பிரச்னை ஏற்படுத்தாதீங்க

Added : பிப் 25, 2020
Share
Advertisement
 பிரச்னை ஏற்படுத்தாதீங்க

குடியுரிமை திருத்த சட்டம் குறித்து, உச்ச நீதிமன்றம் பரிசீலித்து வருகிறது. அதனால், இந்த சட்டம் குறித்து, எதிர்க்கட்சிகள் தேவையில்லாமல் பிரச்னையை ஏற்படுத்த வேண்டாம். தேசிய குடிமக்கள் பதிவேடு திட்டத்தை, அமல்படுத்தும் எண்ணம் இல்லை என, பிரதமரே தெரிவித்துள்ளார். 2010ல் மேற்கொண்டது போல், தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பை மேற்கொள்ள, மத்திய அரசை கேட்டுக் கொண்டுள்ளோம்.-நிதிஷ் குமார், பீஹார் முதல்வர், ஐக்கிய ஜனதாதளம்

ஒருங்கிணைந்த மேம்பாடு

விமான நிலையங்களை மேம்படுத்துதல் என்பது, உள்கட்டமைப்பு வசதிகளை மட்டும் மேம்படுத்தினால் போதாது. சுற்றுலா வசதிகள், தொழில் சாலைகள், நகர மேம்பாட்டு பணிகள் என, ஒருங்கிணைந்த மேம்பாட்டு பணிகளை மேற்கொள்ள வேண்டும். ஷீர்டியில் விமான நிலையத்தை மேம்படுத்தியதால் அங்கு, ஆன்மிக சுற்றுலா அதிகரித்துள்ளது. -உத்தவ் தாக்கரே, மஹாராஷ்டிரா முதல்வர், சிவசேனா.

ஒற்றுமைக்கு விழுந்த அடி

இந்தியாவில் சமீபகாலமாக, பெரும்பான்மையினரின் பிடிவாத போக்கு அதிகரித்துள்ளது. இது, நாட்டின் வேற்றுமையில் ஒற்றுமை தத்துவத்துக்கு மரண அடியாக அமைந்துள்ளது. இதனால், முஸ்லிம்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். டில்லியில் நடந்த கலவரத்தில் துப்பாக்கியால் சுட்டவரை, போலீசார் இதுவரை கைது செய்யவில்லை. ஏனெனில், அவர் காஷ்மீரை சேர்ந்தவரும் இல்லை; முஸ்லிமும் இல்லை.-இல்திஜா முப்திஜம்மு - காஷ்மீர் முன்னாள் முதல்வர் மெஹபூபா மகள், மக்கள் ஜனநாயக கட்சி

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X