பொது செய்தி

இந்தியா

டில்லி வன்முறையில் பலி 13 ஆக உயர்வு: நடந்தது என்ன?

Updated : பிப் 25, 2020 | Added : பிப் 25, 2020 | கருத்துகள் (47)
Share
Advertisement

புதுடில்லி: டில்லியில் குடியுரிமை சட்டத்திற்கு எதிரான போராட்டத்தில் வன்முறை வெடித்தது. இதில் இதுவரை 13 பேர் பலியாகியுள்ளனர். வன்முறை நிகழ்ந்த நேரங்களில் அந்த பகுதிகளில் நடந்தேறிய நிகழ்வுகள் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.latest tamil news
4 இடங்களில் 144 தடை

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு (சிஏஏ) எதிராக டில்லியின் ஜாப்ராபாத் மற்றும் மவுஜ்பூர் பகுதிகளில் நடந்த போராட்டத்தில் நேற்றும் (பிப்.,24) இன்றும் வன்முறை வெடித்தது. இதில், வீடுகள், வாகனங்கள் மற்றும் கடைகளுக்கு தீவைக்கப்பட்டன. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வாகனத்தையும், போராட்டக்காரர்கள் தீயிட்டு கொளுத்தினர். இந்த வன்முறையில் போலீஸ் கான்ஸ்டபிள் ரத்தன் லால் உட்பட 13 பேர் பலியாகியுள்ளனர். 150க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். வன்முறையால் ஜாப்ராபாத், மவுஜ்பூர், சந்த்பாக் மற்றும் கர்வால் நகர் ஆகிய 4 நகரங்களில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 4000 போலீசார் குவிக்கப்பட்டனர்.


latest tamil newsஇது தொடர்பாக டில்லி தீயணைப்பு துறை இயக்குனர் அதுல் கார்க் கூறுகையில், வன்முறை பகுதிகளுக்குள் எங்கள் வாகனங்கள் நுழைய முடிவதில்லை. இதனால் போலீஸ் பாதுகாப்பை நாடியுள்ளோம். நிலைமை மிகவும் மோசமடைந்துள்ளது. வன்முறையை தடுப்பது தொடர்பாக அதிகாரிகள் அவசர உத்தரவு பிறப்பிக்கப்பட்டும் வன்முறை குறையவில்லை. தீயணைப்பு வாகனம் எரிக்கப்பட்டதில் சில வீரர்கள் காயமடைந்தனர், என்றார்.


latest tamil newsஅங்கிருக்கும் குரு தேக் பகதூர் மருத்துவமனையின் கூடுதல் மருத்துவ கண்காணிப்பாளர் ராஜேஷ் கல்ரா கூறுகையில், தாக்குதலில் காயமடைந்தவர்கள் அதிகளவில் அட்மிட் ஆகிவருகின்றனர். சிறு சிறு காயங்கள் முதல் கூர்மையான ஆயுதங்களால் தாக்கப்பட்ட காயங்களுடனும் சிலர் அட்மிட் ஆகியுள்ளனர். சிலருக்கு துப்பாக்கிச்சூட்டு காயங்களும் இருந்தன, என்றார்.
இந்த வன்முறையால் வடகிழக்கு டில்லியில் உள்ள பள்ளிகள், மெட்ரோ ரயில் நிலையங்கள் மூடப்பட்டன. சில துணை ராணுவத்தினர் துப்பாக்கி ஏந்தியபடி தெருக்களில் ரோந்து சென்றனர். மேலும், அங்குள்ள மசூதி ஒன்றில், வன்முறையில்லாமல் இருக்க வேண்டும் எனவும், போலீஸ் தடுப்புகளை யாரும் மீற வேண்டாம் எனவும், ஒலிபெருக்கி மூலம் வலியுறுத்தப்பட்டது.


இந்தியா வந்துள்ள அமெரிக்க அதிபர் டிரம்ப், பிரதமர் மோடி பேச்சுவார்த்தை நடத்திய பகுதியின் சில மைல் தொலைவில் தான் இந்த வன்முறை நிகழ்ந்துள்ளது. நேற்று ஒரு லட்சம் பேருக்கு முன்பாக பேசிய டிரம்ப், இந்தியா ஒரு சகிப்புத்தன்மை கொண்ட நாடு எனவும், இந்தியர்களின் ஒற்றுமை உலகிற்கே எடுத்துக்காட்டு என்றும் பேசினார். அந்த நேரத்தில் டில்லியில் இந்த வன்முறை நிகழ்ந்தது குறிப்பிடத்தக்கது.


சிறப்பு கமிஷனர் நியமனம்

டில்லியில் சட்டம் ஒழுங்கை கவனிக்க சிறப்பு கமிஷனராக ஸ்ரீவத்சவா ஐ.பி.எஸ் நியமக்கப்பட்டுள்ளார்.


நாளை பள்ளிகள் விடுமுறை

வன்முறை காரணமாக, டில்லியின் வடகிழக்கு பகுதிகளில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக துணை முதல்வர் மணீஷ் சிசோடியா தெரிவித்துள்ளார். வன்முறையால் வடகிழக்கு டில்லியில் நாளை நடைபெற இருந்த 10 மற்றும் 12ம் வகுப்புக்கான சிபிஎஸ்இ தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (47)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
MANITHAN -  ( Posted via: Dinamalar Android App )
26-பிப்-202000:33:35 IST Report Abuse
MANITHAN அமைதியா நல்லா இருந்த நாட்டை மதத்தின் பேரால் பிளவு படுத்தி நாசமாக்கீட்டீங்களே சங்கிகளா? நல்லா இருங்க!
Rate this:
Share this comment
Cancel
25-பிப்-202023:38:40 IST Report Abuse
மாட்டுக்குப்பன் என்னாங்கடா போறபோக்க பார்த்தா இந்த சங்கி கூட்டம் இந்தியாவை 28 நாடாக மாத்திணடு வாய்ங்க போலிருக்கே????
Rate this:
Share this comment
Cancel
25-பிப்-202023:32:19 IST Report Abuse
மாட்டுக்குப்பன் சங்கி கூட்டம் என்றாலே குடிகார மூர்க்க கூட்டம் என்பதற்க்கு இதைவிட என்ன சான்று வேண்டும்?இதில வேற தமிழ் நாட்டில் வினாயகர் சதுர்த்தி வரட்டும் என்று ஒரு எச்ச சொல்லுது?அடுத்தனை தூண்டிவிடாட்டி இந்த எச்சக்கி பொழப்பு ஓடாது!ஆனால் இவன் மட்டும் சேலைக்கு பின்னாடி ஒழிஞ்சிப்பான்???
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X