பொது செய்தி

இந்தியா

மோடி வலிமையான தலைவர்; சிஏஏ குறித்து பேசவில்லை: டிரம்ப் பேட்டி

Updated : பிப் 25, 2020 | Added : பிப் 25, 2020 | கருத்துகள் (19)
Share
Advertisement
Donald Trump,Trump, PmModi, caa, delhiviolence,kashmir, intermediate, terrorist, terrorism, ISIS, pakistan, tax, பயங்கரவாதம், பயங்கரவாதிகள், பாகிஸ்தான், ஐஎஸ், டிரம்ப்,டோனால்ட் டிரம்ப், Modi,

புதுடில்லி: குடியுரிமை திருத்த சட்டம் (சிஏஏ) குறித்து பிரதமர் மோடியுடன் பேசவில்லை என அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.


மோடி வலிமையான தலைவர்

இந்தியா வந்துள்ள டிரம்ப், டில்லியில் நிருபர்களை சந்தித்த போது கூறியதாவது: இந்தியாவில் சுற்று பயணம் மேற்கொண்ட இரண்டு நாட்களும், தொழில் துறை சி.இ.ஓ., உடனான சந்திப்பு ஆகியவை சிறப்பானதாக இருந்தது. 21 ஆயிரம் கோடி அளவுக்கு பாதுகாப்பு துறையில் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. எரிசக்தி துறையில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. இந்த துறையில் இந்தியாவுடன் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மோடியுடனான உறவு தனித்துவம் வாய்ந்தது. மோடி, உறுதியான, பெரிய, வலிமையான தலைவர். அவரை சந்தித்தது சிறப்பான தருணம்


இந்தியாவுக்கு பாதிப்பில்லை

கொரோனா வைரஸ் சிறப்பாக கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இந்த வைரசால், இந்தியாவில் பெரிய அளவில் பாதிப்பு இல்லை. சிறப்பாக கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் குறித்து சீன அதிபரிடம் பேசியுள்ளேன். அதனை கட்டுப்படுத்த சீனா நடவடிக்கை எடுத்து வருகிறது.


இந்தியாவுக்கு மகிழ்ச்சி


ஆப்கனில் 99 சதவீத மக்கள் அமைதியை விரும்புகின்றனர். தலிபான்களுடன் விரைவில் ஒப்பந்தம் எட்டப்படும் என நம்புகிறேன். இந்த ஒப்பந்தம் குறித்தும், தெற்கு ஆசியாவில் அமைதி குறித்தும் மோடியுடன் பேசியுள்ளேன். இந்த ஒப்பந்தத்தால், இந்தியா மகிழ்ச்சி அடையும்.


latest tamil news


பயங்கரவாதத்தை வேரறுப்போம்

பயங்கரவாதத்தை ஒடுக்க மற்றவர்களை விட அதிகளவில் பணியாற்றியுள்ளேன். பயங்கரவாதிகளை குறிவைத்து தாக்குதல் நடத்தப்படும். ஈரானை சேர்ந்த சுலைமானியை, கடந்த சில மாதங்களுக்கு முன்பு அமெரிக்கா கொன்றுள்ளது. உலகில் பல பகுதிகளில் அமைதியை நிலைநாட்டவே அமெரிக்கர்கள் பணிபுரிகின்றனர். பாகிஸ்தான் மட்டுமின்றி அனைத்து நாடுகளும் பயங்கரவாதத்தை வேரறுக்க வேண்டும். பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தத்தை அமெரிக்கா தீவிரமாக முன்னெடுத்து வருகிறது. ஐ.எஸ்., அமைப்புக்கு எதிராக அனைவரும் இணைந்து பணியாற்ற வேண்டும்.


அமெரிக்காவில் முதலீடு


உலகின் மிகப்பெரிய சந்தையாக இந்தியா விளங்குகிறது. அமெரிக்காவில், இந்தியர்கள் பல ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு செய்வார்கள் என நம்புகிறேன். ஹார்லி டேவிட்சன் பைக்குக்கு அதிக இறக்குமதி வரி விதிப்பது குறித்து பேசினோம்.


