பாக்., முன்னாள் பிரதமர் ஜாமினை நீட்டிக்க மறுப்பு

Updated : பிப் 26, 2020 | Added : பிப் 26, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement

லாகூர் : பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப், வெளிநாட்டில் சிகிச்சை பெற வழங்கப்பட்டிருந்த ஜாமினை நீட்டிக்க, அந்நாட்டின், பஞ்சாப் மாகாண அரசு மறுத்துள்ளது.



latest tamil news



பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப், 70, ஊழல் வழக்கில், சிறை தண்டனை விதிக்கப்பட்டதையடுத்து, லாகூர் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். சிறையில், ஷெரீப்பின் உடல் நிலை பாதிக்கப்பட்டதையடுத்து, அவரை, ஐரோப்பிய நாடான பிரிட்டன் தலைநகர் லண்டனில் உள்ள, மருத்தவமனையில் சேர்த்து சிகிச்சையளிக்க, அவரது குடும்பத்தினர் விரும்பினர்.ஷெரீப்பக்கு, லாகூர் உயர் நீதிமன்றம், நான்கு வாரம் ஜாமின் வழங்கியதையடுத்து, கடந்த நவ., 19ல் அவர், லண்டன் சென்றார்.


latest tamil news



பஞ்சாப் மாகாண அரசு, எதுவும் தெரிவிக்காததால், அவரது ஜாமினை, லாகூர் உயர் நீதிமன்றம் நீட்டித்து வந்தது. இந்நிலையில், நவாஸ் ஷெரீப்பின் ஜாமினை நீட்டிக்க வேண்டாம் என, பஞ்சாப் மாகாண அரசு முடிவு செய்துள்ளது.


latest tamil news



இது பற்றி பஞ்சாப் மாகாண சட்ட அமைச்சர் ராஜா பஷாரத் கூறுகையில், 'லண்டனில், நவாஸ் ஷெரீப் சிகிச்சை பெறுவதற்கான எந்த ஆதாரத்தையும், அவரது குடும்பத்தினர் வழங்கவில்லை. அவர், மருத்தவமனையில் சேர்க்கப்பட்டுள்ளாரா என்பது கூட, உறுதி செய்யப்படவில்லை. அதனால், அவரது ஜாமினை நீட்டிக்க வேண்டாம் என, முடிவு செய்யப்பட்டுள்ளது' என்றார்.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
26-பிப்-202005:52:06 IST Report Abuse
ஆப்பு அவிங்க நாட்டுல என்ன ஸ்பெஷலா? இங்கே சட்ட மேதைகள் வகுத்த ஓட்டை ஒடைசல் சட்டங்கள்தான் அங்கேயும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X