எரிகிறது டில்லி: கலவரத்தில் 20 பேர் பலி - பள்ளிகளுக்கு விடுமுறை

Updated : பிப் 27, 2020 | Added : பிப் 25, 2020 | கருத்துகள் (9+ 84)
Share
Advertisement

புதுடில்லி : டில்லியில், குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிரான போராட்டத்தில் வெடித்த வன்முறையில் பலியானோர் எண்ணிக்கை, 20 ஆக அதிகரித்துள்ளது; 150 பேர் காயமடைந்துள்ளனர். நேற்றும் பல இடங்களில் கல்வீச்சு, தீ வைப்பு சம்பவங்கள் நடந்தன. பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. பல இடங்களில், 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.latest tamil newsகுடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக, டில்லியில் தொடர் போராட்டங்கள் நடந்து வருகின்றன. இரண்டு நாட்களுக்கு முன், டில்லியின் வட கிழக்கு பகுதியில் உள்ள ஜாப்ராபாத், மாவுஜ்பூர் பகுதிகளில் போராட்டக்காரர்களுக்கும், குடியுரிமை திருத்த சட்டத்தை ஆதரிப்பவர்களுக்கும் இடையே, திடீரென மோதல் வெடித்தது. வீடுகள், கடைகளுக்கு தீ வைக்கப்பட்டது. சாலைகளில், டயர்களை தீ வைத்து எரித்ததால், போக்குவரத்து முடங்கியது. போராட்டக்காரர்கள், போலீசார் மீது கற்களை வீசி தாக்கினர். நேற்று முன்தினமும், பல இடங்களில் வன்முறை தொடர்ந்து. நேற்று முன்தினம் இரவு முழுவதும், வன்முறையாளர்கள் கோரதாண்டவமாடினர். குடியுரிமை சட்ட எதிர்ப்பாளர்களும், ஆதரவாளர்களும் இரு பிரிவாக பிரிந்து மோதிக் கொண்டனர். போலீசார், கண்ணீர் புகை குண்டுகளை வீசியும், தடியடி நடத்தியும் போராட்டக்காரர்களை கலைத்தனர். இந்த வன்முறையில், ரத்தன் லால் என்ற போலீஸ்காரர் உட்பட 20 பேர் உயிரிழந்தனர்; 150 பேர் படுகாயம் அடைந்தனர்.


latest tamil news
latest tamil news


Advertisementபோலீசார் திணறல்நேற்று காலையும் வன்முறை தொடர்ந்தது. சாலைகளிலும், தெருக்களிலும், இரு பிரிவாக பிரிந்து, போராட்டக்காரர்களும், ஆதரவாளர்களும் தாக்குதலில் ஈடுபட்டனர். ஒருவர் மீது ஒருவர் கற்களை வீசியும், தடிகளால் அடித்தும் தாக்கிக் கொண்டனர். இதனால், டில்லியின் வட கிழக்கு பகுதி முழுவதும் போர்க்களமாக காட்சியளித்தது. இதையடுத்து, பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது; தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டன. ஜாப்ராபாத், மாவுஜ்பூர், சாந்த்பாக், குரேஜி காஸ், பஜன்பூரா ஆகிய போலீஸ் ஸ்டேஷன்களுக்கு உட்பட்ட பகுதிகளில், 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஆனாலும், கலவரத்தை கட்டுப்படுத்த முடியாமல், போலீசார் திணறினர். பல இடங்களில் தீ வைப்பு சம்பவங்கள் நடந்ததால், தீயணைப்பு வாகனங்கள் விரைந்து சென்றன. ஒரே நேரத்தில் பல இடங்களில் தீ எரிந்ததால், அவற்றை அணைக்க முடியாமல் தீயணைப்பு வீரர்கள் சிரமப்பட்டனர். தெருக்களில், கலவரக்காரர்கள் ஆயுதங்களுடன் சுற்றித் திரிந்து, பொதுமக்களுக்கு மிரட்டல் விடுத்ததால், கடும் பீதியும், பதற்றமும் நிலவுகிறது. கலவரம் நடக்கும் பகுதிகளில் குழுக்கள் அமைத்து, அவர்களுடன் போலீசார் பேச்சு நடத்தி வருகின்றனர். டில்லி முதல்வரும், ஆம் ஆத்மி தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவால், ஆம் ஆத்மிஎம்.எல்.ஏ.,க்கள் மற்றும் அமைச்சர்களுடன் அவசர ஆலோசனை நடத்தினார்.


latest tamil news
தடைஇது குறித்து கெஜ்ரிவால் கூறியதாவது:கலவரத்தை கட்டுப்படுத்தும் அளவுக்கு போதிய எண்ணிக்கையில், போலீசார் இல்லை. மேலிடத்தில் இருந்து உத்தரவு வந்தால் மட்டுமே, நடவடிக்கை எடுக்க முடியும் என போலீஸ் அதிகாரிகள் கூறுகின்றனர். டில்லி போலீசார், மத்திய உள்துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் உள்ளதால், இது குறித்து, உள்துறை அமைச்சருடன் பேச்சு நடத்த உள்ளேன்.


latest tamil newsவெளி நபர்கள் யாரும் டில்லிக்குள் வராமல் தடுக்கும் வகையில், எல்லைக்கு, 'சீல்' வைக்க வேண்டும். கலெக்டர்கள் தலைமையில், அந்தந்த பகுதிகளில் அமைதி கூட்டங்கள் நடத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது. இவ்வாறு, அவர் கூறினார். இதற்கிடையே, வன்முறை காரணமாக, டில்லியில், ஐந்து மெட்ரோ ரயில்வே ஸ்டேஷன்கள் மூடப்பட்டுள்ளன. கல்வீச்சில் காயமடைந்த, போலீஸ் உதவி கமிஷனர் அமித் சர்மா, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். செய்தி சேகரிக்கச் சென்ற பத்திரிகையாளர்கள் மீதும், போராட்டக்காரர்கள்தாக்குதல் நடத்தினர். பொதுமக்கள் யாரும் ஆயுதங்களை எடுத்துச் செல்லவோ, வன்முறையை துாண்டும் விதமான, 'போஸ்டர், பேனர்'களை எடுத்துச் செல்லவோ தடைவிதிக்கப்பட்டுள்ளது.


latest tamil news
அமித் ஷா அவசர ஆலோசனை


டில்லியில் பரவும் வன்முறையை கட்டுப்படுத்த, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் அவசர ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது.இதில், டில்லி துணை நிலை கவர்னர் அனில் பைஜால், முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், போலீஸ் கமிஷனர் அமுல்யா பட்நாயக் உள்ளிட்டோர்பங்கேற்றனர். இதில் பங்கேற்ற பலரும், 'டில்லியில் நடக்கும் சம்பவங்கள் குறித்து, சமூக ஊடகங்களில் பரப்பப்படும் வதந்தியை கட்டுப்படுத்த வேண்டும். இதனால் தான் கலவரம் துவங்கியது' என,வலியுறுத்தினர். மேலும், போலீசாருடன், டில்லி எம்.எல்.ஏ.,க்கள் இணைந்து, வன்முறை நடக்கும் பகுதியில் ஒரு குழுவை அமைத்து, அமைதி பேச்சு நடத்த வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர். இந்த கூட்டத்தில் பங்கேற்ற சிலர், 'கலவரத்தை கட்டுப்படுத்த ராணுவத்தை அழைக்க வேண்டும்' என,வலியுறுத்தினர். ஆனால், 'போதிய அளவில் துணை ராணுவப் படையினர், பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதால், ராணுவத்தை அழைக்க வேண்டிய அவசியமில்லை' என, உள்துறை அமைச்சக அதிகாரிகள் தெரிவித்தனர்.


latest tamil news
கபில் மிஸ்ரா மீது குற்றச்சாட்டுகிழக்கு டில்லி லோக்சபா உறுப்பினரும், பா.ஜ.,வைச் சேர்ந்தவருமான கவுதம் காம்பீர் கூறியதாவது:ஆம் ஆத்மி கட்சியிலிருந்து, பா.ஜ.,வுக்குச் சென்ற கபில் மிஸ்ரா, குடியுரிமை திருத்த சட்டத்துக்கு ஆதரவாக, டில்லி யில் சமீபத்தில் போராட்டம் நடத்தினார். இவர், 'டிரம்ப், இந்தியாவில் இருக்கும் வரை தான், அமைதியாக இருப்போம். அவர், அமெரிக்காவுக்கு கிளம்பிய பின், போலீசார் பேச்சை கேட்க மாட்டோம்' என, பேசியுள்ளார்.

இதுபோன்ற வெறுப்பை துாண்டும் வகையிலான பேச்சுக்களால் தான், டில்லியில் வன்முறை ஏற்பட்டுள்ளது. ஷாகின் பாக்கில், அமைதியாகத் தான் போராட்டம் நடந்தது. ஆனால், டிரம்ப், டில்லிக்கு வந்தபின், போராட்டங்களில் வன்முறை வெடித்தது; இது சரியான செயல் அல்ல. போராட்டம் நடத்துவதற்கு அனைவருக்கும் உரிமை உள்ளது. ஆனால், ஒவ்வொருவரும் கற்களை வீசி தாக்குவதை ஏற்க முடியாது. போலீசாருக்கு முன், துப்பாக்கியுடன் சுற்றித் திரிபவர்களை என்னவென்று சொல்வது...ஆம் ஆத்மி, பா.ஜ., காங்கிரஸ் என, எந்த கட்சியைச் சேர்ந்தவராக இருந்தாலும் சரி; வன்முறையை துாண்டுவோர் மீது, போலீசார் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு, அவர் கூறினார்.


