பொது செய்தி

இந்தியா

அமெரிக்கா புறப்பட்டார் டிரம்ப்

Updated : பிப் 26, 2020 | Added : பிப் 25, 2020 | கருத்துகள் (6)
Share
Advertisement
Trump,USA,DonaldTrump,அமெரிக்கா,டிரம்ப்

புதுடில்லி: இரண்டு நாள் பயணமாக வந்திருந்த, அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், தன் பயணத்தை முடித்து, இரவு தனி விமானம் மூலம் அமெரிக்கா புறப்பட்டார்.

நேற்று முன்தினம் குஜராத்தின் ஆமதாபாத் வந்த அவர், மகாத்மா காந்தி தங்கியிருந்த சபர்மதி ஆசிரமத்தை பார்வையிட்டார். ஆமதாபாதில் உள்ள உலகின் மிகப் பெரிய கிரிக்கெட் மைதானத்தில், அவரை வரவேற்று, 'நமஸ்தே டிரம்ப்' நிகழ்ச்சி நடந்தது. இடைப்பட்ட, 22 கி.மீ., துாரத்தில் அவரை வரவேற்று, பல்வேறு கலை நிகழ்ச்சிகள் உள்ளிட்டவை ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.

அங்கிருந்து உத்தர பிரதேச மாநிலம் ஆக்ரா சென்ற அவர், உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ்மஹாலை சுற்றி பார்த்தார். இரண்டாவது நாளான இன்று டில்லி ராஜ்காட்டில் உள்ள மகாத்மா காந்தி சமாதியில் அஞ்சலி செலுத்தினார். பின், ஜனாதிபதி அளித்த வரவேற்பை ஏற்றுக் கொண்டார்.


latest tamil news




பிரதமர் மோடியுடன், இரு தரப்பு உறவுகள் குறித்து ஆலோசனை நடத்தினார். மாலையில், இந்திய தொழிலதிபர்கள் இடையே உரையாற்றினார். நிருபர்களுக்கும் பேட்டியளித்தார். ஜனாதிபதி அளித்த இரவு விருந்தில் பங்கேற்ற அவர், இரவு, வாஷிங்டன் புறப்பட்டார்.

Advertisement




வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
K.Sugavanam - Salem,இந்தியா
26-பிப்-202012:28:02 IST Report Abuse
K.Sugavanam அதுக்குள்ளாற எல்லா டீலும் போட்டாச்சா?
Rate this:
Share this comment
Cancel
sahayadhas - chennai,இந்தியா
26-பிப்-202011:14:51 IST Report Abuse
sahayadhas இந்தியா ஆயுத கொள்முதல் No.1 என்று வாழ்த்துவார்.
Rate this:
Share this comment
Cancel
JINU - TAMIL NADU /KANYAKUMARI DISTRIC,இந்தியா
26-பிப்-202009:30:09 IST Report Abuse
JINU JESUS LOVES YOU BROTHER & FAMILY
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X