்ளாட்சி தேர்தலில், 90 சதவீதம் வெற்றி. மாநகராட்சி தேர்தலில் ஜெயிக்கணும்னா, கோஷ்டி பூசல் ஒழியணும்,'னு வெளிப்படையா பேசுனாராம்,''''இன்ட்ரஸ்டிங்., அப்புறம் என்னாச்சுடி?''''உடனே, 'சவுத்' பேச முயற்சி செஞ்சதற்கு, மாவட்ட அமைச்சர், செயலாளர் பேசிய பின்,எம்.எல்.ஏ., பேச முடியாதுனு சொல்லி, உட்கார வச்சுட்டாங்களாம்,''''அதனால, ஜெ., பிறந்த நாள் விழாவை, வழக்கம்போல, 'சவுத்' 'தனியாவர்த்தனம்' வாசிச்சிட்டாராம்?'' மித்ரா சொன்னதும், ''கோஷ்டி கானம் ஒலிக்கிற வரைக்கும், சிக்கல்தான்,'' என்ற சித்ரா, ''சொல்ல மறந்துட்டேன். ரிஜிஸ்டர் ஆபீஸ் போலவே,ஆர்.டி.ஓ., ஆபீசிலும் புரோக்கர் அட்டகாசம் தாங்க முடியலையாம்,'' என கூறினாள்.''எந்த ஊர்லீங்க்கா?''''நம்ம ஊரில்தான். 'நார்த்' ஆபீசுக்கு, டெய்லி, 200 பேர் வரை வந்துட்டுப்போறாங்க. புரோக்கர் இல்லாம, நேரா போனா, அதுஇதுன்னு சொல்லி 'ரிஜெக்ட்' பண்ணிடறாங்களாம்,''''ஆனா, பக்கத்துல இருக்கற, 'ஜெராக்ஸ்' கடைக்குப்போனா, அவரே முடிச்சு குடுத்திடறாராம். இதைப்பத்தி, உயரதிகாரிக்கு சொல்லப்போனால், கீழே இருக்கிற இன்ஸ்., கள் விடறதில்லையாம்,''''அதனால என்ன, நாம சொல்லிட்டா போச்சு...'' சிரித்தாள் மித்ரா, ''வி.ஏ.ஓ.,க்களுக்கு அப்புறம், பஞ்சாயத்து யூனியனிலும், போராட்ட ஏற்பாடு துவங்கிடுச்சாமா?'' என்றாள்.''உண்மைதான்டி. பஞ்சாயத்தில தலைவர் இல்லாதப்ப, அதிகாரிங்க இன்ஸ்பெக்ஷனுக்கு போனா, 10 முதல், 20 ஆயிரம் ரூபாய் வரைக்கும் அவருக்கு 'கிஸ்தி' கட்டோணுமாம்,''''இப்ப, தலைவர்கள் வந்ததால், எப்படி பணம் கொடுக்கறதுன்னு, பஞ்சாயத்து செக்ரட்ரிகள் புலம்பி தள்றாங்களாம். ஆனா, பழம் தின்னு கொட்டை போட்ட பஞ்சாயத்து செக்ரட்ரிகள், இருதரப்பையும் சமாளிச்சு, வழக்கம் போல், அவங்களும் 'குளிர்' காய றாங்களாம்,'' சொன்னாள் சித்ரா,அப்போது, நிர்பயா குற்றவாளிகளின் துாக்குதண்டனை பற்றிய செய்தி, டிவியில் ஒளிபரப்பானது.அதைப்பார்த்த மித்ரா, ''இவனுக்கு என்ன கருணை வேண்டிக்கிடக்குது? உடனே துாக்கில் போட வேண்டியதுதானே,'' என ஆவேசப்பட்டாள்.''மித்து, டென்ஷனாகாதே. கண்டிப்பாக நடக்கும். கோர்ட் சொன்னதும், எனக்கு கோர்ட் ஊழியர்கள் நினைவு வந்திடுச்சு,''''அது என்னக்கா விஷயம்?''''