பொது செய்தி

தமிழ்நாடு

கே.வி.ஜெயஸ்ரீக்கு சாகித்ய அகாடமி விருது

Added : பிப் 25, 2020
Share
Advertisement
kvjeyasree, கேவிஜெயஸ்ரீ, கே.வி.ஜெயஸ்ரீ, சாகித்யஅகாடமி

சென்னை: தமிழில் மொழி பெயர்ப்புக்கான சாகித்ய அகாடமி விருது கே.வி.ஜெயஸ்ரீக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.மனோஜ் குரூர் எழுதிய 'நிலம் பூத்து மலர்ந்த நாள்' என்ற மலையாள நாவலை தமிழில் மொழி பெயர்த்ததுக்காக, அவருக்கு இந்த விருது வழங்கப்பட உள்ளது. நாட்டின் முக்கிய 24 மொழிகளில் வெளியாகும் சிறுகதை, நாவல் , இலக்கிய விமர்சனம் போன்றவற்றிற்கு ஆண்டுதோறும் சாகித்ய அகாடமி வருது வழங்கப்படுகிறது. இந்த ஆண்டிற்கான சாகித்ய அகாடமி விருது, மலையாள எழுத்தாளர் மனோஜ் குரூரின் 'நிலம் பூத்து மலர்ந்த நாள் ' என்ற நாவலை தமிழில் சிறப்பாக மொழி பெயர்த்ததற்காக கே.வி.ஜெயஸ்ரீக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த நாவல், சங்க காலப் பாணர், கூத்தர்களின் ஆற்றுப்படையாக உரைநடையாக வந்துள்ளதுடன், பாரியின் கொலையை கதைகளனாக கொண்டது. ஜெயஸ்ரீக்கு, ரூ.50 ஆயிரம் ரொக்கம், செம்புப் பட்டயமும் வழங்கப்பட உள்ளது. விருது எப்போதும் வழங்கப்படும் என அறிவிக்கப்படவில்லை. கேரளாவை பூர்விகமாக கொண்ட ஜெயஸ்ரீ, அவர் படித்து, வளர்ந்தது எல்லாம் திருவண்ணாமலையை சேர்ந்தவர். விருது தொடர்பாக ஜெயஸ்ரீ கூறுகையில், மலையாள எழுத்தாளர் மனோஜ் குரூரின் நாவலை மொழிபெயர்க்குமாறு, எழுத்தாளர் ஜெயமோகன் பரிந்துரை செய்தார். சங்க கால தமிழ் இலக்கியத்தை குறித்து மனோஜ் குரூர் எழுதியது வியப்பை அளித்தது. மொழிபெயர்த்ததற்காக சாகித்ய அகாடமி விருதுக்கு தேர்வானது மகிழ்ச்சி அளிக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X