உலகம் முழுவதும் 'கொரோனா': சுகாதார அமைப்பு எச்சரிக்கை

Updated : பிப் 25, 2020 | Added : பிப் 25, 2020 | கருத்துகள் (4)
Share
Advertisement

இந்த செய்தியை கேட்க

ஜெனீவா: 'கோவிட் - 19' எனப் பெயரிடப்பட்டுள்ள, 'கொரோனா வைரஸ்' உலகம் முழுவதும் பரவ வாய்ப்பு உள்ளதாகவும், உலக நாடுகள் அனைத்தும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும் உலகச் சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.



latest tamil news


சீனாவின் வுஹான் நகரில் உருவான கொரோனா என்ற உயிர்க்கொல்லி வைரஸ், தற்போது, தென் கொரியா, இத்தாலி, ஈரான் உள்ளிட்ட நாடுகளில் தனது ஆதிக்கத்தை செலுத்தத் துவங்கியுள்ளது.சீனாவுக்கு வெளியே, 30 நாடுகளில், 1,200 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. 20 பேர் உயிரிழந்துள்ளனர்.


latest tamil news


இந்நிலையில், சுவிட்சர்லாந்தில் ஜெனீவா நகரில், உலகச் சுகாதார அமைப்பின் இயக்குனர் டெட்ரோஸ் அதனோம் கிப்ரயெசூஸ் தெரிவித்துள்ளதாவது:சீனாவுடன் தொடர்பே இல்லாத நாடுகளுக்கும் கொரோனா வைரஸ் பரவத் துவங்கியுள்ளது கவலையளிக்கிறது. வைரஸ் பரவுதலைக் கட்டுப்படுத்த எடுக்கும் முயற்சிகளும் கைகொடுப்பதாகத் தெரியவில்லை. இந்த வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில், உயிரிழப்பவர்களின் சதவிகிதம் ஒன்றிலிருந்து தற்போது இரண்டாக அதிகரித்துள்ளது.இத்தாலி, ஈரான் மற்றும் தென் கொரியா ஆகிய நாடுகளில் கொரோனோ தொற்று இருப்பது கண்டறியப்பட்டது, மிகவும் கவலைக்குரியது.

அந்த நாடுகளில் கொரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டவருக்கு, சீனாவுடன் நேரடியாக எந்தத் தொடர்பு இல்லை. சீனாவிற்கு அவர் பயணம் மேற்கொண்டதற்கான ஆதாரமும் இல்லை. அப்படி இருக்கும் போது, எப்படி இந்த வைரஸ் தொற்று ஏற்பட்டது என்பது புரியவில்லை. இதனால், கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. உலக நாடுகள் அனைத்தும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.இவ்வாறு டெட்ரோஸ் தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரசைக் கட்டுப்படுத்துவதற்கான முயற்சிகள் பலனளிக்காத நிலையில், உலகச் சுகாதார அமைப்பின் எச்சரிக்கை உலக நாடுகளை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
25-பிப்-202019:29:32 IST Report Abuse
Radhakrishnan Radhakrishnan நாடுகள் அனைத்தும் சீனாவுடன் ,போக்குவரத்து நிறுத்த வேண்டும் சீனாவில் வாங்கிய உணவு பொருளை பயன் படுத்த கூடாது ?
Rate this:
Share this comment
Cancel
Malick Raja - jeddah,சவுதி அரேபியா
25-பிப்-202011:30:56 IST Report Abuse
Malick Raja கொரோனா மனிதர்களால் உருவாக்கப்பட்டு தனக்குத்தானே தீங்கிழைத்துக் கொண்டிருப்பது உண்மை.. காரணம் அதீதமாக செயற்கையை அன்பவித்து தற்காலிக மகிழ்வை அடைந்ததே ஒரே காரணம்.. மனிதன் தனக்கு கிடைக்கப் பெற்றதைவிட மேலதிகமாக அடைய நினைந்ததன் விளைவு.. அடுத்து மிக முக்கியமாக மனிதநேயம் ,மனித மாண்புகள் முற்றிலும் இழந்ததும் ஒரு காரணம் .. இனி இதெல்லாம் நடைமுறைக்கு வராதவரை கொரோனா அல்ல இதைவிட கொடிய நிலைகள் வருவதை தடுக்கவே முடியாது.. தவறுதலுக்கு திருத்தம் இல்லாதவரை உணராதவரை.. இகழ் நிகழ்வுகள் வாடிக்கையாகிவிடும்
Rate this:
Share this comment
Cancel
Rajarajan - madurai,இந்தியா
25-பிப்-202011:28:07 IST Report Abuse
Rajarajan இந்த வைரஸ், மெட்டல், துணி, பிளாஸ்டிக் போன்ற பொருள்களில் பல மணிநேரம் வாழுமாம். அதனால தான் ரொம்ப ஈஸியா பரவிடுச்சு. வெயில் நல்லா சுட ஆரம்பிச்சா இது ஒழியும், வெய்யில் இல்லாத நாடுகள் ரொம்ப கவனமா இருந்தே ஆவனும்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X