ஆயுள் தண்டனை பெற்ற 'மாஜி': சட்டசபை உறுப்பினர் பதவி ரத்து

Updated : பிப் 25, 2020 | Added : பிப் 25, 2020 | கருத்துகள் (16)
Share
Advertisement
ஆயுள் தண்டனை, 'மாஜி' சட்டசபை உறுப்பினர் பதவி ரத்து

லக்னோ: சிறுமி பாலியல் பலாத்கார வழக்கில், ஆயுள் தண்டனை பெற்று சிறையில் உள்ள, உத்தர பிரதேச பா.ஜ., முன்னாள் எம்.எல்.ஏ., குல்தீப் சிங் சென்காரின் சட்டசபை உறுப்பினர் பதவி ரத்து செய்யப்படுவதாக, அம்மாநில முதன்மை செயலர் அறிவித்தார்.


குற்றச்சாட்டு




latest tamil news



உ.பி.,யில், முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில், பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு, உன்னாவ் மாவட்டத்தைச் சேர்ந்த சிறுமி, 2017ல் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார்.
அவரை, பா.ஜ., எம்.எல்.ஏ., குல்தீப் சிங் சென்கார் கடத்திச் சென்று, பாலியல் பலாத்காரம் செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.
குல்தீப் சென்காரின் சகோதரர் அதுல் சென்கார், அந்த சிறுமியின் தந்தையை அடித்து, உதைத்த, 'வீடியோ' சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. பின், சிறுமியின் தந்தை போலீஸ் காவலில் உயிரிழந்தார்.

இதையடுத்து, முதல்வர் யோகி ஆதித்யநாத் வீட்டின் முன், பாதிக்கப்பட்ட சிறுமி, தீக்குளிக்க முயன்றார். இந்த சம்பவத்தை அடுத்து, வழக்கு, சி.பி.ஐ., வசம் ஒப்படைக்கப்பட்டது.


சிறுமி கடிதம்

எம்.எல்.ஏ., குல்தீப் சிங் சென்காரை, சி.பி.ஐ., அதிகாரிகள் கைது செய்தனர். அவரை, கட்சியில் இருந்து நீக்கி, பா.ஜ., தலைமை உத்தரவிட்டது.வழக்கு விசாரணை, லக்னோ நீதிமன்றத்தில் நடந்தது. அப்போது, பாதிக்கப்பட்ட சிறுமி பயணம் செய்த கார் மீது, லாரி மோதி விபத்துக்கு
உள்ளானது. இதில், சிறுமியும், அவரது வழக்கறிஞரும் படுகாயம் அடைந்தனர். சிறுமியின் உறவினர் இருவர் பலியாகினர். தன் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக, உச்ச நீதிமன்றத்தின் அப்போதைய தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய்க்கு, சிறுமி கடிதம் எழுதினார்.

இதையடுத்து, இந்த வழக்கு, டில்லியில் உள்ள, 'போக்சோ' நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது.விசாரணையின் இறுதியில், குல்தீப் சிங் சென்காருக்கு, ஆயுள் தண்டனை விதித்து, நீதிமன்றம் கடந்தாண்டு உத்தரவிட்டது.


அறிவிப்பு



இந்நிலையில், குல்தீப் சிங் சென்காரின் சட்டசபை உறுப்பினர் பதவி ரத்து செய்யப்படுவதாக, உ.பி., முதன்மை செயலர் பிரதீப் குமார் துாபே நேற்று அறிவித்தார். ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட நாளான, 2019 டிசம்பர், 20ல் இருந்தே, அவரது உறுப்பினர் பதவி ரத்தானதாக கருதப்படுவதாக தெரிவித்தார். இதையடுத்து, உ.பி.,யின் பங்கார்மாவ் சட்டசபை தொகுதி, காலியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (16)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
KavikumarRam - Indian,இந்தியா
26-பிப்-202013:30:57 IST Report Abuse
KavikumarRam பிஜேபியில் இருந்ததால் தான் இவருக்கு தண்டனையே. இதே காங்கிரஸ் ஆட்சியில் இருந்திருந்து இவர் காங்கிரஸ் எம்.எல்.ஏ வா இருந்திருந்தா இந்த விஷயமே வெளிய தெரியாம அமுக்கியிருப்பாங்க. இவரை தியாகியாக்கி பிரமோஷன் எல்லாம் குடுத்து டெல்லில பக்கத்துலயே வச்சுப்பாங்க.
Rate this:
Share this comment
Cancel
வெற்றிக்கொடிகட்டு - -மதராஸ்:-),இந்தியா
26-பிப்-202012:16:27 IST Report Abuse
வெற்றிக்கொடிகட்டு இவனை போன்று பிஜேபி யில் நிறய பேர் உள்ளனர் எல்லோரையும் களை எடுக்கணும் பேருக்கு தான் நேர்மை கட்சி இந்தியாவில் உள்ள மொத கிரிமினல் MLA MP இவர்கள் கட்சியில் தான் உள்ளனர்
Rate this:
Share this comment
Cancel
Malick Raja - jeddah,சவுதி அரேபியா
26-பிப்-202012:03:53 IST Report Abuse
Malick Raja இவர் இரண்டொரு மாதங்களில்வெளிவந்துவிடுவார்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X