பொது செய்தி

தமிழ்நாடு

பொதுத் தேர்வு நேரம் என்ன? மாணவர்களுக்கு விளக்க உத்தரவு

Updated : பிப் 25, 2020 | Added : பிப் 25, 2020 | கருத்துகள் (2)
Share
Advertisement
exam,public_exam,SSLC,HSC,தேர்வு,நேரம்,பத்தாம்வகுப்பு,பிளஸ்1,பிளஸ்2

இந்த செய்தியை கேட்க

சென்னை: 'பொதுத் தேர்வு நடத்தப்படும் நேரம் குறித்து, மாணவ - மாணவியருக்கு தெளிவாக விளக்கம் அளிக்க வேண்டும்' என, தலைமை ஆசிரியர்களை, கல்வி அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு, மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள் அனுப்பியுள்ள சுற்றறிக்கை: பத்தாம் வகுப்பு, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 வகுப்புகளுக்கு, பொதுத் தேர்வு நடத்தப்படுகிறது. அதில், தேர்வு எழுதும் நேரத்தை, இரண்டரை மணி நேரத்தில் இருந்து, மூன்று மணி நேரமாக அதிகரிக்க, பல்வேறு தரப்பிலும் கோரிக்கை எழுந்தது. இதையடுத்து, மூன்று மணி நேரமாக, தேர்வு நேரம் அதிகரிக்கப்பட்டுள்ளது.


latest tamil news



வினாத்தாளை வாசித்து பார்க்க, காலை, 10:00 முதல், 10:10 மணி வரை, 10 நிமிடங்கள் ஒதுக்கப்படும். விண்ணப்பதாரர்களின் விபரங்களை, தேர்வறை கண்காணிப்பாளர்கள் சரிபார்க்க, 10:10 முதல், ஐந்து நிமிடங்கள் ஒதுக்கப்படும். அதன் பின், 10:15 முதல், பகல், 1:15 மணி வரை, மூன்று மணி நேரம், தேர்வு எழுதுவதற்கான நேரம் ஒதுக்கப்படும். இந்த தகவலை, அனைத்து மாணவ - மாணவியருக்கும் ஆசிரியர்கள் தெளிவாக விளக்க வேண்டும். இவ்வாறு, சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
வால்டர் - Chennai,இந்தியா
25-பிப்-202012:26:11 IST Report Abuse
வால்டர் மற்றுமொரு பிரதான கோரிக்கை. தயவு செய்து பள்ளி தேர்வுகள் நடந்து முடிந்த பின்னர் தேர்தல் தேதிகளை அறிவியுங்கள். இந்த பிரச்சார அரைகுறை பீரங்கிகளின் காட்டு கத்தல்கள் மாணாக்கர்களின் படிப்பினை மிகவும் தொந்தரவு செய்யும் வகையில் இருக்கின்றன. அவர்களால் பைசா பிரயோஜனம் இல்லை.
Rate this:
Share this comment
Cancel
S.Baliah Seer - Chennai,இந்தியா
25-பிப்-202010:28:27 IST Report Abuse
S.Baliah Seer வெய்யல் காலங்களில் காலை 9.30 முதல் பகல் 12.30 வரை தேர்வு வைப்பதே மாணவர்களுக்கு உகந்தது. தேர்வு அறைகள் வெய்யல் தாக்காதவாறு காற்றோட்டமானதாக இருக்க வேண்டும். எந்த பாடத்தின் தேர்வு நடக்கிறதோ அப்படத்தின் மாஸ்டரை தேர்வு மையங்களில் சூப்பர்வைசராக போடுவது கேள்வி சம்பந்தமான சந்தேகங்களை தேர்வு எழுதும் மாணவர்கள் கேட்கும்போது பயனுள்ளதாக இருக்கும். தேர்வு என்றாலே மாணவர் பதட்டத்துடன்தான் இருப்பர். இதைப்போக்க சூப்பர்வைசர் மாணவ மாணவிகள் தேர்வு அறையில் நுழைந்ததும் "இந்த தேர்வு மட்டுமே உங்கள் வாழ்க்கையில்லை. சாதாரணமாக எழுதுங்கள் "என்று சிரித்த முகத்துடன் ஆறுதலாக சொல்லுவது நல்ல பயனைக் கொடுக்கும். இது மாணவர்களின் Anxiety -யை நிச்சயம் நீக்கும்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X