யாருக்கு ராஜ்யசபா எம்.பி., பதவி? புதுமுகங்களா? | Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

யாருக்கு ராஜ்யசபா எம்.பி., பதவி? புதுமுகங்களா?

Updated : பிப் 25, 2020 | Added : பிப் 25, 2020 | கருத்துகள் (4)
Share

புதுடில்லி: 17 மாநிலங்களை சேர்ந்த 55 பேருக்கான ராஜ்யசபா தேர்தல் வரும் மார்ச் -26ல் நடக்கவுள்ளதாக தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் காலியாகும் 6 பதவிகளில் புதிய முகங்களுக்கு வாய்ப்பு உள்ளதா என்ற கேள்வி எழுந்துள்ளது.



latest tamil news



தேர்தல் அறிவிக்கை



ராஜ்யசபா தேர்தல் தொடர்பாக தேர்தல் கமிஷன் அறிவிப்பாணையில் கூறப்பட்டு இருப்பதாவது; தமிழகம் உள்பட 17 மாநிலங்களை சேர்ந்த 55 பேருக்கான ராஜ்யசபா பதவிக்காலம் வரும் ஏப். 2 ம் தேதி முடிகிறது.

இதனையடுத்து தேர்தல் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதன்படி வரும் மார்ச் மாதம் 6 ம் தேதி வேட்பு மனு தாக்கல் துவங்குகிறது. மார்ச்-13 ம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்ய கடைசி நாள். மார்ச்-16 ம் தேதி வேட்புமனு பரிசீலனையும், மார்ச்-18ம் தேதி திரும்ப பெறுவதற்கு கடைசி நாள் ஆகும். மார்ச் -26ல் தேர்தல் நடத்தப்பட்டு அன்றே முவடிவுகள் அறிவிக்கப்படும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.


அதிமுகவில் யார்?


தமிழகத்தை பொறுத்தவரை அதிமுகவை சேர்ந்த விஜிலா சத்யானந்த், சசிகலா புஷ்பா, முத்துக்கருப்பன், செல்வராஜ், திமுகவைவை சேர்ந்த திருச்சி சிவா, இடதுசாரியை சேர்ந்த டி.கே ரங்கராஜன் ஆகியோர் பதவிக்காலம் முடிகிறது. இந்த 6 பேரில் மீண்டும் யாருக்கு வாய்ப்பு கிட்டும் என்ற ஏக்கமும், புதிய முகங்களுக்கு ஜாக்பாட் அடிக்குமா என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.
அதிமுகவை பொறுத்தவரை , கே.பி.,முனுசாமி, நத்தம் விஸ்வநாதன், முன்னாள் சபாநாயகர் தம்பித்துரை, முன்னாள் எம்.பி., மைத்ரேயன், சவுந்திரராஜன், மனோஜ் பாண்டியன், இலக்கிய அணி இணை செயலாளரும் நடிகருமான ஜெயகோவிந்தன் ஆகியோர் எப்படியாவது இந்த பதவியை பிடிக்க வேண்டும் என காத்திருக்கின்றனர். ஆனால் முதல்வர் இபிஎஸ் சாமானியனும் பதவிக்கு வரலாம் என்ற நிலை அதிமுகவில் உண்டு என்று அடிக்கடி கூறுவதால் புதிய முகங்களுக்கு வாய்ப்பு கொடுப்பார் என்று கூறப்படுகிறது.


latest tamil news


கே.பி.,முனுசாமி, நத்தம் விஸ்வநாதன், முன்னாள் சபாநாயகர் தம்பித்துரை ஆகியோர் தேர்தலில் தோல்வியுற்றவர்கள். இதனால் இவர்களுக்கு வாய்ப்பு கொடுக்க கூடாது என கட்சிக்குள் பேச்சு அடிபடுகிறது. பொறுத்திருந்து பார்ப்போம்.


கட்சி தலைமைதான் முடிவு


இது போல் திமுகவில் திருச்சி சிவா, செல்வராஜ், டி.கே ரங்கராஜன் ஆகிய 3 பேரில் சிவாவுக்கே கிடைக்க வாய்ப்பு அதிகம் உள்ளதாக கூறப்படுகிறது. அதே நேரத்தில் என்.ஆர்.இளங்கோவன், ஜின்னா, அப்துல்லா, கிறிஸ்தவ நல்லெண்ண இயக்க தலைவர் இனிகோ இருதயராஜ் ஆகியோரும் பதவி கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பில் உள்ளனர்.கட்சி தலைமை எடுக்கும் முடிவின்படியே பதவிகள் உரியவருக்கு போய்ச்சேரும் என்பது மட்டும் உண்மை.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X