'நிர்பயா' குற்றவாளிகளுக்கு தண்டனை நிறைவேறுமா?

Updated : பிப் 26, 2020 | Added : பிப் 26, 2020 | கருத்துகள் (22)
Share
Advertisement
NirbhayaCase,SC,hang,Delhi_gang_rape,SupremeCourt,death_penalty,Nirbhaya,நிர்பயா,தூக்கு,டில்லி,சுப்ரீம்கோர்ட்,உச்சநீதிமன்றம்

புதுடில்லி: 'நிர்பயா' பாலியல் பாலத்கார வழக்கின் குற்றவாளிகளுக்கு துாக்கு தண்டனையை நிறைவேற்றுவதை நிறுத்தி வைத்து, டில்லி உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பை எதிர்த்து, மத்திய அரசு தாக்கல் செய்த மனுவை, உச்ச நீதிமன்றம், மார்ச், 5ல் விசாரிக்கவுள்ளது.

டில்லியைச் சேர்ந்த மருத்துவ மாணவி நிர்பயா, 2012ல், ஒரு கும்பலால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, சித்ரவதைக்கு ஆளானார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த வழக்கில், முகேஷ் குமார் சிங், 32, பவன் குப்தா, 25, வினய் குமார் சர்மா, 26, அக் ஷய் குமார், 31, ஆகியோருக்குதுாக்கு தண்டனை விதிக்கப்பட்டது.

டில்லி திஹார் சிறையில், இவர்களுக்கு துாக்கு தண்டனையை நிறைவேற்ற, இரண்டு முறை, 'வாரன்ட்' பிறப்பிக்கப்பட்டும், சட்ட சிக்கல்களால் நிறைவேற்ற முடியவில்லை. கருணை மனு, மறு சீராய்வு மனு என, நான்கு பேரும் மாறி மாறி மனு தாக்கல் செய்வதால், இவர்களுக்கான தண்டனையை நிறைவேற்றுவது தாமதமாகி வருகிறது.


latest tamil newsஇதற்கிடையே, 'குற்றவாளிகள் நான்கு பேருக்கும், தனித்தனியாக தண்டனையை நிறைவேற்றக் கூடாது; ஒரே நேரத்தில் தான் நிறைவேற்ற வேண்டும். 'சட்ட சிக்கல் தீரும் வரை தண்டனையை நிறுத்தி வைக்க வேண்டும்' என, டில்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதை எதிர்த்து, மத்திய அரசு சார்பில், உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனு, நேற்று பரிசீலனைக்கு வந்தபோது, வழக்கை, மார்ச்., 5ல், விசாரிக்கவுள்ளதாக, நீதிபதிகள், ஆர்.பானுமதி, அசோக் பூஷன், நவீன் சின்ஹா ஆகியோர் அடங்கிய அமர்வு, நேற்று உத்தரவிட்டது. இந்நிலையில், குற்றவாளிகளுக்கான தண்டனையை, மார்ச்., 3ல் நிறைவேற்ற, டில்லி சிறப்பு நிதிமன்றம், புதிய, 'வாரன்ட்' பிறப்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement
வாசகர் கருத்து (22)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Subburamu Krishnaswamy - Coimbatore,இந்தியா
26-பிப்-202015:57:14 IST Report Abuse
Subburamu Krishnaswamy Supreme court and high courts are doing comedy in hard core criminal cases. It seems the don't have clarity on Indian criminal codes. Three time death warrants are issued, still they are in dilemma to ute the death penalty. Do we have really well defined laws to deal with the criminals? Whether our judges are really interested in delivering the justice to the affected innocent people? Already common man has no respect for judiciary. The judges are very well aware of bails, anticipatory bails, adjournments, benefit of doubt goes to the accused and meditations etc.
Rate this:
Cancel
Chidam - 325,இந்தியா
26-பிப்-202012:45:46 IST Report Abuse
Chidam நீதி, நீதிமன்றம், நீதிபதியையெல்லாம் மதிக்கனும், இப்படி இருந்த என்ன ... மதிக்கணும்
Rate this:
Subramaniam Poopal - Bonn,ஜெர்மனி
26-பிப்-202014:44:48 IST Report Abuse
Subramaniam Poopalஇந்திய ஜன நாயகம் அயோக்கியர்களால் பாதுகாக்க இந்திய நீதி துறையை குற்றவாளிகளாலும் ஊழல் வாதிகளாலும் நிர்வகிக்க பொதுமக்கள் தேர்ந்து எடுத்தவர்கள் எது செய்தாலும் கண்டு கொள்ளாது இருப்பதே இந்திய வாழ்கை முறை...
Rate this:
Cancel
Ashanmugam - kuppamma,இந்தியா
26-பிப்-202012:35:04 IST Report Abuse
Ashanmugam பழம் கஞ்சி சூடு ஆறிவிட்டது. இனி நான்கு தூக்கு தண்டனை கைதிகளின் தலை தப்பியது. இறுதியாக, கருணை மனுவை நிராகரித்த இந்திய மாண்புமிகு ஜனாதிபதி அவர்களுக்கும், உச்ச நீதிமன்றம் அமர்வு குழு நீதிபதிகள் முகத்தில் தீடீரென உச்ச நீதிமன்றம் " கரியை" பூசி விட்டது. இந்த தூக்கு தண்டனை இந்திய வரலாற்றில் கோர்ட் வாய்தாவை போல மூன்று முறைக்கு மேல் தள்ளி போடும் நிகழ்வு, உலகில் வேறெங்கும் காணமுடியாத அளவிற்கு நம் நாட்டின் நீதி மன்றம் " கையாலாகாத" நீதி மன்றம் என நிருபித்து விட்டது. இனி மக்களுக்கு நீதி மன்றத்தின் மீதும், ஜனாதிபதி அவர்களின் இறுதி தீர்ப்பு மீதும் உண்டான நம்பிக்கை போய்விட்டது. நம் நாட்டு உச்ச நீதி மன்ற பெயரை இனி " தொடை நடுங்கி உச்ச நீதிமன்றம்" என பெயர் சூட்டிடலாம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X