உள்நாட்டு விவகாரம்


மத சுதந்திரம் குறித்து பிரதமர் மோடியுடன் பேசினேன். மத சுதந்திரத்தையே விரும்புவதாக மோடி என்னிடம் தெரிவித்தார். பல்வேறு தரப்பு மக்களிடம் பேசியதில் இருந்து மதசுதந்திரம் குறித்து எதிர்மறையான கருத்து வரவில்லை. இதற்காக இந்தியா கடினமாக உழைத்துள்ளது. சிஏஏ குறித்து மோடியுடன் பேசவில்லை. டில்லி கலவரம் குறித்து கேள்விப்பட்டேன். இது இந்தியாவின் உள்நாட்டு விவகாரம். மக்களுக்கு அரசு நல்லதையே செய்திருக்கும் என நம்புகிறேன். எச்1 - பி விசா குறித்தும் பிரதமர் மோடியிடம் பேசினேன்.


மத்தியஸ்தம் செய்ய தயார்

பாகிஸ்தான் குறித்து பல விஷயங்கள் பேசியுள்ளேன். இந்தியா பாகிஸ்தான் இடையே காஷ்மீர் விவகாரம் பெரிய நெருடலாக உள்ளது. இரு நாடுகளும் பிரச்னையை தீர்க்க பணிபுரிந்து வருகிறது. இந்த விவகாரத்தில் மத்தியஸ்தம் செய்ய என்னால் முடிந்ததை செய்வேன். அமைதியான மனிதரான மோடி, பயங்கரவாதத்தை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுப்பார். எந்த வொரு பிரச்னைக்கும் இருபக்கங்கள் இருக்கும். அதேபோல், காஷ்மீர் விவகாரத்திலும் இரு பக்கங்கள் உள்ளது. இந்தியா வலிமையான நாடு. பயங்கரவாதத்தை எதிர்கொள்ளும் வலிமை அவர்களிடம் உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement
வாசகர் கருத்து (19)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
வெற்றிக்கொடிகட்டு - -மதராஸ்:-),இந்தியா
25-பிப்-202021:24:26 IST Report Abuse
வெற்றிக்கொடிகட்டு பாஜக மாநிலத் தலைவர் கபில் மிஸ்ராவாக இருந்தால்கூட தவறு செய்திருந்தால், மக்களைத் தூண்டிவிடும் வகையில் பேசியிருந்தால், அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். சீருடையில் வந்த காவலர்களை இவ்வாறு நடத்தியிருக்கிறார்கள் என்றால், சாதாரண மக்களை எவ்வாறு நடத்துவார்கள். இது என்ன மாதிரியான போராட்டம். மக்களை ஆத்திரமூட்டும் பேச்சுகள் பாஜக சார்பில் யார் பேசியிருந்தாலும் அல்லது ஆம் ஆத்மி, காங்கிரஸ் கட்சி என எந்தக் கட்சியைச் சேர்ந்தவராக இருந்தாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
Rate this:
Share this comment
Cancel
Sundaram Bhanumoorthy - coimbatore,இந்தியா
25-பிப்-202020:26:20 IST Report Abuse
Sundaram Bhanumoorthy குஜராத் ஜாபகம் இருந்தா சரி.சாம,தான,தண்ட,பேதம்.every humen soul have a animal inside.if Indians are instigated,they will answer with the same measure which another section of people understand.syria,Egypt, turkey,libiya,Somalia,afganisthan all burning not because of indians.here Indian means all religion.only a section of Muslims are indulging in arson.they would be a very heavy price
Rate this:
Share this comment
Cancel
Sanjay - Chennai,இந்தியா
25-பிப்-202019:43:21 IST Report Abuse
Sanjay டெல்லி சாஹிண்பாகிலும், சென்னை வண்ணாரப்பேட்டையில் தான் அதிக அளவு கொரோனா உள்ளது
Rate this:
Share this comment
chenar - paris,பிரான்ஸ்
26-பிப்-202001:09:35 IST Report Abuse
chenarசூத்ராள் அதிகமாக இருக்காளா ?...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X