கொரோனா பீதியால் தென்கொரியாவில் பள்ளிகளுக்கு விடுமுறை

Updated : பிப் 25, 2020 | Added : பிப் 25, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement

இந்த செய்தியை கேட்க

சியோல்;கிழக்காசிய நாடான தென் கொரியாவில், 'கொரோனா' வைரஸ் வேகமாக பரவுவதால், பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது;



latest tamil news



கால்பந்து போட்டிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. நாடு முழுவதும், 833 பேர், வைரஸ் அறிகுறியுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.


பாதிப்பு


நம் அண்டை நாடான சீனாவில், கடந்தாண்டு டிசம்பரில் பரவிய கொரோனா வைரஸ், பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. நேற்று மட்டும், 150 பேர் இறந்துள்ளனர். இதையடுத்து, சீனாவில் இந்த வைரஸ் தாக்குதலுக்கு பலியானோர் எண்ணிக்கை, 2,600 ஆக அதிகரித்துள்ளது.

தென் கொரியா, ஜப்பான், இத்தாலி, ஈரான் உள்ளிட்ட நாடுகளிலும், இந்த வைரஸ் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. கடந்த சில நாட்களாக, தென் கொரியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இதுவரை, 833 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இவர்களுக்கு மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பதற்றம்டேகு நகரில் தான், அதிகமானோர் இந்த நோய் பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர். நேற்று மட்டும், இரண்டு பேர் பலியாகினர். வைரஸ் வேகமாக பரவுவதால், தென் கொரியாவில் துவங்கவிருந்த கால்பந்து போட்டிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன; பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.


latest tamil news



மக்களிடையே பீதி ஏற்பட்டுள்ளதால், தென் கொரியா முழுவதும் பதற்றமான சூழல் நிலவுகிறது. கொரோனா வைரஸ், சீனாவுக்கு அடுத்தபடியாக தென் கொரியாவில் தான் அதிக பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. ஐரோப்பிய நாடான இத்தாலியிலும், கொரோனா வைரஸ் வேகமாக பரவுகிறது. 150 பேர், வைரஸ் பாதிப்புடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். தடைகுறிப்பிட்ட சில நகரங்களில் இருந்து, மக்கள் வெளியேறுவதற்கும், அந்த நகரங்களுக்குள், வேறு பகுதிகளில் இருந்து மக்கள் செல்வதற்கும் தடை விதிக்கப்பட்டு உள்ளது.

மத்திய கிழக்கு நாடான ஈரானில், எட்டு பேர், கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு பலியாகியுள்ளனர்; மேலும், 43 பேருக்கு வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Madhav - Chennai,இந்தியா
25-பிப்-202010:35:18 IST Report Abuse
Madhav தென் கொரியாவில் ஒரு குறிப்பிட்ட மத அமைப்பின் வழிபாட்டு தளத்திற்கு சென்றவர்கள் மிக அதிகமாக பாதிக்கப் பட்டு உள்ளார்கள். இதை பற்றியும் தெளிவாக கட்டுரையில் விளக்கி இருக்கலாமே
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X