கோர்ட்டில் முறைகேடாக பணியில் இணைந்த குற்றச்சாட்டில், சிலர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். விசாரணைக்கு பின், கடந்தாண்டு அக்., மாதம் அவர்களில் ஒருசிலர் மீண்டும் பணியில் சேர்ந்தனர். அதில், சிலருக்கு ஐந்து மாதமாகியும் சம்பளம் வர்லையாம். இதனால, அவங்க புலம்பி தள்றாங்களாம்,''''அதில், ஏதாவது சிக்கல் இருக் கும். விரைவில் சரி செஞ்சுடுவாங்கன்னு நம்பலாம்,'' என்ற மித்ரா, ''அத்திக்கடவு அவிநாசி திட்டத்துக்கு வந்த குழாய்களை இன்னும் பதிக்காமல் இருக்காங்களாம்,''''ஏன்...அதில என்ன பிரச்னை?''''அக்கா... குழாய் பதிக்க வேண்டிய இடங்களில், ரோடுகள் கட்டிங் செய்யணுமாம். அதற்கு, இன்னும் பர்மிஷன் கொடுக்கலையாம். உரிய கட்டணம் செலுத்த தயாராக இருந்தும், ஹைவேஸ் அதிகாரிங்க கண்டுக்கலையாம். இதனால், பணி தாமதமாவதாக விவசாயிகள் புகார் சொல்ல ஆரம்பிச்சிட்டாங்க...''''அறுபது வருஷ போராட்டம் நடத்தி, வந்த திட்டத்தை இப்படி பண்ணலாமா? அதிகாரிகள்தான் இதை சரி பண்ணனும்,'' என்ற சித்ரா, ''கொண்டத்துக்காளியம்மன் கோவில் உள்ள ஊர் இன்ஸ்., ஒரு பெண்ணுக்கு 'டார்ச்சர்' கொடுக்கிறாராம்,''''ஏங்க்கா... இதென்ன கொடுமையா இருக்கு. இதையெல்லாம் யாரும் கேட்க மாட்டாங்களா? அப்படி என்ன நடந்ததுங்க்கா?''''மித்து, சில மாசத்துக்கு முன்னாடி, காலேஜ் பொண்ணு ஒருவர், 'சூஸைசைட்அட்டெம்ப்ட்' செஞ்சார். இதைப்பத்தி பக்கத்து வீட்டு லேடிகிட்ட, அதிகாரி விசாரிச்சுட்டு, மொபைல்போன் நம்பரையும் வாங்கி, அடிக்கடி கூப்பிட்டு 'டார்ச்சர்' பண்றாராம்,''''ஆனா, அந்த பொண்ணு மறுக்கவே, 'கேஸ் போட்டு, உன்னையும் சிக்க வச்சுருவேன், இல்லாட்டி, உங்க வீட்டுக்காரரிடம் பணம் வாங்கி கொடு'ன்னு மிரட்டியிருக்காரு. 'முடியாது'ன்னு சொன்னதால, ரெண்டு லேடி போலீசை கூட்டிட்டு போயி, வீட்டில் வைச்ச, அந்த பொண்ணை கண்மூடித்தனமாக தாக்கியிருக்கார்,''''இதென்னக்கா, இப்படி நடக்குது?''''போலீஸ் போனதுக்கப்புறம், பிரைவேட் ஆஸ்பிட்டலில் டிரீட்மென்ட்டுக்கு சேர்த்துட்டாங்களாம். இதைப்பத்தி ஒரு என்கொயரி கூட நடத்தலைங்கிறதுதான் உச்சகட்ட கொடுமை,'' என ஆவேசப்பட்டாள் சித்ரா.''இத்தனைக்கும் உயரதிகாரியும் ஒரு லேடிதான். அவங்களும் கண்டுக்கலைன்னா எப்படின்னு தெரியலையே?'' ஆதங்கப்பட்ட மித்ரா, ''அக்கா... நான் புறப்படறேன். வீடு வரைக்கும் 'டிராப்' பண்றீங்களா?''''ஓ... யெஸ்?'' என்றவாறே சித்ரா எழுந்தாள்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE