பொது செய்தி

தமிழ்நாடு

ஆறுமுகசாமி கமிஷன் பதவி 7வது முறையாக நீட்டிப்பு

Updated : பிப் 25, 2020 | Added : பிப் 25, 2020 | கருத்துகள் (5)
Share
Advertisement
Jayalalitha,death,Arumughaswamy_Commission,Apollo_Hospital,ஜெயலலிதா,ஆறுமுகசாமி_ஆணையம்,அப்பல்லோ

சென்னை: மறைந்த முன்னாள் முதல்வர், ஜெ., மரணத்தில் சந்தேகம் இருப்பதாக புகார்கள் எழுந்தன. இதுகுறித்து விசாரிக்க, ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில், விசாரணை ஆணையத்தை, 2017 செப்டம்பர், 25ல், தமிழக அரசு அமைத்தது. விசாரணையை மூன்று மாதத்தில் முடித்து, அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டிருந்தது.


latest tamil news



சென்னை சேப்பாக்கம், எழிலகம் வளாகத்தில் உள்ள கலச மஹாலில், ஆணையத்தின் அலுவலகம் அமைக்கப்பட்டது. அங்கு, பலரிடம் தீவிர விசாரணை நடந்து வந்தது. விசாரணை ஆணையத்தின் பதவிக்காலம், ஆறு முறை நீட்டிக்கப்பட்டது. இதற்கிடையில், ஜெ.,க்கு சிகிச்சை அளித்த அப்பல்லோ மருத்துவமனை சார்பில், உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில், ஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணைக்கு, இடைக்கால தடை விதிக்கப்பட்டது.

இந்நிலையில், விசாரணை ஆணையத்தின் பதவிக்காலம் நேற்றுடன் முடிவடைந்தது. அதனால், ஆணையத்தின் பதவிக்காலத்தை, மேலும் நான்கு மாதங்களுக்கு, அதாவது, ஜூன், 24 வரை நீட்டித்து, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தற்போது ஏழாவது முறையாக, பதவிக்காலம் நீட்டிக்கப்பட்டு உள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Nallavan Nallavan - என்னை மேலும் பிரபலப்படுத்திய போலிக்கு நன்றி ,இந்தியா
26-பிப்-202007:47:00 IST Report Abuse
Nallavan Nallavan சம்பந்தப்பட்டவர்கள் அதிகாரத்திலும், செல்வாக்குடனும் இருக்கிறார்கள் என்று புரிந்து கொள்ளவேண்டும் .....
Rate this:
Share this comment
Cancel
Krish - Chennai ,இந்தியா
26-பிப்-202007:23:10 IST Report Abuse
Krish Apollo ஏன் தடை கேட்க vendum ? உச்ச நீதிமன்றம் செய்தது ஏன் ??
Rate this:
Share this comment
Cancel
skv srinivasankrishnaveni - Bangalore,இந்தியா
25-பிப்-202011:19:11 IST Report Abuse
skv srinivasankrishnaveni இதுஒரு வீண்சிலவு ஜஸ்ட் ஒரு கண்ணாமூச்சி ஆட்டமேதான் . நோ யூஸ் ஆறுமுகனாருக்கு சுக்கிரதசை ,சசியை கைவிடாதுகள இஸ்துக்கினிபோவானுக
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X