பொது செய்தி

இந்தியா

டிரம்ப் தங்கிய அறையின் வாடகை ரூ.8 லட்சம்

Updated : பிப் 25, 2020 | Added : பிப் 25, 2020 | கருத்துகள் (10)
Share
Advertisement
DonaldTrump,Trump,Chanakya,US_President,India_visit,டிரம்ப்

இந்த செய்தியை கேட்க

புதுடில்லி: இந்தியாவில் இப்படி ஒரு இடம் இருக்கிறதா என்று மூக்கின் மேல் விரல் வைக்கக் கூடிய அளவுக்கு வசதிகள் கொண்ட அறையில், டிரம்ப் மற்றும் மெலனியா தங்கினர்.

டில்லியின் சர்தார் படேல் மார்க் பகுதியில் உள்ள, ஐ.டி.சி., மவுரா ஓட்டலில் உள்ள -'த கிராண்ட் பிரசிடென்சியல் சூட்' அல்லது 'சாணக்கியா சூட்' என்றழைக்கப்படும், 4,600 சதுர அடி கொண்ட அறையில், டிரம்ப் நேற்று (பிப்., 24) இரவில் தங்கினார். இங்கு ஒரு நாள் இரவு தங்குவதற்கான வாடகை, 8 லட்சம் ரூபாய்.


latest tamil newsஓட்டலின் 14வது மாடியில் அமைந்துள்ள அறையில், பட்டால் ஆன பேனல்களால் அமைக்கப்பட்ட சுவர், மரத்தாலான தரை மற்றும் மிகச் சிறந்த உள்கட்டமைப்பு, அலங்காரம் ஆகியவை, பூலோக சொர்க்கமா என, வாயைப் பிளக்க வைக்கும். மிகப் பெரிய வரவேற்பறை, மயில்கள் அடிப்படையிலான, 12 பேர் அமரக் கூடிய தனி உணவருந்தும் பகுதி, ஜிம் உள்ளிட்ட வசதிகள் இங்கு உள்ளன.


வெளியே காற்றின் மாசு எவ்வளவாக இருந்தாலும், மலைப் பிரதேசத்தில் இருப்பது போல், மிகவும் சுத்தமான காற்று இங்கும் நிலவும். டிரம்ப் மற்றும் குடும்பத்தாருக்கு விரும்பிய உணவை சமைக்க தனியாக சமையல் கலை நிபுணர் நியமிக்கப்பட்டுள்ளார். இந்த ஓட்டலை சுற்றிலும் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (10)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Mani . V - Singapore,சிங்கப்பூர்
26-பிப்-202004:16:56 IST Report Abuse
Mani . V அட போங்க பாஸ், எங்க ஆளு போடும் கோட்டு சூட்டே பத்து லட்சம்.
Rate this:
mukundan - chennai,இந்தியா
26-பிப்-202010:34:19 IST Report Abuse
mukundanதம்பி இது ரொம்ப பழைய கதை. நீங்க இன்னும் கோமா ல தான் இருக்கீங்க போல.... சீக்கிரம் எழுந்திரிங்க....
Rate this:
Cancel
dandy - vienna,ஆஸ்திரியா
25-பிப்-202014:15:17 IST Report Abuse
dandy ஹி ஹி ஹி இதற்கு இந்த வாய் பிளப்பு என்றால் ஒரு இரவுக்கு USD 20,000, USD 50,000 - கட்டணம் அறவிடும் விடுதிகளை என்ன என்பது?..
Rate this:
Sanny - sydney,ஆஸ்திரேலியா
26-பிப்-202005:17:10 IST Report Abuse
Sanny ஆஸ்திரேலியாவுக்கு வரும் அமெரிக்க, நடிகர், பாடகர், டென்னிஸ் விளையாட்டு வீரரர்கள். இந்திய தொழில் அதிபர்கள் தங்கும் இது போன்ற அறைகளை 35,000 டாலரில் இருந்து ஆரம்பிக்கும், டெனிஸ் வீரர்கள் வந்தால் சுமார் இரண்டு அல்லது மூன்று வாரம் Grand Slam முடியும் வரை இருப்பார்கள்....
Rate this:
Cancel
ackn275 - doha,கத்தார்
25-பிப்-202012:44:01 IST Report Abuse
ackn275 அந்த பணத்தில் எத்தனை ஏழைகளுக்கு வீடு கட்டி கொடுத்திருக்கலாமுன்னு இன்னுமா போராளி கூட்டம் கிளம்பல?
Rate this:
Sanny - sydney,ஆஸ்திரேலியா
26-பிப்-202005:20:20 IST Report Abuse
Sanny போராளிகளுக்கு எதுக்கு போராடனும் என்று தெரியும், அவங்க மூடர் கூட்டம் கிடையாது, ஒரு நாட்டு ஜனாதிபதி வந்தால் என்ன சாதாரண ஹோட்டலில் தங்க வைக்கவா முடியும் என்பதை புரிந்து கொள்வார்கள்....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X