ஸ்பெயினிலும் பரவிய கொரோனா: 1000 பேர் ஓட்டலில் அடைத்து வைப்பு

Updated : பிப் 25, 2020 | Added : பிப் 25, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement
Corona, Virus, Spain, Hotel, Covid19, ஸ்பெயின், கொரோனா, 1000 பேர், ஓட்டல், அடைத்து வைப்பு

மாட்ரிட்: ஸ்பெயினில் கொரோனா வைரஸ் பரவியதையடுத்து 1000 பேர் சொகுசு ஹோட்டலில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர்.

நம் அண்டை நாடான சீனாவில், கடந்தாண்டு டிசம்பரில் பரவிய கொரோனா வைரஸ், பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இதையடுத்து, சீனாவில் இந்த வைரஸ் தாக்குதலுக்கு பலியானோர் எண்ணிக்கை, 2,600 ஆக அதிகரித்துள்ளது.
தென் கொரியா, ஜப்பான், இத்தாலி, ஈரான் உள்ளிட்ட நாடுகள் என உலகம் முழுவதும் 80 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு இந்த வைரஸ் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது.


latest tamil news


இந்நிலையில் ஸ்பெயின் நாட்டின் புகழ்பெற்ற சொகுசு ஓட்டலில் தங்கியுள்ள 1000த்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பதாக வெளியான தகவலால் அந்நாட்டில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ஸ்பெயின் நாட்டின் டெனரீப் மாகாணம் கேனேரி என்ற தீவில் எச்-10 கோஸ்ட் அடீஜா பேலஸ் என்ற சொகுசு ஹோட்டல் உள்ளது. இங்கு இத்தாலி, மற்றும் பிரிட்டன் நாட்டு சுற்றுலா பயணிகள் என 1000 த்திற்கு மேற்பட்டோர் தங்கியுள்ளனர். இவர்களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பதாக உறுதியானதையடுத்து அந்நாட்டு சுகாதாரத்துறை ஓட்டலை விட்டு வெளியேற விடாமல் ஓட்டலுக்குள்ளேயே அடைத்து வைக்கப்பட்டுள்ளதாக ஸ்பெயின் மீடியாக்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Nathan - Hyderabad,இந்தியா
26-பிப்-202012:30:00 IST Report Abuse
Nathan கேனாரி ஐலண்டு ரொம்ப காஸ்ட்லீ உல்லாச இடம் ஆச்சே. வைரசுக்கு மாத்திரம் சொகுசு பாக்க ஆசை இருக்காதா?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X