பொது செய்தி

இந்தியா

'ஏர் இந்தியா'வை வாங்க அதானி விருப்பம்?

Updated : பிப் 27, 2020 | Added : பிப் 25, 2020 | கருத்துகள் (21)
Share
Advertisement
Air_India, Adani, ஏர் இந்தியா, விமான நிறுவனம், அதானி, ஒப்பந்தம், காலக்கெடு, நீட்டிப்பு, ஆய்வு

புதுடில்லி: நஷ்டத்தில் இயங்கும் பொதுத் துறை விமான நிறுவனமான, 'ஏர் இந்தியா'வை வாங்குவதற்கு, பிரபல தொழிலதிபர் கவுதம் அதானியின் நிறுவனம் ஆர்வம் காட்டியுள்ளது.


சர்வதேச ஒப்பந்தம்


பொதுத் துறை விமான நிறுவனமான ஏர் இந்தியா, தொடர்ந்து நஷ்டத்தில் இயங்கி வருகிறது. அதையடுத்து, இந்த நிறுவனத்தில் மத்திய அரசின் பங்கை விற்பதற்கான நடவடிக்கை, 2018ல் துவங்கியது. மத்திய அரசு, தன், 76 சதவீத பங்குகளை விற்க முன்வந்தது. ஆனால், இதற்கு போதிய வரவேற்பு கிடைக்கவில்லை.இந்த நிலையில், நிறுவனத்தின், 100 சதவீத பங்குகளை விற்பதற்கு, மத்திய அரசு முன்வந்துள்ளது. இது தொடர்பாக, சர்வதேச ஒப்பந்தம் கோரப்பட்டுள்ளது.


ஆர்வம்



இதுவரை, டாடா குழுமம், ஹிந்துஜா குழுமம், இண்டிகோ விமான நிறுவனம் மற்றும் அமெரிக்காவின் நியூயார்க்கைச் சேர்ந்த, பண்ட் இன்டர்ஹப்ஸ் ஆகியவை, ஏர் இந்தியா வாங்குவதற்கு முன் வந்துள்ளன.இந்த நிலையில், பிரபல தொழிலதிபர் கவுதம் அதானியின் நிறுவனமும், இதில் ஆர்வம் காட்டியுள்ளது. ஒப்பந்த ஆவணங்களை அதானி நிறுவனம் ஆய்வு செய்து வருகிறது. விரைவில் இது குறித்து முடிவு எடுக்கப்படும் என, எதிர்பார்க்கப்படுகிறது.ஆமதாபாத், லக்னோ, ஜெய்ப்பூர், குவஹாத்தி, திருவனந்தபுரம், மங்களூரு விமான நிலையங்களை பராமரிக்கும் ஒப்பந்தத்தை, அதானி நிறுவனம் பெற்றுள்ளது.


எதிர்பார்ப்பு



இந்த நிலையில், ஏர் இந்தியாவையும் வாங்கினால், அது அதானி குழுமத்துக்கு பலனளிக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.தற்போதைய நிலையில், பங்குகளை வாங்கும் நிறுவனம், ஏர் இந்தியாவின், 23 ஆயிரத்து, 286 கோடி ரூபாய் அடிப்படை கடனை ஏற்க வேண்டும். அதைத் தவிர மற்ற கடன்களையும் ஏற்க வேண்டும். ஏர் இந்தியா மற்றும் துணை நிறுவனமான, ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் வசம், 128 விமானங்கள் உள்ளன.


காலக்கெடு நீட்டிப்பு?


ஏர் இந்தியா நிறுவனப் பங்குகளை வாங்குவதற்கான ஒப்பந்தம் தாக்கல் செய்வதற்கான காலக்கெடு, மார்ச், 17 என நிர்ணயிக்கப்பட்டது. இது நீட்டிக்கப்படலாம் என, எதிர்பார்க்கப்படுகிறது. ஒப்பந்தம் தொடர்பான சந்தேகங்கள் கேட்பதற்கான காலக்கெடு, பிப்., 11ல் இருந்து, மார்ச், 6 வரை ஏற்கனவே நீட்டிக்கப்பட்டது. அதனால், ஒப்பந்தம் தாக்கலுக்கான தேதியும் நீட்டிக்கப்படும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement




வாசகர் கருத்து (21)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
samkey - tanjore,இந்தியா
04-மார்-202010:27:40 IST Report Abuse
samkey மொத்த இந்தியாவும் உங்களோடுதானே சார் இது என்ன ஏர் இந்தியாவை வாங்கும் கனவு
Rate this:
Share this comment
Cancel
K.n. Dhasarathan - chennai,இந்தியா
28-பிப்-202017:45:42 IST Report Abuse
K.n. Dhasarathan நிதி அமைச்சரே நன்கு இயங்கும் எல் ஐ சி பங்குகளை விற்பதை விட்டுவிட்டு, நஷ்டத்தில் இயங்கும் பொதுத்துறை நிறுனங்களை இது போன்ற பெரும் முதலாளிகளிடம் விற்று விடுங்கள், கொஞ்சம் உருப்படியான வேலைகளை பாருங்கள்.
Rate this:
Share this comment
Cancel
konanki - Chennai,இந்தியா
28-பிப்-202013:29:46 IST Report Abuse
konanki ஏர் இந்தியா விற்பனை அதன் நிபந்தனைகள் வெப்சைட் ல் உலகமறிய வெளி வந்துள்ளது.இது 2 G மாதிரி முதலில் வந்தவர்களுக்கு தான் என்ற டுபாக்கூர் அடிப்படியில் இல்லை. கொடி கோனே மணி எல்லாரரும் தனி தனியாக விண்ணப்பிக்கலாம் . எல்லாம் சேர்ந்து consortitum அமைத்து விண்ணப்பிக்கலாம். மார்ச் 17 க்குள் விண்ணப்பிக்கவும். அப்பறம் அம்பானி அதானி டாடா பிர்லா வாங்கிட்டாங்க என்று கூவதீர்ங்க.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X