சிறப்பு பகுதிகள்

டவுட் தனபாலு

'டவுட்' தனபாலு -

Updated : பிப் 26, 2020 | Added : பிப் 26, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement
 'டவுட்' தனபாலு -

சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார்: கடலுார், நாகப்பட்டினத்தில் அனுமதிக்கப்பட்டிருந்த பெட்ரோலிய முதலீட்டு மண்டல அரசாணைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதனால், 60 ஆயிரம் ஏக்கர் விளைநிலங்கள் கையகப்படுத்தும் சூழல் தவிர்க்கப்பட்டுள்ளது. விவசாயிகளையும், விவசாயத் தொழில்களையும் மேம்படுத்த, தமிழக அரசு மேற்கொண்ட நடவடிக்கையை பாராட்டுகிறேன்.'டவுட்' தனபாலு: பிற தலைவர்கள் போல இல்லாமல், வித்தியாசமாக சிந்திக்கும் நீங்கள், இந்த திட்டம் ரத்துக்கு வரவேற்பு தெரிவிக்கலாமா... இந்த இரண்டு மாவட்டங்களிலும், 92 ஆயிரம் கோடி ரூபாய் திட்டம் முடக்கப்பட்டுள்ளது. எத்தனை பேருக்கு வேலை கிடைக்கும்; என்னென்ன முன்னேற்றம் அந்த பகுதிக்கு வாய்த்திருக்கும்; நீங்கள் யோசிக்கவில்லையோ என்ற, 'டவுட்' ஏற்படுகிறதே.

இ.பி.எஸ்., தமிழக முதல்வர்: ஊடகங்கள் தொடர்பாக, தி.மு.க.,வின், ஆர்.எஸ்.பாரதி கீழ்த்தரமாக பேசினார்; அவரை ஊடகங்கள் கண்டிக்கவில்லை. தாழ்த்தப்பட்டவர்கள் பற்றியும் ஆட்சேபகரமாக பேசியுள்ளார்; அதுபற்றியும் ஊடகங்கள் செய்தி வெளியிடவில்லை. மக்களுக்கு நல்லது செய்யக்கூடிய திட்டங்களை வெளியிட்டால் தான், இவர்களை போன்றோர், இது போல பேச மாட்டார்கள்.'டவுட்' தனபாலு: தி.மு.க., அமைப்பு செயலர், ஆர்.எஸ்.பாரதியை ஊடகங்கள் கண்டித்ததால் தான், 'வருத்தம் தெரிவிக்கிறேன்' என, அவர் அறிக்கை வெளியிட்டார். முதல்வர் அந்த அறிக்கையை பார்க்கவில்லையோ என்ற, 'டவுட்' வருகிறது. எப்படியோ, பாரதியின் அறிக்கையை படிக்காமல், தன் பொன்னான நேரத்தை, இ.பி.எஸ்., வீணாக்காமல் இருந்தது பாராட்டுதற்குரியதே

ம.தி.மு.க., பொதுச் செயலர் வைகோ: சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லுாரியை, கடலுார் மாவட்ட அரசு மருத்துவக் கல்லுாரி என, பெயர் மாற்றம் செய்ய, சட்டசபையில் அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது. பெயரை மாற்றக் கூடாது. செட்டிநாட்டு அரசரின் பெயரையும், புகழையும் மறைத்தால், சிதம்பரத்தில் போராட்டம் நடத்தப்படும்.'டவுட்' தனபாலு: எப்போதாவது போராட்டம் நடத்தினால் தான், அந்த போராட்டத்திற்கு மக்கள் ஆதரவு கிடைக்கும்; அரசும் கண்டுகொள்ளும். எடுத்ததற்கெல்லாம் போராட்டம் என அறிவித்தால், மக்கள் புறக்கணித்து விட வாய்ப்பு உள்ளது. இந்த விவகாரத்தில், 'முதலில் நாம், லேசாக கொளுத்தி போடுவோம்; தோழமை கட்சித் தலைவர்கள், தீப்பற்ற வைத்து விடுவர்' என்பது உங்கள் எண்ணமோ என்ற, 'டவுட்' வருகிறதே.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Krish - Chennai ,இந்தியா
26-பிப்-202004:44:15 IST Report Abuse
Krish மிஸ்டர் தனபால், பெட்ரோல் தொழில்களை தெற்கே இல்லாவிட்டால் தர்மபுரி பக்கம் அமைக்கலாம். ஆனால் விவசாயம் காவேரி பகுதியில் மட்டுமே செய்ய முடியும். இது உங்களுக்கு எப்படி தெரியவில்லை என்பது எங்கள் டவுட். . மருத்துவ கல்லூரி பணத்திற்காக 80 களில் ஆரம்பிக்க பட்டது. அரசு பெயரே சரி. தில்லை என்று ஊர் பெயர் வையுங்கள்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X