டில்லி வன்முறை உணர்ச்சியற்றவர்களை தேர்ந்தெடுத்ததன் விலை: சிதம்பரம்

Updated : பிப் 25, 2020 | Added : பிப் 25, 2020 | கருத்துகள் (195)
Share
Advertisement
Delhi, Violence, Chidambram, Congress, Insensitive, Leaders, CAA, சிஏஏ, சிதம்பரம், டில்லி, வன்முறை, உணர்ச்சியற்றவர்கள், ப சிதம்பரம், காங்கிரஸ்

புதுடில்லி: டில்லி வன்முறை தொடர்பாக காங்., எம்பி சிதம்பரம், உணர்ச்சியற்றவர்களை மக்கள் தேர்ந்தெடுத்ததற்கு விலை கொடுத்து வருவதாக விமர்சித்துள்ளார்.

டில்லியில் குடியுரிமை திருத்தச் சட்ட (சிஏஏ) ஆதரவாளர்களுக்கும், எதிர்ப்பாளர்களுக்கும் இடையே நேற்று (பிப்.,24) ஏற்பட்ட மோதலில் வன்முறை வெடித்தது. குறிப்பாக, வடகிழக்கு டில்லியின் யாபிராபாத், மஜ்பூர் மற்றும் பஜான்புரா பகுதிகளில் வன்முறை வெடித்தது. இருதரப்பினர் மாறி மாறி கற்களை வீசி தாக்குதலில் ஈடுபட்டனர். வன்முறையில் வீடு, கடை, வாகனங்கள், பெட்ரோல் நிலையம் சூறையாடப்பட்டன. இதில், ஒரு போலீஸ்காரர் உள்பட ஏழு பேர் பலியாகி உள்ளனர்; 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.


latest tamil news


இந்த சம்பவம் குறித்து காங்., எம்பி., சிதம்பரம் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது: டில்லியில் நேற்று நடந்த வன்முறையால் உயிரிழப்பு ஏற்பட்டது அதிர்ச்சியளிக்கிறது. இது கடும் கண்டனத்திற்கு உரியது. சிஏஏ பிரிவினையை ஏற்படுத்தும் எனவும், அதனை கைவிடவேண்டும் எனவும் எச்சரித்தோம். எங்களின் எச்சரிக்கை செவிடர்கள் காதில் தான் விழுந்துள்ளது. உணர்ச்சியற்ற மற்றும் குறுகிய நோக்கமுடையவர்களை தலைவர்களாக மக்கள் தேர்ந்தெடுத்ததற்கு விலை கொடுத்து வருகின்றனர்.


latest tamil news


இப்போது கூட சிஏஏ.,க்கு எதிராக போராடுபவர்களின் குரல்களை கேட்டறிந்து, சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு வரும்வரை சிஏஏ சட்டத்தை நிறுத்தி வைக்கவேண்டும். தற்போது குடியுரிமை சட்டம் 1955ன் படி எந்தவித திருத்தமும் இல்லாமல் வாழ்ந்து வருகின்றனர். இந்த சட்டத்தில் திருத்தம் கொண்டுவருவதன் அவசியம் என்ன? உடனடியாக சிஏஏ.,வை நீக்க வேண்டும். இவ்வாறு சிதம்பரம் பதிவிட்டுள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (195)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
mohandas - sydney,ஆஸ்திரேலியா
02-மார்-202009:44:31 IST Report Abuse
mohandas அண்ணா நீ திருடியதை மறைக்க எதோ பேசுகிறாய். மன்மோகன்சிங் என்ன சொன்னார் இந்த சட்டத்தை வலியுறுத்தினார். மக்களுக்கு ஒன்றும் தெரியாது என்று எண்ணாதே
Rate this:
Cancel
Nalla Paiyan - karaikal,இந்தியா
01-மார்-202022:43:18 IST Report Abuse
Nalla Paiyan நீயே ஜாமீன்ல இருக்க நெனப்புல இருக்கட்டும்....
Rate this:
Cancel
A Selvaraj - Arani,இந்தியா
01-மார்-202012:06:40 IST Report Abuse
A Selvaraj எப்படி இருந்த நானு இப்படி ஆயிட்டேன்? இல்லாத ஹிந்து தீவிரவாதத்தை சோனியாயை மகிழ்விக்க ... தீவிரவாதம் என்று சொன்ன போது எப்படி இருந்தது. திஹார் சிறையில் காத்துகின்னு உள்ளது. அப்பாவி முஸ்லிம்களை மூட்டிவிட்டது நீயும் ராகுல் காந்தியும் இப்போ ட்ராமா போடுவது அசிங்கமா இல்லை? அது சரி பப்பு மூட்டிவிட்டு விட்டு எங்கே எஸ்கேப் ஆயிட்டாரு? இப்போ வேற என்ன சதி நடக்க தயார் செய்ய போய் இருக்கிறார் ?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X