சென்னை : 'தமிழகத்தில் இருந்து விண்ணப்பித்துள்ள அனைவரையும், ஹஜ் புனித பயணம் மேற்கொள்ள அனுமதிக்க வேண்டும்' என, பிரதமர் மோடிக்கு, முதல்வர் இ.பி.எஸ்., கடிதம் எழுதியுள்ளார்.

அவரது கடிதம்: தமிழகத்தில் இருந்து நடப்பாண்டில், ஹஜ் புனித பயணம் செல்வதற்கு, மாநில ஹஜ் கமிட்டி வாயிலாக, 6,028 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. இதில், ஏழு குழந்தைகளும் அடக்கம். இவர்களில், 3,736 பேருக்கு மட்டுமே, மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.பல்வேறு காரணங்களால், பல மாநிலங்களைச் சேர்ந்தவர்கள், ஹஜ் பயணத்தை ரத்து செய்துள்ளனர். இதனால், ஹஜ் பயணம் செல்வதற்கு அனுமதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை, பல மாநிலங்களில் குறையும்.

எனவே, தமிழகத்தில் இருந்து விண்ணப்பித்துள்ள, 6,028 பேரையும், ஹஜ் பயணம் மேற்கொள்ள அனுமதிக்க வேண்டும்.இது குறித்து, மத்திய சிறுபான்மையினர் நல அமைச்சகத்திற்கு அறிவுறுத்த வேண்டும். இவ்வாறு, கடிதத்தில் கூறியுள்ளார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE