சீனாவில் வனவிலங்குகளை உண்ணவும் விற்கவும் தடை

Added : பிப் 25, 2020 | கருத்துகள் (42)
Share
Advertisement
சீனா, வனவிலங்குகளை உண்ண தடை, coronavirus, china bans, trade eating wild animals,

பீஜிங்: மனிதனைத் தவிர அனைத்து உயிர்களையும் கொன்று தின்றதால், உயிரைக் குடிக்கும் கொரோனா வைரஸ் பாதிப்புக்குள்ளான சீனா, வன விலங்குகளை விற்கவும் உண்ணவும் தடை விதித்துள்ளது.

சீனாவின் வுஹான் நகரில் உருவான கொரோனா வைரசால், சீனாவில் இதுவரை, 2,500க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்; 77,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சீனாவுக்கு வெளியே, 30 நாடுகளில், 1,200 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. வேகமாகப் பரவிவரும் வைரசை கட்டுப்படுத்த, முழுமையான முயற்சிகளை சீன அரசு எடுத்திருந்தாலும், அதில் வெற்றி கொள்ள முடியாமல் திணறுகிறது சீனா


latest tamil news




இந்நிலையில், 'சீனாவில் நடைபெறும் வனவிலங்குகள் வர்த்தகமே இந்த வைரஸ் தோன்றியதற்கும் பரவியதற்கும் காரணம்' எனவும், 'சீனர்கள் விரும்பி உண்ணும் ஏதோவொரு விலங்கிடமிருந்தே இந்த வைரஸ் தொற்று மனிதர்களுக்கு பரவியிருக்கிறது' என்றும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.


latest tamil news




இதனால், சீனாவில் வனவிலங்குகளை விற்கவும் உண்ணவும் உடனடித் தடையை, சீன அரசு அமல்படுத்தியுள்ளது. இதற்கு, சீன பாராளுமன்றத்தின் உயர்மட்ட கமிட்டி ஒப்புதல் வழங்கியுள்ளது.
சார்ஸ் வைரஸ் பரவிய போது, வனவிலங்கு வர்த்தகத்துக்கு மட்டும், சீன அரசு இடைக்கால தடை விதித்திருந்தது.


latest tamil news




உலக நாடுகளுக்குக் கண்டனம்



'சீனர்கள் மனிதனைத் தவிர அனைத்து உயிர்களையும் கொன்று தின்பதால், மனிதர்களின் உயிரைக் குடிக்கும் கொடிய வைரஸ்கள் அங்கு உருவாகின்றன என, பல நாடுகளைச் சேர்ந்தவர்களும் கொரோனா வைரஸ் உருவான நாளில் இருந்து, கருத்துத் தெரிவித்து வந்தனர். இதற்கு கடந்த வாரம், 'தமது உணவுப் பழக்க வழக்கங்களை யாரும் கொச்சைப்படுத்த வேண்டாம்' என, சீன அரசு, உலக நாடுகளுக்குக் கண்டனம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement




வாசகர் கருத்து (42)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sankar - Nellai,இந்தியா
29-பிப்-202017:08:02 IST Report Abuse
sankar புலால் உணவை தவிர்த்தாலே போதும் - நோய்கள் வராது - சொன்னால் சிலருக்கு பிடிக்காது
Rate this:
Cancel
Rajagopal - Los Angeles,யூ.எஸ்.ஏ
27-பிப்-202001:55:42 IST Report Abuse
Rajagopal இதை எதிர்த்து சீமான் இன்று தெருக் கோடியில் முழங்க இருக்கிறார். நான் எதை வேண்டுமானாலும் தின்பேன். அதைத் தடுக்க நீ யார் என்ற தலைப்பில் பேச இருக்கிறார். விலைவாசி இருக்கும் நிலையில் எலி, பூனை, அணில், ஆமை, பாம்பு போன்றவற்றைத் தின்றால் தான் உயிர் வாழ முடியும் என்பதை முன்னமே அறிந்தவன் தமிழன் என்பதை வலியுறுத்த இருக்கிறார்.
Rate this:
Cancel
Viswam - Mumbai,இந்தியா
26-பிப்-202015:14:24 IST Report Abuse
Viswam எது நகர்ந்தாலும் திங்கற அளவுக்கு சோத்து பஞ்சமா சீனாவில்? அதுவும் உசுரோட இருக்கும்போது வாயிலே போட்டுக்கறானுங்களே, நாக்கு கண்ட்ரோல் இல்லாம போயிடுச்சா? இல்ல இதை தின்னா தீராத வியாதி எல்லாம் போயிடும்ன்னு எந்த கேனையனாவது சொன்னானா? புதுவகை பிராணி சாப்பிடுவது /விருந்து வைப்பது ஆடம்பரமாக கருதப்படுகிறதா? ஒரு எழவும் புரியலை, ஆனா எப்ப பார்த்தாலும் அங்கே இருந்து தான் ஒரு புது வியாதி வெளியே வருது. எல்லா நாடுகளும் சீனாக்காரனை கண்டித்தாலும் உறுப்படுவார்களா என்று தெரியவில்லை. இந்த மாதிரி விபரீதம் நடந்ததால் புத்தி தெளிந்து ஒரு வரை அறைக்குள் வந்தால் ஒட்டுமொத்த உலகத்திற்கும் நல்லது அதுவே பயோலொஜிக்கல் வெப்பன் என்று திட்டவட்டமாக கண்டுபிடிக்கப்பட்டால், அணு ஆயுதங்களுக்கு உள்ள கட்டுப்பாடு (non proliferation ) போல அதற்கும் வரும் நாள் தூரமில்லை
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X