கோர்ட் செய்தி

தமிழ்நாடு

அமைச்சர் வேலுமணிக்கு எதிரான புகார்:லஞ்ச ஒழிப்பு துறைக்கு உத்தரவு

Updated : பிப் 26, 2020 | Added : பிப் 25, 2020 | கருத்துகள் (8)
Share
Advertisement
 அமைச்சர், வேலுமணி, புகார், மாநகராட்சி, லஞ்ச ஒழிப்பு துறை, உத்தரவு

சென்னை :'அமைச்சர் வேலுமணிக்கு எதிரான புகாரில் நடத்தப்படும் விசாரணையை, நீதிமன்ற உத்தரவின்றி முடிவுக்கு கொண்டு வரக்கூடாது' என, லஞ்ச ஒழிப்புத் துறைக்கு, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுஉள்ளது.
அறப்போர் இயக்கத்தின் நிர்வாக அறங்காவலர் ஜெயராம் வெங்கடேசன் தாக்கல் செய்த மனு:சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில், 112 பணிகளுக்கு, 2018ல் ஒப்பந்த பணிகள் வழங்கியதில் முறைகேடு நடந்துள்ளது. ஒப்பந்தப்படி, பணிகளுக்கு ஆற்று மணல் பயன்படுத்த வேண்டும்; ஆனால், செயற்கை மணலான, 'எம் சாண்ட்' பயன்படுத்தப்பட்டு உள்ளது.


முறைகேடு


ஆற்று மணலுக்குரிய தொகையை, மாநகராட்சியில் இருந்து வசூலித்துள்ளனர். அதிக விலை கொடுத்து தார் வாங்கி உள்ளனர். இதில், பெரிய அளவில் முறைகேடுகள் நடந்துள்ளன. முறைகேட்டில், அமைச்சர் வேலுமணி, மாநகராட்சி அதிகாரிகள், ஒப்பந்ததாரருக்கு தொடர்பு உள்ளது. இந்த ஊழல் புகார் குறித்து, வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்த, லஞ்ச ஒழிப்புத் துறைக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு, மனுவில் கூறப்பட்டுள்ளது.
மனு, உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, அமைச்சருக்கு எதிராக குற்றச்சாட்டு கூறியிருப்பதால், வழக்கில் எதிர்மனுதாரராக அவரை சேர்க்கும்படி அறிவுறுத்தியது. இதையடுத்து, அமைச்சரை எதிர்மனுதாரராக சேர்த்து, மனு தாக்கல் செய்யப்பட்டது.

வழக்கு, நீதிபதிகள் எம்.சத்தியநாராயணன், ஆர்.ஹேமலதா அடங்கிய, 'டிவிஷன் பெஞ்ச்' முன், நேற்று விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில், வழக்கறிஞர் வி.சுரேஷ் ஆஜரானார். லஞ்ச ஒழிப்பு துறை சார்பில், அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஏ.நடராஜன், ''மனுதாரர் அளித்த புகாரில், ஆரம்பகட்ட விசாரணை நடக்கிறது,'' என்றார்.


விசாரணை


இதையடுத்து, 'ஆரம்பகட்ட விசாரணையை, லஞ்ச ஒழிப்பு துறை மேற்கொள்ளலாம். மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை, ஆரம்பகட்ட விசாரணையை முடிவுக்கு கொண்டு வரக்கூடாது' என, நீதிபதிகள் உத்தரவிட்டனர். வழக்கின் விசாரணையை, ஏப்.,௧௬க்கு, நீதிபதிகள் தள்ளி வைத்தனர். அன்று விசாரணை அறிக்கை தாக்கல் செய்யவும் உத்தரவிட்டனர்.

Advertisement
வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sitaraman Munisamy - SALEM,இந்தியா
26-பிப்-202011:40:49 IST Report Abuse
Sitaraman Munisamy லஞ்ச குற்ற பின்ணணியில் உள்ள அமைச்சர் பதவியில் தொடர்ந்து நீடித்தால் எப்படி ஒழுங்கான தீர்ப்பு வரும், விசாரணை நியாயமாக நடைபெறும்.
Rate this:
Cancel
நக்கீரன் - திருநெல்வேலி சீமை,இந்தியா
26-பிப்-202010:36:23 IST Report Abuse
நக்கீரன் குற்றவாளிகளின் மீதான விசாரணையை இரண்டு மாதங்களில் முடித்து உள்ளே தள்ளி முட்டிக்கு முட்டி தட்டுவதை விட்டுவிட்டு வழக்கை இரண்டு மாதங்களுக்கு நீதிமன்றம் ஒத்தி வைத்திருக்கிறது. இப்படி லஞ்ச ஊழல்களுக்கு நீதிமன்றங்களும் மறைமுகமாக உதவி செய்கின்றன. இது தான் ஊழலின் ஆரம்பம்.
Rate this:
Cancel
pattikkaattaan - Muscat,ஓமன்
26-பிப்-202009:47:42 IST Report Abuse
pattikkaattaan "அம்மா " வின் இறப்பிற்க்கான காரணத்தை கண்டறிய போடப்பட்ட விசாரணை கமிஷனே இன்னும் ஆயுள் முழுக்க விசாரிக்குமாம் .. இதுல இதென்ன புதுசா கண்டுபுடிக்கப்போகுது ?.. போங்கப்பு
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X