போலீஸ்காரர் இறந்தது எப்படி?டில்லியில் நேற்று முன்தினம் நடந்த வன்முறையில், ரத்தன் லால், 42, என்ற போலீஸ்காரர் உயிரிழந்தார். அவர், கல்வீச்சில் காயமடைந்து இறந்ததாக, முதல் கட்ட தகவல்கள் தெரிவித்தன.ஆனால், நேற்று வெளியான பிரேத பரிசோதனை அறிக்கையில்,ரத்தன் லாலில் இடது தோளில்குண்டு பாய்ந்திருந்தது உறுதி செய்யப்பட்டது.வன்முறையாளர்கள் துப்பாக்கியால் சுட்டதால், அவர் உயிரிழந்ததாக, அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. ரத்தன் லாலின் இறுதிச் சடங்கு, டில்லியில் நேற்று நடந்தது. போலீஸ் உயர் அதிகாரிகள், அவரது உடலுக்கு மலர் வளையம் வைத்து, மரியாதை செலுத்தினர்.


latest tamil news
துப்பாக்கியால் சுட்டவர் கைதுடில்லி ஜப்ராபாத் பகுதியில், நேற்று முன்தினம், சிவப்பு சட்டை அணிந்திருந்த ஒரு இளைஞர், வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டபடியே, அங்கும் இங்கும் ஓடினார்.சிறிது நேரத்துக்குப் பின், அவர் கைது செய்யப்பட்டார். விசாரணையில், அவரது பெயர் ஷாரூக், 33, என தெரியவந்தது. அவர் மீது, போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

குறுகிய மனப்பான்மை உடையவர்களையும், வன்முறையை துாண்டும் வகையில் பேசக் கூடியவர்களையும் ஆட்சியில் அமர்த்தியதால், டில்லி மக்கள், இது போன்ற வன்முறையை சந்திக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக போராடுவோரின் கோரிக்கைகளை, இனியாவது மத்திய அரசு செவி மடுத்துக் கேட்க வேண்டும். சிதம்பரம், மூத்த தலைவர், காங்.,


உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணை


டில்லியில் நடக்கும் வன்முறையை கட்டுப்படுத்தவும், வன்முறையாளர்கள் மீது, வழக்கு பதிவு செய்யக் கோரியும், முன்னாள் தகவல் ஆணையர் வஜஹாத் ஹபிபுல்லா உள்ளிட்ட சிலர், உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து உள்ளனர். நேற்று இந்த மனு பரிசீலனைக்கு வந்தபோது, அவசரமாக விசாரிக்கும்படி, வழக்கறிஞர்கள் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இதையடுத்து, இந்த மனுவை, இன்று விசாரிப்பதாக நீதிபதிகள் உத்தரவிட்டனர். டில்லி உயர் நீதிமன்றத்திலும், இதபோல ஒரு மனுவை, சமூக ஆர்வலர் ஹர்ஷ் மாந்தர் தாக்கல் செய்தார். இந்த மனு மீதும், இன்று விசாரணை நடக்கஉள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (9+ 84)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
r.sundaram - tirunelveli,இந்தியா
26-பிப்-202019:55:50 IST Report Abuse
r.sundaram காங்கிரஸ் காரர்களுக்கு மனது ரொம்பவே குளிர்ந்திருக்கும். அவர்கள் ஆரம்பித்த ஆட்டம்தான் இது. மற்றவர்களை தூண்டிவிட்டு வேடிக்கை பார்ப்பது கேவலம். இந்திரா இறந்தவுடன் சீக்கியர்களை இனப்படுகொலை செய்தவர்கள் தான் இந்த காங்கிரஸ் காரர்கள். காங்கிரஸ் கட்சியின் மத்திய மந்திரி ஒருவரே நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டுள்ளார், சீக்கியர்களை படுகொலை செய்த சம்பவத்தில். காங்கிரஸ் கட்சிக்குத்தான் இதில் அனுபவம் இருக்கிறது.
Rate this:
Cancel
Tamilachi - crawley,யுனைடெட் கிங்டம்
26-பிப்-202019:09:55 IST Report Abuse
Tamilachi இந்த வன்முறை போராட்டம் அமித்ஷா தேசவிரோத தீவிரவாதிகளுக்கு காட்டிய சாம்பிள்....பொறுமை எல்லை மீறினால் என்ன நடக்கும் என்பதற்கான ஒரு முன்னோட்டமே...இந்த சட்டத்தால் பாதிப்பில்லை என்று தெரிந்தும் நாட்டில் அமைதியை கெடுக்கும் வகையில் போராடினால் இதுவே அவர்கள் கதி...இப்போது தெரிந்திருக்கும் ஒரு கையில் குரானும் ஒரு கையில் வாளும் எடுத்து கொண்டு நாங்கள் ஒரே இரவில் முஸ்லீம் நாடாக மாற்றுவோம் என்று சொன்னவர்களுக்கு.....
Rate this:
Cancel
mohankumar - Trichy,இந்தியா
26-பிப்-202014:48:55 IST Report Abuse
mohankumar தமிழ் நாடு போலீஸ் வண்ணார பேட்டை விஷயத்தில் ஜாக்கிரதையாக யில்லாவிட்டால் இவனுக டெல்லி மாதிரி பண்ணுவானுங்க டில்லியில் அந்த நகரமே சுடுகாடு போல ஆக்கிட்டானுங்க . இவனுங்க இருக்குற எந்த நாட்டையும் நல்லா இருக்க விட மாட்டானுங்க மக்களே புரிந்து கொள்ளுங்க
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X