வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: இந்தியா வந்துள்ள அமெரிக்க அதிபர் டிரம்ப், டில்லியில் உள்ள ஐதராபாத் மாளிகையில் பிரதமர் மோடியுடன் முக்கிய பேச்சு நடத்தினார். பின்னர் இருவரும் பத்திரிகையாளர்களுக்கு கூட்டா பேட்டி அளித்தனர்.

முன்னேற்றம்
பிரதமர் மோடி கூறியதாவது: அதிபர் டிரம்ப் குடும்பத்தினருடன் இந்தியா வந்துள்ளது பெரும் மகிழ்ச்சி அளிக்கிறது. இவரது இந்திய வருகைக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன். நேற்று அவருக்கு வரலாற்று சிறப்புமிக்க வரவேற்பு அளிக்கப்பட்டது. கடந்த 8 மாதங்களில் 5 முறை அதிபர் டிரம்பை சந்தித்து பேசியுள்ளேன். இந்தியா- அமெரிக்க உறவு குறித்து இன்று விவாதித்தோம். இரு நாட்டு உறவு மக்களின் முன்னேற்றத்திற்கானது. சுகாதாரம், கல்வி ,பாதுகாப்பு. துறை குறித்து விவாதித்தோம். எண்ணெய் , இறக்குமதி, எரிசக்தி ,வர்த்தகம், பாதுகாப்பு துறையில் நடந்த பேச்சு நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. பாதுகாப்பு துறை உற்பத்தியில் இரு நாடுகளும் இணைந்து செயலாற்ற முடிவு செய்துள்ளோம். அவருடன் நடந்த பேச்சுவார்த்தை மிக பயனுள்ளதாக இருந்தது. இவ்வாறு மோடி கூறினார்.

பயங்கரவாதத்தை ஒழிப்போம்
அதிபர் டிரம்ப் பேசியதாவது: இந்திய மக்கள் அளித்த வரவேற்பை மறக்க முடியாது. இந்தியா- அமெரிக்கா இடையில் கலாசார உறவு உள்ளது. பிரதமர் மோடி சிறந்த நண்பர். பாதுகாப்பு துறையில் ஒத்துழைப்பை அதிகரிக்க முடிவு செய்துள்ளோம். பல்வேறு துறைகளில் ஏற்பட்டள்ள ஒப்பந்தம் மகிழ்ச்சி அளிக்கிறது. இஸ்லாமிய பயங்கரவாதத்தை ஒழிப்பதில் இரு நாடுகளும் இணைந்து செயலாற்றுவோம்.

இன்றைய பேச்சு மிக ஆக்கப்பூர்வமாக அமைந்து இருந்தது. வர்த்தகம் தொடர்பான விஷயங்கள் அதிகள் விவாதிக்கப்பட்டன . அமெரிக்காவின் ஏற்றுமதியை 60 சதவீதமாக உயர்த்த முடிவு செய்துள்ளோம். அப்பாச்சி, ரோமியோ ஹெலிகாப்டர்கள், ராணுவ தளவாடங்கள் இந்தியாவுக்கு தர முடிவு செய்துள்ளோம். இவ்வாறு டிரம்ப் தெரிவித்தார்.