பொது செய்தி

இந்தியா

டிரம்பின் இந்திய வருகை: இருநாட்டினரும் கூகுளில் தேடியது என்ன?

Updated : பிப் 25, 2020 | Added : பிப் 25, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement
GoogleSeach, Trump, IndiaVisit, India, America, What is India, Trending, Donald Trump, கூகுள், டிரம்ப், இந்தியா வருகை, இந்தியா, அமெரிக்கா, டிரண்டிங், டொனால்ட் டிரம்ப்

புதுடில்லி: அமெரிக்க அதிபர் டிரம்ப் இந்தியா வருவதை உறுதிப்படுத்தியதில் இருந்து கடந்த ஒரு வாரமாக கூகுளில் இந்தியா, அமெரிக்காவை சேர்ந்தவர்கள் அதிகம் தேடி விபரங்கள் வெளியாகியுள்ளன.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் 2 நாள் சுற்றுப்பயணமாக இந்தியா வந்துள்ளார். டிரம்பின் இந்த பயணம் உறுதி செய்யப்பட்டதில் இருந்து அது தொடர்பான பரபரப்பும், தேடலும் இந்தியர்கள் மற்றும் அமெரிக்கர்களிடம் தென்பட்டது. இது குறித்த விபரங்களை அறிய கூகுளில் தேடிய கேள்விகள் என்ன என்பது தற்போது வெளியாகியுள்ளது. முதலில் இந்தியர்கள் கூகுளில் அதிகம் தேடிய விஷயங்கள் என்னென்ன என்பதை பார்க்கலாம்.


latest tamil news


டிரம்ப் தங்கியிருந்த 'ஐடிசி மயூரா ஹோட்டல்' பற்றி தான் அதிகமான இந்தியர்கள் தேடியுள்ளனர். அதற்கு அடுத்த இடத்தில் டொனால்ட் டிரம்ப் பாகுபலி என தேடப்பட்டுள்ளது. பாகுபலி திரைப்படத்தின் காட்சியை சித்தரித்து டுவிட்டரில் வெளியான வீடியோவை டிரம்ப் ரீ-டுவிட் செய்தார். அது பிரபலமான நிலையில், டுவிட்டரில் இருந்து வீடியோ நீக்கப்பட்டது. இதனால் வீடியோவை பார்க்க கூகுளிலில் அதிகம் தேடியுள்ளனர். அடுத்தடுத்த இடங்களில், டிரம்பின் குடும்பம், அவரின் மகள் இவாங்கா ஆகியவை இடம்பெற்றுள்ளன. இந்த விஷயங்கள் எல்லாம் அதிகம் தேடிய மாநிலங்களில் குஜராத் முதலிடத்திலும், டாமன் டையு, டில்லி அடுத்த இடங்களிலும் உள்ளன.


latest tamil news


அமெரிக்கர்களை பொறுத்தவரை, இந்தியா எங்கே உள்ளது? இந்தியா என்றால் என்ன? போன்ற கேள்விகள் தான் அதிகமானோர் தேடியுள்ளனர். அதேபோல் இந்திய பிரதமர் மோடியையும், நமஸ்தே வார்த்தைக்கான பொருளையும், தாஜ்மஹால் பற்றியும் கூகுளில் தேடியுள்ளனர். இந்த தேடல்களை நியூஜெர்சி மாகாணத்தை சேர்ந்தவர்களே அதிகமானோர் மேற்கொண்டுள்ளனர்.

Advertisement
வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
JINU - TAMIL NADU /KANYAKUMARI DISTRIC,இந்தியா
25-பிப்-202017:47:47 IST Report Abuse
JINU GOD BLESS INDIA
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X