துப்பாக்கி குண்டு பாய்ந்ததால் தான் போலீஸ் பலி| Dinamalar

'துப்பாக்கி குண்டு பாய்ந்ததால் தான் போலீஸ் பலி'

Updated : பிப் 26, 2020 | Added : பிப் 26, 2020 | கருத்துகள் (55)
Share
Delhi,Cop,CAA_Clashes,Shot_Dead, Autopsy_Reveals,டில்லி,வன்முறை,போலீஸ்,பலி,

புதுடில்லி: டில்லி வன்முறையில், துப்பாக்கி குண்டு பாய்ந்ததால் தான் போலீஸ்காரர் பலி ஆனதாக பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டில்லியில் நேற்று முன்தினம் நடந்த வன்முறையில், ரத்தன் லால், 42, என்ற போலீஸ்காரர் உயிரிழந்தார். அவர், கல்வீச்சில் காயமடைந்து இறந்ததாக, முதல் கட்ட தகவல்கள் தெரிவித்தன. ஆனால், நேற்று வெளியான பிரேத பரிசோதனை அறிக்கையில், ரத்தன் லாலில் இடது தோளில்குண்டு பாய்ந்திருந்தது உறுதி செய்யப்பட்டது.


latest tamil news



வன்முறையாளர்கள் துப்பாக்கியால் சுட்டதால், அவர் உயிரிழந்ததாக, அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. ரத்தன் லாலின் இறுதிச் சடங்கு, டில்லியில் நேற்று நடந்தது. போலீஸ் உயர் அதிகாரிகள், அவரது உடலுக்கு மலர் வளையம் வைத்து, மரியாதை செலுத்தினர்.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X