'21ம் நூற்றாண்டின் சவால்களை சந்திக்க ஐ.நா., பாதுகாப்பு கவுன்சிலை சீரமைக்கணும்'

Updated : பிப் 26, 2020 | Added : பிப் 26, 2020 | கருத்துகள் (2)
Share
Advertisement

நியூயார்க் : ' நடப்பு நுாற்றாண்டில் ஏற்படும் சவால்களை சந்திக்க ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலை சீரமைக்க வேண்டியது அவசியம்' என இந்தியா தெரிவித்துள்ளது.



latest tamil news



ஐ.நா.சபை எனப்படும் ஐக்கிய நாடுகள் சபையில் 75 ஆண்டு விழாவை அறிவிப்பது குறித்து அமெரிக்காவின் நியூயார்க்கில் உள்ள ஐ.நா. தலைமையகத்தில ஆலோசனைக் கூட்டம்நடந்தது. இதில் ஐ.நா.வுக்கான இந்தியாவின் நிரந்தர துணை துாதர் நாகராஜ் நாயுடு பேசியதாவது: உலகம் இன்று பலவிதமான சவால்களை எதிர்கொண்டு வருகிறது. ஐ.நா. துவக்கப்பட்டு 75 ஆண்டுகள் நிறைவு பெற உள்ளது. இந்த ஆண்டில் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலை சீரமைப்பது குறித்த முக்கியமான முடிவை நாம் எடுக்க வேண்டும்.


latest tamil news



21ம் நுாற்றாண்டில் உலகம் எதிர்கொள்ளும் சவால்களை சந்திக்க பாதுகாப்பு கவுன்சிலைசீரமைக்க வேண்டியது அவசியம். அப்போது தான் மாறி வரும் உலக சூழ்நிலைக்கேற்ப ஐ.நா. வால் திறம்பட செயல்பட முடியும். இதற்கு அடுத்து அமைப்பு சாரா தொழில்களில் உள்ளவருமானத்தில் ஆண்களுக்கும் பெண்களுக்கும் பாரபட்சம் உள்ளதை நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.


latest tamil news




பாக். வழக்கம்போல் புலம்பல்


ஐரோப்பிய நாடான சுவிட்சர்லாந்தின் ஜெனிவா நகரில் 43வது மனித உரிமை கவன்சில் கூட்டம் கடந்த 24ம் தேதி துவங்கியது. மார்ச் 20ம் தேதி வரை நடக்கிறது. இதில் பாகிஸ்தான் மனித உரிமை கமிஷன் அமைச்சர் ஷிரீன் மஜ்ரி பேசியதாவது: காஷ்மீரில் இந்தியா தொடர்ந்து மனித உரிமைகளை மீறி வருகிறது. அங்கு காவலில் வைக்கப்பட்டுள்ள அரசியல் தலைவர்கள் அனைவரையும் உடனடியாக விடுதலை செய்ய இந்தியாவுக்கு உத்தரவிட வேண்டும். காஷ்மீர் விவகாரத்தில் உலக நாடுகள் அமைதி காக்கின்றன. காஷ்மீரில் நியாயமாக நடந்து கொள்ள இந்தியாவிடம் மனித உரிமை கவுன்சில் வலியுறுத்த வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.


Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Milirvan - AKL,நியூ சிலாந்து
27-பிப்-202007:23:47 IST Report Abuse
Milirvan பலூச்சி மக்களை பக்கி'ஸ்தான் கொடுமைப்படுத்தி வதைக்கிறது.. பலூச்சிஸ்தானின் நிலவளங்களை அநியாயமாக கொள்ளையடித்து அம்மக்களை கொன்று குவிக்கிறது.. ஐ நா இதில் உடனடியாக தலையிட்டு பக்கி தேசத்தை நியாயமாக நடந்து கொள்ள வலியுறுத்த வேண்டும்..
Rate this:
Share this comment
Cancel
blocked user - blocked,மயோட்
26-பிப்-202007:08:49 IST Report Abuse
blocked user ஆஜாத் காஷ்மீரில் இருந்து பாக்கிகள் வெளியேற வேண்டும்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X