பொது செய்தி

இந்தியா

மஹாத்மா காந்தி நினைவிடத்தில் டிரம்ப் மரியாதை

Updated : பிப் 25, 2020 | Added : பிப் 25, 2020 | கருத்துகள் (2)
Share
Advertisement
Rashtrapati Bhavan, donaldtrump, donaldtrump, gandhi, rajghat,

இந்த செய்தியை கேட்க

புதுடில்லி: டில்லியின் ராஜ்காட்டில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடத்தில் அமெரிக்க அதிபர் டிரம்ப் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.


latest tamil news


அரசு முறை பயணமாக நேற்று(பிப்.,24) ஆமதாபாத் வந்த அமெரிக்க அதிபர் டிரம்ப் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்ற பின்னர் இரவு ஆக்ரா வந்து தாஜ்மஹாலை சுற்றி பார்த்தார். இன்று, ஜனாதிபதி மாளிகையில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. ஜனாதிபதி, பிரதமர் மற்றும் அமைச்சர்கள் டிரம்ப்பை வரவேற்றவர். தொடர்ந்து, சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. முப்படை வீரர்கள் மரியாதையையும் அவர் ஏற்று கொண்டார்.


latest tamil news


Advertisement


இதனை தொடர்ந்து, ராஜ்காட் சென்ற டிரம்ப், மஹாத்மா காந்தி நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து மரியாதை சென்றார். மனைவி மெலானியாவும் உடன் இருந்தார்.


latest tamil news
இதன் பின்னர், அங்கிருந்த பார்வையாளர் புத்தகத்தில், டிரம்ப்பும், மெலனியாவும் தனது கருத்தை பதிவு செய்தனர்.


latest tamil newslatest tamil news
latest tamil newslatest tamil news


அதில் டிரம்ப் கூறியுள்ளதாவது: இறையாண்மை மிக்க அருமையான இந்தியாவை, காண அமெரிக்கா விரும்புகிறது. மஹாத்மா காந்தியின் கனவும் அதுதான். இது எனக்கு தரப்பட்ட மிகப்பெரிய மரியாதை. இவ்வாறு அதில் கூறியுள்ளார்.


latest tamil newslatest tamil news


பின்னர், டிரம்ப்பிற்கு காந்தி சிலை பரிசாக அளிக்கப்பட்டது. மரக்கன்று ஒன்றையும், டிரம்ப்பும், மெலனியாவும் அந்த வளாகத்தில் நட்டு வைத்தனர்.


மாணவர்களுடன் கலந்துரையாடல்


latest tamil newsடில்லி வந்துள்ள அமெரிக்க அதிபர் டிரம்ப் மனைவி மெலனியா, நானக்பூர் அரசு பள்ளிக்கு வந்தார் அங்கு, மாணவர்கள் பூங்கொத்து கொடுத்தும், ஆரத்தி எடுத்தும் வரவேற்றனர். பின்னர், அவர்களுடன் மெலனியா கலந்துரையாடினார். தொடர்ந்து பாடம் எடுக்கும் முறையை பார்வையிட்டார்.


latest tamil news


Advertisement
வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Natarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா
25-பிப்-202015:41:03 IST Report Abuse
Natarajan Ramanathan காந்தி புகழ் .
Rate this:
Cancel
john - riyadh,சவுதி அரேபியா
25-பிப்-202011:21:54 IST Report Abuse
john Yes, of course he should be allowed to offer his respect to Mahatma Gandhi only not to Nathuram Vinayaka Godse.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X